நாம் தூங்கும் பொழுது நமது உடல் உறுப்புகள் எல்லாம் ஒய்வு எடுக்கும் மீண்டும் புத்துணர்வு பெறும்!!
நாம் தூங்கும் போது உடல் உணர்வுக்கும் மனசுக்கும் என்ன ஆகும்? என்று எப்பொழுது சரி யோசித்து பார்த்து உள்ளீர்களா நாம் தூங்கும் பொழுது நமது உடல் உறுப்புகள் எல்லாம் ஒய்வு எடுக்கும் மீண்டும் புத்துணர்வு பெறும் என்று பலபேர் சொல்கின்றனர். அது உண்மையாக இருந்தாலும் கூட அது மட்டும் தான் நடக்குது என்று சொல்ல முடியாது. சிலர் தூக்கத்தில் குறட்டை விடுவதை பற்றி யோசிப்பார்கள் நாம் தூங்கும் பொழுது இது மட்டும் தான் நடக்குது என்று சொல்ல முடியாது தூங்காமல் இருக்கும் பொழுதும் தூங்கும் பொழுதும் என்ன நடக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் அந்த கேள்விக்கான பதிலை தான் நாம் இங்கு பார்க்க போகின்றோம்.
FEELING LIKE FALLING DOWN
முதலில் கீழே விழுகின்ற போன்ற உணர்வு. தூக்கம் வரும்போது தூங்காமல் இருந்தால் கீழே விழுவது போல் ஒரு உணர்வு ஏற்பட்டு அது எங்களை தூங்க விடாமல் செய்யும் நீங்கள் நினைப்பது போல் அது கனவு இல்லை அது மாய தோற்றத்தோடு சேர்ந்த உடல் உணர்ச்சி தான். அதாவது தவறான கருத்துக்கு நம்முடைய மூளையின் எதிர்வினை தான் அது. இப்படி தோன்றுவதற்கு காரணம் நம் உடல் தூங்காமலும் மூளை தூங்குவதால் தான் எப்போதுமே இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ரொம்ப சோர்வாக அல்லது மன அழுத்தத்தோடு இருந்தாலும் அல்லது இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக தூங்காமல் இருப்பதாலோ இது மாதிரி உணர்வுகள் ஏற்படும்.
இந்த சந்தர்பத்தில் உடல் தூங்குற வரைக்கும் மூளை வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காது. அது படுத்தவுடன் தூங்கிவிடும் சோர்வாக தலைவலிக்கான அறிகுறிகள் உண்டாகும் ஒரு பயங்கர சத்தத்தை கேட்டு எழுந்திருக்கும் போது பேச முடியாமல் திக்குவோம் இந்த சமயத்தில் நல்ல தூங்குவதை புரிந்து கொள்ளனும்.
SLEEP PARALYSIS
குறிப்பிட்ட உயரத்தில் இருந்து விழுவதை விட கொஞ்சம் பயமுறுத்தும் விடயம் இது இந்த சந்தர்ப்பத்தை கற்பனை செய்து பாருங்கள் எழுந்து கழிவறைக்கு போகணும் அல்லது சமையல் அறையில் போய் தண்ணீர் குடிக்கணும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அப்போது தான் நகர முடியவில்லை என்று உணர்கிறீர்கள்.
நான் முழித்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் எழுந்து போக முடியவில்லை இது எப்படி சாத்தியமாகும்? சுற்றி நடப்பதை பார்க்க முடியும் கேட்க முடியும் வாசனையை நுகர முடிகிறது ஆனால் எழுந்து போக முடியவில்லை அப்போதே ஏதோ நம் மேல் ஏறி இருக்கும் மாதிரி உணர்வு ஏற்படும் தூங்கும் போதும் எழுந்திருக்கும் போதும் இந்த மாதிரியான பயங்கரமான உணர்வு ஏற்படும் இந்த சமயத்தில் உடல் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது மனசு தூங்காமல் இருந்தால் இந்த உணர்வு ஏற்படும் 5லிருந்து 8 சதவீத பேருக்கு இந்த உணர்வு நிச்சயம் வாழ்கையில் ஒரு முறையாவது ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மை காரணத்தால் தான் இது மாதிரி ஏற்படுதாம்.
