2023ம் ஆண்டில் சிறந்த இரு படங்களை கொடுக்கும் விஜய். நாம் இவ்வருடம் ஜனவரி மாதம் வாரிசு திரைப்படத்தை கண்டு ரசித்ததே. இத்திரைப்படம் அனைத்து விதமானவர்களின் வரவேற்பை பெற்றதுடன் உலகளவில் 300 கோடியயும் தண்டியுள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கு அடுத்த படியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் லியோ திரைப்படம் நாம் அனைவரும் அறிந்ததே. இப்படத்தை பற்றி கூறும் போது விஜய் , த்ரிஷா , சஞ்ஜய் தத் , அர்ஜுன் , கவுதம் மேனன் போன்ற நடிகர்கள் நடிப்பதோடு அனிருத் இசையமைப்பாளராகவும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு இயக்குனராகவும் உள்ளார். இத்திரைப்படம் 2023 அக்டோபர் 19ம் திகதி வெளியிடுவதாக திரைப்பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இத்திரைப்படம் விஜயை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி சென்ற வருடம் திரைக்கு வந்த கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றதால் லோகேஷ் கனகராஜ் இன் இத்திரைப்படமும் வசூலில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சினிமா ஆவலர்களிடையே கருத்து பரிமாறப்படுகிறது.
பலரும் தெரியாத இப்படத்தின் ஒளிப்பதிவு தொழிநுட்பம் மொகோபொட் (MOCOBOT) என்னும் புகைப்பட கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி ஹோலி வூட்டில் பயன்படுத்துவது மட்டுமல்லாது இது மேம் பட்ட தொழிநுட்பமாகும். துள்ளியமான ஒளிப்பதிவு , சண்டை காட்சிகளின் வடிவமைப்பு அற்புதமாக எடுத்து காட்டக்கூடிய புகைப்பட கருவியாகும்.சுமார் 15 நிமிட சினிமா காட்சிகளுக்கு 2 மணித்தியாளம் புகைப்பட மென்பொருள் நிரலாக்கம் (CAMERA PROGRAMMING), இயக்க மென்பொருள் நிரலாக்கம் (MOVEMENT PROGRAMMING) செய்து கடும் உழைப்போடு படக்குழு வேலை செய்கிறது. இத்திரைப்படம் பெரிய வெற்றிகளை பெற நாம் வாழ்த்துகிறோம்.