வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் ஆனது ஏற்கனவே இந்தியா மற்றும் பிரேசிலில் காணப்படுகின்றது. அத்துடன் இந்த வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப் மூலம், பயனர்கள் மிக எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த WhatsApp Payments அம்சமானது Meta இன் டிஜிட்டல் வாலட்(Digital Wallet)
ஆன நோவி ஒருங்கிணைப்பால் (Novi integration) இயக்கப்படுகிறது.
முதன் முதலில் ட்விட்டரில் டேவிட் மார்கஸ் (David Marcus) என்பவரால் இதனைப் பற்றி தெரிவிக்கப்பட்டது.பின்னர் WABetaInfo தான் அது பற்றிய விரிவான அறிக்கையை கொண்டு வந்தது.
UPI (Unified Payments Interface) இல் இந்திய ரூபாயில் முந்தைய பரிவர்த்தனைகளைப் போலல்லாமல், WhatsApp Payments அம்சமானது அமெரிக்க பயனர்களை Novi ஒருங்கிணைப்புடன் (Novi Integration) டாலர்களில் (USPD) பரிவர்த்தனை செய்ய
அனுமதிக்கிறது.
எந்தவொரு மேலதிக கட்டணமும் செலவழிக்காமல் இதன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
ஏற்கனவே நீங்கள் அமெரிக்காவில் வாட்ஸ்அப் பீட்டா பயனராக இருந்தால், உங்களது வாட்ஸ்அப் கணக்கிற்கும் இந்த வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவையை அமைப்பது சாத்தியமாகும்.
அதைப் பற்றி படிக்க WhatsApp Payments இணையப் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு 2.21.17 பீட்டா பதிப்பு வழியாக அணுக முடியும், மேலும் இந்த அம்சத்தின் பீட்டா பதிப்பை விரைவில் iOS பயனர்களுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது.