Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
நீர்

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது

  • May 27, 2020
  • 435 views
Total
31
Shares
31
0
0

கடந்த 25 வருட காலத்தில் சோமாலியா நாடானது பேரழிவு தரும் வறட்சியினை சந்தித்துள்ளது. 2016 முதல் 2017 க்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு மழை பெய்யவில்லை. இதனால் உருவான நீர்த்தட்டுப்பாடு பல வித்தியாசமான பிரச்சினைகள் உருவாகி இருந்தது. உதாரணமாக சொல்வதானால் உணவின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் ஏனைய நோய்த்தொற்றுகள் என்பன ஏற்பட்டிருந்தன. 2017 இல் மட்டுமே அண்ணளவாக ஒன்று தசம் இரண்டு மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினை சந்தித்ததோடு 80,000 குழந்தைகளால் பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் 120,000 குழந்தைகள் பாடசாலையினை முற்றிலுமாக நிறுத்துகின்ற முடிவில் இருந்தனர். சோமாலியாவில் ஏற்பட்டிருந்த இந்தக் குறைபாடு வறட்சி மற்றும் குடிக்கக்கூடிய பாதுகாப்பான நீர்த் தட்டுப்பாடு எவ்வளவு தூரம் சமூகத்தின் ஏனைய அங்கங்களை பாதிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது
image source : https://www.humanium.org/en/somalia/

தூய குடிநீர் பெறும் வழி

தூய குடிநீருக்கான தட்டுப்பாடு சோமாலியாவின் எல்லா பாகங்களிலும் தாக்குகின்ற ஒரு பெரிய பிரச்சனை ஆகும். ஒட்டுமொத்தமாகவே நாற்பத்தைந்து சதவீதமான சோமாலிய மக்களுக்கு மட்டுமே சற்றேனும் அபிவிருத்தியடைந்த நீர் முதல்களுக்கான வசதி இருக்கின்றது. இதனால் நீர்சார் தொற்றுநோய்கள் மற்றும் ஏனைய வகையான நீர் நோய்கள் மற்ற மக்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். குடிநீரின் உடைய தரத்தினை மேம்படுத்துவதன் மூலமாக தூய மற்றும் பாதுகாப்பான நீரை மக்களுக்கு கிடைக்கச் செய்யலாம். நீர் – தர கண்காணிப்பு, நீரை ஒழுங்காக சேமித்து வைத்தல், சரியான முறையில் நீரை வீடுகளுக்கு வழங்குதல் என்பன மாசுபடாத நீரை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் மிகவும் நுணுக்கமான காரணிகளாகும்.

பிரச்சனையை அடையாளப்படுத்தல்

இந்தப் பிரச்சினைக்கான தீர்வு நமது பார்வையிலேயே இருப்பது அதிர்ஷ்டகரமான தாகும். சர்வதேச குடிபெயர்வு பேரவை, Polyglu என அழைக்கப்படுகின்ற நீரை சுத்தப்படுத்தும் பொருளொன்றை பயன்படுத்தி இம்முறை வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்தமான நீரை பெற முயற்சி செய்கிறது.

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது
image source : https://discoverfoodtech.com/how-to-clean-water/

சோமாலியா நாட்டில் குடிநீர் பிரச்சனையால் தினமும் 8,000 பேர் இடமாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் இதைப் போன்ற ஏனைய எந்த ஒரு நாட்டுக்கும் Polyglu ஒரு சிறந்த தீர்வாக அமையும்

Polyglu

Polyglu என்பது ஒரு பொடியாகும். இது புளிக்க வைக்கப்பட்ட சோயா அவரைகளிலிருந்து பெறப்படும் ஒருவகையான உறைவிப்பான் ஆகும். இது நீரிலே காணப்படும் எந்த ஒரு அழுக்கையும் கண்ட உடனேயே அதனை ஒன்றாக இணைத்து கட்டி போல ஆக்கிவிடும். இது பாதுகாப்பானதும், இயற்கையோடு ஒன்றிப் போக கூடியதுமான சுத்தமாக்கி ஆகும். இது உணவுகளிலும் தொழிற்சாலை உற்பத்திகளிலும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது
Image source : https://geekologie.com/2012/11/cheap-magic-powder-that-makes-any-water.php

