Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

எரிமலை உச்சியில் உடற்பயிற்சி செய்யலாம்!

  • May 8, 2020
  • 449 views
Total
3
Shares
3
0
0

இந்த மெய்நிகர் செயலி (VR App) உங்களை உலகம் முழுவதிலும் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கிறது

பொறுப்புத் துறப்பு : இந்த செயலி பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கானதல்ல. எத்தியோப்பியாவின் Erta Ale எரிமலையில் அல்லது மாச்சு பிச்சு இடிபாடுகளின் உச்சியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற சாகசங்களை நீங்கள் விரும்புபவர் இல்லையாயின் இது உங்களுக்கானது அல்ல.

தனிமைப்படுத்தலுக்காக உங்களை நீங்களே முடக்கி கொண்டுள்ள இந்த காலத்தில் வழக்கமான உடற்பயிற்சிகள் உங்கள் சுவாரஸியத்துக்கு ஏற்றபடி இல்லையா ? வழக்கமான சிமெண்ட் தரை அல்லது மாபிள்களின் மீது புஷ்-அப் செய்வது, சிட் அப் செய்வது என வழக்கமான சலிப்பு பிடித்த உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருப்போம். எல்லாத்தையும்விட உச்சமாக, நம்முடைய ஜிம்முக்கு அல்லது பூங்காவுக்கு நம்மால் செல்ல முடியாது என்கின்ற எண்ணமே தனியான எரிச்சலையூட்டும். ஆகவே, ஒரு த்ரில்லான உடற்பயிற்சி விளையாட்டுக்கான சரியான நேரம் இது என நான் நினைக்கிறேன்.

நமது வேண்டுதல் கடவுள் காதுகளில் கேட்டிருக்க வேண்டும் போலும்; அடுத்த கட்ட உற்சாகத்தை ஊட்டக்கூடிய ஒரு விடயத்தை நமக்கு கிடைக்க செய்திருக்கிறார்.

சூப்பர் நேச்சுரல் (Super Natural) என அழைக்கப்படும் புத்தம் புதிய மெய்நிகர் அனுபவத்துக்கு உங்களை வரவேற்கிறோம். Within  ஸ்டூடியோவினுடைய புதிய சிந்தனையான இந்த செயலி ஆழ்ந்த மற்றும் முன்னெப்போதும் இல்லாத மெய்நிகர் அனுபவத்திற்கான முதல் இடமாக விளங்குகிறது.

இந்த செயலியானது,  உப நிறுவனர்கள் ஆன Chris Milk மற்றும் Aaron Koblin ஆகியோரின் சிந்தனையாகும்.

அவர்கள், நமக்கு உடற்பயிற்சியோடு இருக்கின்ற விருப்பு-வெறுப்பு தாண்டி ஒரு ரசிக்கத்தக்க உணர்வை வழங்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர். இந்த சிந்தனைக்கான ஆய்வில் அவர்கள் தங்களையே சட்டமாக பயன்படுத்தினர். ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் தங்களைத் தாங்களே டெலி போர்ட் ( ஒரு இடத்தில் மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றுவது) செய்து கொள்ள முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்; அதிலும்  உச்சத்தில், உங்களை மூச்சு வாங்க வைக்கும் வெறித்தனமான உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் ஆக இருந்தால் சந்தோஷத்துக்கும் வியர்வைக்கும் இடையில் இருக்கும் தூரம் குறைந்து விடும். இல்லையா ?

“அலைகளின் மீது சர்ஃபிங் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த அலை எப்போதுடா முடியும் என்று நினைத்துக் கொண்டா உங்கள் பலகையில் நீங்கள் குந்திக் கொண்டிருப்பீர்கள் ? நிச்சயமாக இல்லை. உங்களுடைய அசைவுகள் நடனம் போல் இருக்கும். உடலை கட்டுப்படுத்துவது சந்தோஷமாக இருக்கும். – என்னைப்போன்ற சமூகமயமாக்கம் அற்ற ஒரு நபருக்கு- இருண்ட அறைக்குள்ளேயே இதை செய்வது மேலும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருக்கும்” என இவ்வாறான அனுபவங்கள் பற்றிய தன்னுடைய கருத்தை பகிர்கிறார் Aaron Koblin.

