குழந்தைகளுக்கு ஒருவயதிற்கு முன்னர் மொட்டை அடிப்பதன் காரணம் என்னவாக இருக்கும்!!
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள். தமிழரின் கலாச்சாரம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சாரம் என்பது உலகறிந்த உண்மை. நமக்காக நம் முன்னோர் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை என்பது சாதாரணமாக ஏனோ தானோ என வகுக்கப்பட்டதல்ல. பல்வேறு ஆராய்ச்சிகளின் பின்னரே அதனை வகுத்து உள்ளனர்.
அப்படியான வாழ்க்கையை நம் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் மக்களை இறைவன் முன் நிறுத்தி இப்படியான சம்பிரதாயங்களை செய்ய தூண்டி உள்ளார்கள். அதில் ஒன்றுதான் குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் நாம் மொட்டை அடிப்பது. இது வழக்கமான இந்துக்களின் ஒரு திருவிழாவாகும்.
பெரும்பாலான மக்கள் இதனை குலதெயவத்திற்காக செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும் குடும்ப வழக்கம் என்றும் நினைந்து செய்கிறார்கள். ஆனால் இப்படி மொட்டை அடிப்பதற்கு பின்னல் ஒரு மிகப்பெரும் அறிவியல் உண்மை ஒழிந்திருக்கிறது. அது என்னவென்று தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.
ஒரு குழந்தை தன் தாயின் கருவைக்குள் இருக்கும் போது அதை ஒரு விதமான திரவம் சூழ்ந்து கொண்டு இருக்கும். அதை தான் நாம் பனிக்குடம் என்கிறோம். ஒரு கருவானது சில மாதங்களுக்கும் பின்னர் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கிறது. அந்த சீறுநீர் ஆனது பனிக்குடத்தில் உள்ள நீருடன் கலந்து விடுகிறது.
இப்படி பட்ட ஒரு திரவத்தில் தான் குழந்தை பத்து மாதங்கள் தாயின் கருவில் ஊறி இருக்கும். அந்த குழந்தை இந்த பூமியில் பிறந்த உடன் துடைத்து நீக்கி அதன் உடலை நன்றாக துடைத்து சுத்தம் செய்து அதனை நீக்கி விடுவோம். ஒரு வேளை குழந்தை அந்நீரை குடித்து இருந்தால் அதன் உடல் தானாகவே அதை அந்த திரவத்தை வெளியேற்றிவிடும்.
இதில் சிக்கல் என்னவென்றால் குழந்தையின் தலையானது பத்து மாதங்கள் அந்த திரவத்தில் ஊறி இருக்கும் அது அவ்வளவு எளிதாக வெளியில் வர வாய்ப்பில்லை. அது வெளியில் வர ஒரே வழி மயிர் கால்கள் மட்டுமே அதற்காக தான் குழந்தை பிறந்து சில மாதங்களில் மொட்டை அடிக்க சொல்லி நம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.
இவ்வாறு மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர் கால்களின் ஊடாக தலையில் இருந்து எளிதில் வெளியாகி விடும் ஒரு வேளை மொட்டை
அடிக்கா விட்டால் அந்த கழிவுகள் தலையிலேயே தங்கிவிடும்.
இது பிற்காலத்தில் தலைவலி , ஒற்றை தலைவலி மற்றும் தலை சம்மந்தப்பட்ட வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.
ஒரு சில பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு பிள்ளை பிறந்து ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பதும் உண்டு. ஒரு சிலர் குழந்தைகளுக்கு முடி வளர வளர மூன்று முறை மொட்டை அடிப்பார்கள். அதற்க்கான காரணம் முதல் மொட்டையில் ஒரு சில கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் அடுத்தடுத்து அடிக்கும் மொட்டையில் அது வெளியேறி விடும் என்பதற்காகத் தான். வாசகர்களே நீங்கள் குழந்தை பிறந்து முதல் மொட்டை அடிக்கும் போது சில விடயங்களை பின் பற்ற வேண்டும். அதாவது குழந்தை பிறந்து முப்பதாம் நாள் எப்பொழுது வரும் என்று நேரம், நல்ல நாள் என்பவற்றை நீங்கள் ஒரு ஜோசியரை வைத்து கணித்து அந்த நாளை குறித்து கொள்ளவும். சிலர் 30ம் நாள் சிலர் 31ம் நாள் பூஜை செய்வது உண்டு. ஒரு சிலர் அவர்கள் குல வழக்க படி செய்வார்கள்.
குழந்தைக்கு முதன் முதல் மொட்டை அடிக்கும் பொழுது கொஞ்சம் பால் அதில் கொஞ்சம் அருகம்புல் சேர்த்து தலையில் வைத்து அதன் பின் மொட்டை அடிப்பது சுபம். பெண் குழந்தையோ அல்லது ஆண் குழந்தையோ தாய்மாமன் மடியில் வைத்து கொண்டால் மேலும் சிறப்பு. தாய் மாமன் இல்லாதோர் அப்பாவின் மடியில் குழந்தையை வைத்து கொண்டு மொட்டை அடிக்கலாம்.
ஒரு சிலர் வீட்டில் வைத்து மொட்டை அடிப்பார்கள் ஒரு சிலர் கோவிலுக்கு சென்று மொட்டை அடிப்பது உண்டு . பின் அங்கு இருக்கும் கடலில் அல்லது ஆற்றில் மொட்டை அடித்த முடியை போட்டு விடுவார்கள். வீட்டில் மொட்டை அடிப்பது என்றால் மொட்டை அடித்து விட்டு குழந்தைக்கு தலையில் சந்தனம் பூசி விடவும் பின் கோயிலுக்கு சென்று குழந்தையின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் அர்ச்சனை செய்து விட்டு பின் குழந்தையின் முடியை கடலில் போட முன் ஒரு வெற்றிலையில் சூடம் ஏற்றி கடலில் முடியுடன் அனுப்பி விட வேண்டும்.
மொட்டை அடிக்க முன் குழந்தை நன்கு உணவளிக்கப்பட்டு ஓய்வெடுக்க வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் பொதுவாக வெறித்தனமான அல்லது அமைதியற்றவர்களாக இருப்பார்கள்.
மேலும் சிறிய தவறான நடவடிக்கை கூட அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தக்கூடும்.மொட்டை அடித்த பிறகு குழந்தைக்கு ஒரு நல்ல சூடான குளியல் கொடுப்பது நல்லது. பல முறை, சிறிய முடிகள் கண்களில் அல்லது காதில் மாட்டிக்கொள்ளலாம். அல்லது தலையில் பின்புறம் விடப்படலாம். அவை அகற்றப்படாவிட்டால், அவை குழந்தையின் கண்கள், மூக்கு மற்றும் வாயில் நுழையலாம் மேலும், ஒரு குளியல் தலையில் குடியேறியிருக்கக் கூடிய எந்தவொரு அழுக்கையும் கழுவும், முடி திருத்தும் நிபுணர் குழந்தைகளுடன் பணிபுரிந்த அனுபவமுள்ள ஒரு தொழில்முறை நிபுணராக இருக்க வேண்டும். மேலும், உங்கள் பிள்ளை எந்த நோய்த் தொற்றுகளையும் பிடிக்க விரும்பாததால் அவரது உபகரணங்கள் சுத்தமாகவும் இருக்கா என்று பரீட்சை செய்யப்பட வேண்டும்.
குழந்தைக்கு மொட்டை அடித்த பிறகு ஏற்படும் மாற்றங்கள்
- இது குழந்தையின் உடலையும் தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது, குறிப்பாக கோடையில்.
- இது குழந்தையின் ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்துகிறது.
- குழந்தைகள் பல் துலக்கும்போது, அவர்கள் தலைவலியால் பாதிக்கப்படுவார்கள். சவரன் சடங்கு இந்த வலியைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது..
- ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கும் போது முடி வளர்ச்சி மேம்படும் என்று நம்பப்படுகிறது.
- இது குழந்தைக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
- இது கடந்த கால வாழ்க்கை கர்மா அல்லது எதிர்மறையிலிருந்து விடுபடுகிறது.
ஆகையால் வாசகர்களே உங்கள் குழந்தை ஒரு வயதை கடந்தும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்காமல் இது நேர்த்திக்கடனுக்காக தானே என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை உடனே மாற்றிக்கொண்டு அதில் ஒளிந்திருக்கும் அறிவியலை புரிந்து கொண்டு உங்கள் குழந்தையில் வாழ்க்கை சிறக்க வழி வகுத்திடுங்கள்.
நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிச் சென்ற ஒவ்வொரு விடயத்தை காத்து அதனை நம் அடுத்த தலைமுறைக்கும் அதனை மறவாமல் கற்பிப்போம்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்