தங்கத்தின் விலை ஏற்றம்!!
இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வந்த காரணமாக பல இடங்களில் பொருளாதாரம் வேலை வாய்ப்பு உணவு இவைகள் மக்களை பெரிதும் பாதித்து உள்ளது இன்னொரு பக்கம் தங்கத்தின் விலை நாளுக்கு நாள்,கூடி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால், உலக நாடுகளில் பொருளாதாரம் ஏற்கனவே மோசமான நிலையை எட்டியுள்ளது.
உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9% என்ற அளவிலேயே இருக்கும் என்று ஐ எம் எஃப் மதிப்பிட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைக்கிறது அது என்னவென்றால் தங்கத்தின் விலை தான்.உலக அளவில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்க விலை உயர்வு இந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் கொரொனா வைரஸ் உலகில் தொடர்ந்து பரவி வருகிறது. பல வர்த்தகத்தில் நிலைமை மோசமாக உள்ளது.
தங்கத்தின் விலை மட்டும் இப்படி உயர்ந்தது எதனால்?
பொது மக்கள் லாபத்தைத் எதிர்பார்த்து ஓடுகிறார்கள்.உலகப் பொருளாதாரம் மோசமான சூழ்நிலையில் இருக்கும்போது, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை நோக்கிச் செல்கிறது.தங்கத்தால் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அதன் மதிப்பு குறையாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்தே வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மட்டுமே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறமுடியாது. முன்னதாக, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரும் இந்த நிச்சயமற்ற தன்மையை அதிகரித்து தங்கத்தின் விலை உயரக் காரணமாக இருந்தது. கொரோனா வைரஸ் அதன் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் மக்கள் வேலை இழந்ததால், பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது. முன்னதாக, வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டது, ஆனால் இப்போது அதில் 10 சதவீத சரிவு கணிக்கப்படுகிறது.
மக்களிடம் பணம் இல்லாததால் செலவு செய்யப் பணம் இல்லை, கடைகள்-உணவகங்கள், விமான நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டுள்ளன வேலை இல்லாதவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த கஷ்டபடுகிறார்கள். இதனால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இது கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை.
கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது, இதன் காரணமாக அவர்கள் செலவு செய்ய பயப்படுகிறார்கள் அவர்கள் சேமிப்பை விரும்புகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பும், தங்கம் மிக மதிப்பு மிக்கதாகவே கருதப்பட்டது, ஏனெனில் தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாமல் அதிகரிக்கிறது என்று நம்பப்பட்டது. ஆனால் அதன் மதிப்பு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தே வருகிறது.
சிலர் தங்கத்தை வங்கி லாக்கர்களிலோ அல்லது வீட்டின் அலமாரிகளிலோ வைத்து உள்ளார்கள் அந்த தங்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படவில்லை.லாக்கரில் அல்லது அலுமாரியில் கிடக்கும் தங்கம் பயன்படுத்தப்படாத பணம் போன்றது. அமெரிக்கா டாலருக்கு நிகரான பெறுமதியும் சில நாடுகளில் வீழ்ச்சி கண்டு வருகிறது…
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
Wall image source:https://www.thehansindia.com/business/gold-and-silver-rate-slips-in-bangalore-hyderabad-kerala-vizag-today–1-april-2020-615070