இந்த செயலியானது தனிப்பயனாக்கப்பட்டது, அதி தீவிரமானது, விளையாட்டு மயமாக்கப்பட்ட செயற்பாட்டு தொகுதிகளை உங்களுக்கு விருப்பமான இசையோடு தரக்கூடியது. இது புவியிலுள்ள மிக அழகான இடங்களின் 360 பாகை பரப்பையும் காட்சிகளையும் தரக்கூடியது. இப்பொழுது இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக பார்ப்போம்:

  • செயலியை தரவிறக்குவது: இந்த செயலியை நீங்கள் Oculus Quest Store இலிருந்து தரவிறக்கலாம். நீங்கள் இதற்கான துணை செயலியை உங்களுடைய iOS அல்லது Android சாதனத்தில் தரவிறக்கி உங்களுடைய உடற்பயிற்சி தொடர்பான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் செயற்திறன் அளவிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். தற்போதைக்கு, இந்த உடற்பயிற்சி நிகழ்வு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டும் மாதம் 19 டொலர்கள் கட்டணம் மற்றும் 30 நாள் இலவச சோதனையுடன் கிடைக்கிறது. இந்த நிறுவனம் உலகளாவியரீதியில் இதனை கிடைக்கச் செய்வதற்கான முழு முயற்சிகளிலும் தற்போது இறங்கியுள்ளது.
  • உங்களுடைய உடற்பயிற்சி குறிக்கோள் மற்றும் கடின அளவை தேர்ந்தெடுத்தல்:நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல ஆரம்ப நிலையிலிருந்து பதுங்கி தாக்கும் நிஞ்சா நிலைவரை வித்தியாசமான அனைத்து உடற்பயிற்சி நிலைகளுக்கும் தேவையான விடயங்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பும் சுற்றளவினை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கின்ற சாடிகளும் மூடிகளும் பறப்பதையும் உடைவதையும் தவிர்க்க முடியும். 
  • உடற்பயிற்சி ஒன்றை தெரிவு செய்தல் :நீங்கள் எளிமையான 12 நிமிட உடற்பயிற்சி வேளை ஒன்றையோ அல்லது அதி தீவிரமான ஒரு மணி நேர உடற்பயிற்சி வேளையையோ தெரிவு செய்யலாம். உங்களுக்கு உற்சாகம் ஊட்ட அதில் வழங்கப்பட்டிருக்கும் பாடல்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை நீங்கள் தெரிவு செய்யலாம்.
  • உங்களுடைய பயிற்சியாளரை சந்தியுங்கள்:எல்லாம் தயாரானதும்  உடற்பயிற்சியை நீங்கள் ஆரம்பிக்க முன், பயிற்சியாளரோடு நீங்கள் இணைக்க படுவீர்கள். அவர்கள் உங்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பதோடு, மூச்சை உள்ளிழுத்து வெளி விடுதல் தொடர்பாகவும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
  • உந்த ஆரம்பியுங்கள்: நீங்கள் இலக்குகளை தாக்கும் பொழுது அல்லது தடைகளில் அடிபடாமல் தப்பிப்பதற்காக குனியும் பொழுது உங்களுடைய இதய துடிப்பு அதிகரிக்கும். நீங்கள் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டே போக போட்டியின் கடினத் தன்மையும் கூடும். ஆனால் இறுதிப்போட்டியில் உச்ச திறனை வெளிப்படுத்த முன் உங்களை நீங்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான நேரம் கூட இருக்காது.  ஆனால் இந்த ஆழ்ந்த அனுபவம் நீங்கள் எவ்வளவு தூரம் உங்களுடைய உடலைச் ஏற்படுத்த வைத்திருக்கிறீர்கள் என்பதை கூட உங்களுக்கு மறக்கச் செய்துவிடும்.
  • உங்கள் செயற்திறனை கண்காணியுங்கள் : super natural உங்களுடைய தாக்குதல் மற்றும் தப்பித்தல் தொடர்பான துல்லிய தன்மைக்கும் உங்களுடைய அசைவுகளின் தீவிரத் தன்மையையும் பொறுத்து உங்களுக்கு புள்ளிகளை வழங்கும். வாராந்த புள்ளி பட்டியல் படி உங்களுடைய புள்ளிகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கவும் அனுமதிக்கும். இதனை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த முடியும் என்பதனால் உங்களுக்கான மிகச்சிறந்த உடற்பயிற்சி செயற்பாடாக இது இருக்கும்.