SOMNAMBULISM
தூக்கத்தில் நடப்பது SLEEP PARALYSIS விட இது மிக மோசமானது ஏன் என்று பார்த்தால் SLEEP PARALYSIS அந்த இடத்திலேயே நடக்கக் கூடியது ஆனால் SOMNAMBULISM இல் தூக்கத்திலேயே எழும்பி நடப்போம்.
ஜன்னலில் இருந்து எட்டி குதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதே போல காரை ஓட்டிக் கொண்டு போகும் போது நடக்க வாய்ப்புண்டு அதனால் தான் ரொம்ப ஆபத்தானது என்று கருதப்படுகிறது. தூக்கத்தின் இது மாதிரியான செயல்கள் நிறைய செய்ய வாய்ப்பிருக்கிறது ஆனால் தூங்கி எழுந்த பிறகு இது எதுவுமே நினைவுக்கு வராதாம். இப்படி தூக்கத்தில் எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது உடல் ஆக்டிவேட் ஆகும் ஆனால் மூளை தூங்கிக் கொண்டே தான் இருக்கும் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் சில நிமிடங்களில் இருந்து ஒரு மனி நேரம் வரை இருக்கும். தூக்கத்தில் நடக்கும் பழக்கம் யாருக்காவது இருந்தால் அவர்களை உடனே தொந்தரவு பண்ணாதீங்க அது அவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தை கொடுக்கும்.
SOMNILOQUY
ஒரு விதத்தில் பார்க்கும் போது இதுவும் தூக்கத்தில் நடப்பது போல் ஒரு வியாதி தான் ஆனால் தூக்கத்தில் பேசுவது நிறைய விஷயங்கள் அவர்கள் மனதில் பேச முடியாமல் வைத்திருக்கும் கதையை பேசுவார்கள் அதாவது பாட்டிலிருந்து அவர்கள் அவமானப்பட்டது வரை எது ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும் அதைப் பற்றி பேசுவார்கள் அப்படி பேசுபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்களை எழுப்பி தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் இந்த மாதிரி நிகழ்வு அவர்கள் தூங்க ஆரம்பித்தவுடன் இரண்டு மணி நேரத்தில் நிகழும் அப்படி பேசுபவர்களிடம் அதை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள முடியாது அதுக்கு காரணம் 30 வினாடிகளுக்கு அது மாதிரி பேசுவார்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள்.
RECURRING DREAMS
வந்த கனவே திரும்பி திரும்பி வரும் அது மறக்க முடியாததாக இருக்கும் ஏனென்றால் நல்ல கலர்ஃபுல்லா எமோஷனலாக இருக்கும். எதனால் இது மாதிரி நிகழ்கிறது ஏன் நமது மூளை நாம் தூங்கும் பொழுது வேறு நினைவுகளை கொடுக்காமல் இருக்கிறது. வேற மாதிரி கனவுகள் வராதா என்று பல கேள்விகள் இருக்கு இந்த மாதிரி திரும்பத் திரும்ப வருகிற கனவுகள் நம்மளை ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லும் நினைவு கூற செய்து எச்சரிக்கை செய்கின்றது என்று அர்த்தம். முடிக்காமல் பாதியில் இருக்கும் ஒரு விஷயத்தை நம்மளை முடிக்க செய்ய தான் இந்த கனவுகள் ஏற்படுகிறது இனிமேல் தூங்க போகும் பொழுது வேறு எதையாவது ஒரு விடயத்தை பிரச்சனை சம்பந்தம் பற்றி யோசித்தால் அது சம்பந்தமான கனவுகள் வரலாம் அதற்கு தீர்வும் கூட கிடைக்கலாம் இனிமேல் இப்படி செய்து பாருங்களேன்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்
image source:https://australiascience.tv/four-ways-sleep-deprivation-affects-your-brain-and-your-body/