கோடை காலத்தில் தாகம் தனித்து நிவாரணம் தரும் தர்பூசணி
கோடை காலம் வந்துவிட்டால் வெயிலில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று பலரும் யோசித்து கொண்டு இருப்பார்கள். பலர் இளநீர், சர்பத் போன்றவற்றை குடித்து தனது தாகத்தையும் உடல் உஷ்ணத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளுவார்கள்.சிலர் எவ்வளவு தான் குளிர்பானம், இளநீர் குடித்தாலும் தாகம் தீராது. அதுக்கு எல்லாம் ஒரே நிவாரணம் தான் தர்பூசணி.
தர்பூசணி தாகத்தை தணிப்பதில் சிறந்தது காரணம் தர்பூசணியில் 92% நீர்ச்சத்தும், 3.37% நார்ச்சத்தும் இருக்கிறது.
தர்பூசணியின் மகிமைகள்
தர்பூசணி வயிற்று சூட்டை விரட்டி, வயிறு எரிச்சலையும் குறைக்கும். அடிவயிற்றில் உள்ள வேறு சில கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும்.
சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் காரணமாக சிறுநீரக கோளாறுகள் சரியாகும் தர்பூசணி சிறுநீரக பையில் கற்கள் வருவதை தடுக்கும்.
தர்பூசணியில் சிட்ரூலின் என்ற ஒரு சத்து பொருள் உள்ளது. இது ரத்த நார்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும், இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி சத்து பொருளும் உள்ளது.
சிறுநீர் வராமல் அவதி படுபவர்கள் இந்த தர்பூசணி கிடைக்கும் நேரங்களில் தினமும் சாப்பிட்டு வருவதால் சிறுநீர் வெளியேறும் போது பிரச்சனைகள் இருக்காது. சிறுநீரக கற்கள் இருந்தால் தானாகவே கரைந்து வெளியேறிவிடும்
நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருத்தவர்கள் இந்த பழத்தை எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
தர்பூசணி பழச்சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி, தொண்டை எரிவு , இல்லாமல் போகும் கண்கள் குளிர்ச்சி பெறும்.
தர்பூசணி + எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.
தர்பூசணி பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். மேலும், இதய நோய்களிலிருந்தும், புற்று நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை சீராக இயங்க செய்து இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் எலும்பைப் பாதுகாக்கும்!
நோய் எதிர்ப்பு சக்தி
தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பை தேய் மானம் வராமல் தடுக்கும் தர்பூசணியில் வைட்டமின் சி இருக்கும் காரணத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடம்பில் எங்கேயாவது காயங்கள் இருந்தால் விரைவாக குணப்படுத்தும்.
எடை குறை
இதில் நீர்தான் மிகவும் இருக்கிறது. கலோரி குறைவு. ஆகையால் இதைத் எந்த நாளும் சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை குறையும்.சருமதிற்கு மிகவும் நல்லது முகப்பரு பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்ல தீர்வு தரும்.
தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடற்சோர்வு மலச்சிக்கல் இவைகள் வருவதை தடுக்கும் அனைத்து உறுப்புகளும் நன்றாக இயங்க உதவும் இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் சிலருக்கு ஆண்மை குறைபாடு வருகிறது தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் இருக்கிறது எனவே பழத்தை சாப்பிட்டு முடித்த உடன் அதில் உள்ள வெள்ளை பகுதியையும் சாப்பிடவும்.
புற்று நோய்
நமது உடலில் பல வகையான நச்சுக்கள் இருப்பதால் புற்று நோய் ஏற்பட வாய்ய்பு உண்டு தர்பூசணி பழத்தை அதிகம் எடுத்து கொள்ளுவதால் புற்று நோய் எதிர்ப்பு சக்தி மேலும் கூடுகிறது மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உங்களுக்கு முடிந்த வரை தர்பூசணி பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் அதில் உள்ள மருத்துவ குணங்களை அனுபவியுங்கள்.
மேலும் பல ஆரோக்கியம் குறித்த தகவல்களை பெற்று கொள்ள