இதன் ஒரு கிராம் பொடியானது ஐந்து லிட்டர் மாசடைந்த நீரை சுத்தமாக கூடிய வல்லமை படைத்தது. இதனால் இந்தப் பொடியானது மிகவும் சேமிப்புகரமானதும் திறன் வாய்ந்ததும் ஆகும். இது வெற்றிகரமாக இந்தியா, பங்களாதேஷ், சோமாலியா மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. IOM மற்றும் மொகாடிஷு சோமாலியாவிலுள்ள சர்வதேச இடம் பெயர் நபர் முகாம்கள் என்பவற்றின் கூட்டமைப்பின் மூலமாக இந்தப் பொடியானது  நீர் சார் நோய்களை தடுப்பதற்கும் நீர் தட்டுப்பாட்டில் இருந்து மீள்வதற்கும் உதவுகிறது.

“எல்லா வகையான தட்டுப்பாடுகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் சோமாலிய சிறுவர்களுக்கு டயரியா மற்றும் ஏனைய வகையான நோய்களில் இருந்து விடுபட இது பெரிய உதவி” – மொகாடிஷு மக்கள்

முன்னோக்கி நகர்தல்

வளர்ந்து வருகின்ற நாடுகளில் நீர் தட்டுப்பாடு மற்றும் நீர்சார் நோய்கள் என்பவற்றிலிருந்து POLYGLU கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்ற இந்த நேரத்தில், அதனால் நீரில் இருக்கின்ற அழுக்குகள் அனைத்தையும் தனியாக பிரிக்க முடியுமே தவிர நீரை நூற்றுக்கு நூறு வீதம் குடிக்கும் தன்மை உடையதாக மாற்ற முடியாது என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, இவ்வாறான குறைந்த விலையில் பொருட்களை  செய்வதற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கங்கள் உதவவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

உணவுப் பிரச்சனையை தீர்த்தல்

Plumpy’Nut

நியூயார்க் எனப்படும் 60 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்டர்சன் கூப்பர் என்பவர் Plumpy’Nut தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் முன்னோட்டகரமான விடயம் என்று கூறினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகிறது.

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது
image source : https://www.pinterest.ru/pin/356839970472149973/

ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆறு நொடிகளுக்கு ஒரு குழந்தை இறப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில்,Plumpy’Nut அவர்களுடைய பசியை தீர்ப்பதற்கு மற்றும் ஊட்டச்சத்தை அளிப்பதற்கும் மிகச்சிறந்த விடயமாக இருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி எந்த ஒரு நொடியிலும் 20 மில்லியன் சிறுவர்கள் உணவில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே மற்றைய மருத்துவ உதவிகளை போல இல்லாமல் Plumpy’Nut ஒரு மிகச்சிறந்த எதிர் ஆயுதம் என குறிப்பிடுகிறது.

இந்த உற்பத்தி ஆனது பிரான்சிய குழந்தை மருத்துவர் André Briend என்பவருடைய சிந்தனையாகும். அவர் 1990களில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிராக போதிய அளவு மருத்துவ வசதிகள் இன்மை தொடர்பாக மிகவும் வருந்திக் கொண்டிருந்த மருத்துவர் குழாத்தில் ஒருவர்.

அந்தக்காலத்தில் திரவ உணவுகளை வைத்தியசாலைகளில் குழாய்கள் மூலமாக நோயாளர்களுக்கு ஏற்றுவது ஒன்றே தீர்வாக இருந்தது. ஆயினும் இந்த முப்பது வருட பழக்கமானது 20 முதல் 60 வீத நோயாளர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. பல வருடங்களுக்குப் பிறகு முயற்சிகளின் பலனாக Plumpy’Nut 1998ல் உதயமானது.

