இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் XB Film Creators நிறுவனம் தயாரித்து, seven screen studios நிறுவனத்தால் வெளியிட உள்ள திரைப்படம் MASTER. அனிருத் இசையமைப்பில் இந்த திரைப்படத்தில் வெளியான முதலாவது பாடலான குட்டி ஸ்டோரி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வேளையில் வாத்தி coming என்ற பெயரில் வெளியான இரண்டாவது பாடலும் அமோக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 15.03.2020 அன்று அமோகமாக இடம்பெற்ற பாடல் விழாவில் ஏனைய பாடல்கள் வெளியாகின. அந்த நிகழ்ச்சி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.
எப்போதுமில்லாதவாறு இளையதளபதி விஜய் கோட் சூட் அணிந்து வருக தந்ததோடு அவர் பேசும்பொழுது எனது நண்பர் தல அஜித் போல ஆடை அணிந்து வந்தேன் எனச் சொன்னது தளதளபதி ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான தருணம்.
இதுவரை பாடல்களே இல்லாமல் படமெடுத்து வந்த லோகேஷ் இந்த திரைப்படத்தில் 12 பாடல்கள் வைத்துள்ளாராம்.
அனிருத் இசையில் விழாவன்று 8 பாடல்கள் வெளியானது. இதில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.
திரைப்படகுழுவில் நடிகை மாளவிகா மோகன், பூவையார், prankcall தீனா, ஆகியோரும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
விஜய் மேடையில் ஏறி பேசமுன் நடனம் ஆடியது, விஜய் சேதுபதியின் கன்னத்தில் முத்தமிட்டது, விஜய் சேதுபதி அப்பாவைப் பற்றி பேசியது இவைஎல்லாம் அந்த நிகழ்வின் மறக்க முடியாத தருணங்கள்.
இந்த திரைப்படம் வெளியீடு குறித்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை ஆனாலும் இப்பொழுதே ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
image source:https://www.youtube.com/watch?v=vxzfsBDx590