Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
குழந்தை

குழந்தைக்கு எது நல்லது எது கெட்டது?

  • July 20, 2021
  • 176 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு ஒரு புதிர். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் பசிக்கு அழுகிறதா… தூக்கத்துக்கு அழுகிறதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போகின்றனர். 

அம்மா, பாட்டி, அத்தை… போன்றோர் நிறைந்திருந்த கூட்டுக் குடும்பம் மறைந்து போனதன் விளைவுதான் இதற்குக் காரணம். பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே கடத்தப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.பழனிச்சாமியிடம் கேட்டோம்.

பால் புகட்டுதல்

Breastfeeding during the COVID-19 pandemic | UNICEF East Asia and Pacific
image source

குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, பால் அருந்தும் நேரம், தூங்கும் நேரம் என ‘ரிதம் செட்’ ஆகிவிடும். எனவே இரவில் பசிக்கு அழுதால் மட்டும் பால் புகட்டினால் போதும். குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். தனியாக தண்ணீர் தர வேண்டியது இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு பால் அருந்தியதும் சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்கச் செய்யலாம்.

அவ்வப்போது, குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு அந்தந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். வளர்ச்சி குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.

வாய் பராமரிப்பு

5 Infant Oral Care Tips for Healthy Baby Teeth
image source

பச்சிளம் குழந்தைதானே என்று பெற்றோர்கள் குழந்தையின் வாய் பராமரிப்பைப் புறக்கணிக்கிறார்கள். பல் முளைக்காதபோதும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தைக்குப் பால் புகட்டியதும் மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தையின் ஈறுகளையும், வாயை துடைக்க வேண்டும். ஃபுளோரைட் குழந்தைக்கு மிக அவசியமான தாது உப்பு. அது நீரில் போதுமான அளவு இருக்கிறது.

தூக்கம்

Good sleep habits start at birth - Ottawa Parenting Times Magazine
image source

இரவில் தூக்கம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குழந்தையின் தூக்கப் பழக்கத்தை மாற்றுகிறேன் என்று சில தாய்மார்கள், பகலில் நீண்ட நேரம் குழந்தையை விழித்திருக்க முயற்சிப்பார்கள். குறைந்தது, ஓராண்டு வரையில் இந்தப் பழக்கத்தை முயற்சிக்காதீர்கள். அதிகச் சோர்வும்கூட, குழந்தையின் தூக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். குழந்தை எப்போதெல்லாம் தூங்க விரும்புகிறதோ அப்போது அதைத் தூங்க வைத்துவிடுங்கள்.

பேச அனுமதியுங்கள்

Why do children speak? – Change for Life
image source

குழந்தைகள் வார்த்தைகளை பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே மொழியைக் கண்டறியவும், கற்கவும் முயற்சிக்கின்றன. அதனால் பெற்றோர்கள் பொருளற்ற ஓசைகளை எழுப்புவதைக் காட்டிலும் குழந்தைகளிடம் பேச வேண்டும். ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல அந்த வார்த்தைகளைப் பேச குழந்தை முயற்சிக்கும். நாம் பேசும்போது நம்முடைய வாய் அசைவு, முக அசைவுகளை குழந்தை உற்றுநோக்கும்.

இதன்மூலம் குழந்தையின் மொழி திறன் மேம்படும். எனவே, குழந்தைக்குப் புரியவில்லை என்றாலும் கூடத் தொடர்ந்து பேசுங்கள். குழந்தையின் கண்ணைப் பார்த்துப் பேசுவதும், அதன் கவனத்தை ஈர்த்து, பேசத்தொடங்கும்.

உறவுகளுடன் உறவாட விடுங்கள்

Ask these questions before deciding on your child's school
image source

வேற்று முகம் அறியாதாது மழலை. யார் கூப்பிட்டாலும், சிரித்தபடியே ஓடிவரும். ஆனால், வளர வளர, பெற்றோரைத் தவிர, வேறு யாரிடமும் ஒட்டாது. குழந்தைக்கு, சமூகத்துடனான உறவாடல் இல்லாமல் இருப்பது நல்லது அல்ல. இதனைத் தவிர்க்க, அக்கம்பக்கத்தினரிடம் பழக விடுங்கள். நிறையக் குழந்தைகளைப் பார்த்ததும் குழந்தை துள்ளிக் குதிப்பதைப் பார்க்க முடியும். பாட்டி, அத்தை, சித்தி என்று வாரம் அல்லது மாதம் ஒரு முறை உறவினர்களிடம் கொண்டு விடுங்கள். உறவுகளின் உன்னதத்தை உணர்ந்து, குழந்தை பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்.

குழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்..!

இது போன்ற வேறு கட்டுரைகளுக்கு எமது உளச்சுகாதரம் பகுதியை நாடுங்கள்.

wall image

தகவல் உதவி : குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.பழனிச்சாமி

Post Views: 176
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஆடி

இன்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்..!

  • July 20, 2021
View Post
Next Article
ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் போது நாம் அனைவரும் செய்யும் தவறுகள்..!

  • July 21, 2021
View Post
You May Also Like
இந்த 8 உடல்மொழி தந்திரங்கள் மற்றவர்களின் மனதை படிக்க உதவும்
View Post

இந்த 8 உடல்மொழி தந்திரங்கள் மற்றவர்களின் மனதை படிக்க உதவும்

மனச்சோர்வு
View Post

குழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்..!

''புறக்கணிப்பது'' உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 5 வழிகள்
View Post

”புறக்கணிப்பது” உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 5 வழிகள்

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? - 2
View Post

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? – 2

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? - 1
View Post

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? – 1

மனஅழுத்தம்
View Post

மனஅழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பது எப்படி?

கோபம்
View Post

கோபம் மற்றும் மன அழுத்தம் ஆகியன விலக உதவிக் குறிப்புகள்

எளிமை
View Post

எளிமையான வாழ்க்கையின் சிறப்பைக் கூறும் சில குறிப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.