நிச்சயமாக உங்களுடைய ஜிம்மில் இருக்கும் கருவிகள் மூலம் கிடைக்கின்ற உடற் கட்டினை ஒரு மெய்நிகர் அனுபவத்தினால் உங்களுக்கு கொடுக்க முடியாது. ஆனாலும் அதற்கு இணையான இதய மற்றும் HIIT செயற்பாடுகளை கொண்டு வருவதோடு, ப்ரூஸ்லீ போல உங்களையும் உணரச் செய்ய முடியும். 

இன்னும் எதற்காக அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ? உடற்பயிற்சி ஆரம்பிக்கலாம்.

image source:https://www.slashgear.com/supernatural-vr-fitness-game-is-like-beat-saber-with-extra-steps-24618206/

Post Views: 449
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
டெஸ்லாக்கள் விரைவில் கதைக்கும் என்கிறார் எலான் மஸ்க்!

டெஸ்லாக்கள் விரைவில் கதைக்கும் என்கிறார் எலான் மஸ்க்!

  • May 7, 2020
View Post
Next Article
அசிசன்ஸ்  கிரீட் இன் வரலாறு!

அசிசன்ஸ் கிரீட் இன் வரலாறு!

  • May 8, 2020
View Post
You May Also Like
அமெரிக்கா
View Post

அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!

Windows
View Post

Windows மற்றும் MacOS க்கான WhatsApp App பயன்பாடு விரைவில் கொண்டுவரப்படவுள்ளது..!

FBI
View Post

FBI இன் மின்னஞ்சல் Servers ஹேக் செய்யப்பட்டுள்ளது..!

தனது முதலாவது ஃபிட்னெஸ் பேண்ட்டை 2021ல் வெளியிடும் ஒன்பிளஸ்
View Post

தனது முதலாவது ஃபிட்னெஸ் பேண்ட்டை 2021ல் வெளியிடும் ஒன்பிளஸ்

மோதல் தாக்கம் ஈர்ப்பு விசை (G) இல் அளக்கப்படுவது ஏன் ?
View Post

மோதல் தாக்கம் ஈர்ப்பு விசை (G) இல் அளக்கப்படுவது ஏன் ?

ஹேலோ : F1 வரலாற்றின் மோசமான மோதலைத் தாங்கிய கார் பாகம்
View Post

ஹேலோ : F1 வரலாற்றின் மோசமான மோதலைத் தாங்கிய கார் பாகம்

ட்ரோஜன் ஹார்ஸ் தீம்பொருள் 15+ வகைகள் : அறிமுகமும் விளக்கமும்
View Post

ட்ரோஜன் ஹார்ஸ் தீம்பொருள் 15+ வகைகள் : அறிமுகமும் விளக்கமும்

Elon Musk, செயற்கை நுண்ணறிவின் தீமைகள் பற்றி எச்சரிக்கிறார் !
View Post

Elon Musk, செயற்கை நுண்ணறிவின் தீமைகள் பற்றி எச்சரிக்கிறார் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.