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது
Image source : https://www.un.org/en/chronicle/article/innovating-children-and-young-people

கச்சான் பட்டர், பால் பொடி, அரைக்கப்பட்ட சீனி, செறிவு ஆக்கப்பட்ட விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு பசை போன்ற கூழ்தான் இந்த Plumpy’Nut எனப்படும் எளிமையான தீர்வு. உணவு உதவி கருத்துக்கள் படி, உடனடி பாவனைக்கு உரிய மருத்துவ உணவு என்று கூறலாம். இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவோ அல்லது நீரையோ நெருப்பையும் கொண்டு அவிக்கவோ வெப்ப படுத்தவோ  தேவையில்லை. அத்தோடு இது இரண்டு ஆண்டுகால வாழ்வுக் காலத்தை கொண்டது.

இதனை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கவும் முடியும் ஊட்டவும் முடியும். இது உடலில் நீர்ச்சத்து இல்லாதவர்களுக்கு கூட தேவையான நேரத்தில் நீர்ச்சத்தை வழங்குவதற்கும் பயன்படும்.  ஆனால் இதையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்க முடியாது.

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது
image source : https://qz.com/945314/the-story-behind-plumpynut-the-nutella-for-the-poor-used-to-fight-famine-and-malnutrition/

மரணத்தின் விளிம்பில் இருந்த சிறுவர்கள் கூட இதனை பயன்படுத்துவதன் மூலமாக பழைய வாழ்க்கைக்கு வெறுமனே 4 முதல் 6 வாரங்களுக்குள் மீண்டு வந்ததாகவும் இதுவரை 95 சதவீதமான நோயாளர்கள் குணப்படுத்த பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உற்பத்தியை அதிகமாக வாங்கும் யுனிசெப் ஆனது ஒரேடியாக 2 மில்லியன் சிறுவர்களுக்கு உணவளிக்க தேவையான பக்கற்றுகளை முழுமையாக வாங்கியதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

தற்போது உலகம் முழுவதும் யுனிசெப் ஆல் அங்கீகரிக்கப்பட்ட 19  கச்சான் பட்டர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் உதவியோடு எத்தியோப்பியா சூடான் ஹைடி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பல குழந்தைகளை காப்பாற்ற முடிந்திருக்கிறது.

இது போன்ற சுவாரசியமான சுகாதார தகவல்களை அறிய இங்கே அழுத்தவும்.

Image Source : https://thekidshouldseethis.com/post/water-purifier-powder-mark-rober

Post Views: 435
Total
31
Shares
Share 31
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், இதைப் பற்றி சிந்தியுங்கள்…

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், இதைப் பற்றி சிந்தியுங்கள்…

  • May 26, 2020
View Post
Next Article
டிக் டாக்

டிக் டாக் இற்கு நடந்த 2 அதிர்ஷ்டவசமான சம்பவங்கள்.

  • May 27, 2020
View Post
You May Also Like
ஊட்டச்சத்து
View Post

ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..!

இந்த 6 ஊட்டச்சத்துமிக்க உணவுகளை இப்படி சாப்பிடாவிட்டால் பிரயோசனமில்லை
View Post

இந்த 6 ஊட்டச்சத்துமிக்க உணவுகளை இப்படி சாப்பிடாவிட்டால் பிரயோசனமில்லை

முட்டை
View Post

முட்டையின் மஞ்சள் கருவின் நன்மைகள்..!

பால் பாவனை
View Post

உணவிலிருந்து பால் பாவனையைக் குறைத்தால் நடக்கும் மாற்றங்கள்

இரும்புச்சத்து
View Post

இரும்புச்சத்து உங்கள் உடலில் இல்லாத போது வரும் அறிகுறிகள்!!

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த டாப் 10 பழங்கள்.
View Post

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த டாப் 10 பழங்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.