Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கர்ப்ப

கர்ப்ப கால சிறுநீர் தொற்று..!

  • November 19, 2021
  • 211 views
Total
3
Shares
3
0
0
Ethics: Pregnancy and Research Under the Microscope - Georgetown Today
image source

சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்சினை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது.
என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா. கர்ப்பகால சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் விளக்குகிறார் அவர்.

காரணங்கள் என்ன?

UTIs During Pregnancy: Symptoms, Treatment, Common Questions | Everyday  Health
image source

முதல் காரணம் ஹோர்மோன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இவை சிறுநீரகப் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், கர்ப்பிணிகள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வளரும் குழந்தையானது சிறுநீர் பையின் மேலும் சிறுநீர் பாதையின் மேலும் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக, கர்ப்பிணிகளின்
பிரசவப் பாதையில் எளிதில் தொற்று பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

கர்ப்பத்தின் ஆறு வாரங்களில் கர்ப்பிணிகளின் சிறுநீர் குழாய் விரிவடைவதும் ஒரு காரணம்.

கர்ப்பிணிகள் சிலருக்கு சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். அதில் சர்க்கரையும் சில ஹோர்மோன்களும் சேர்ந்திருக்கும். இது பக்டீரியா தொற்றைத் தூண்டுவதோடு, கர்ப்பிணிகளின் உடலில் அதை எதிர்த்துப் போராடும் சக்தியையும் குறைக்கும்.

அறிகுறிகள்

எரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் பழுப்பு நிறத்திலும் இரத்தம் கலந்தும் சிறுநீர் வெளியேறுவது அடி முதுகு வலி மற்றும் இடுப்பு வலி, அடிக்கடி
சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, காய்ச்சல்,வாந்தி மற்றும் குமட்டல், அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வித்தியாசமான வாடையுடன் சிறுநீர் பிரிதல்.

கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று ஆபத்தானதா?

கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற எந்தத் தொற்றுமே தாயையும் கருவிலுள்ள
குழந்தையையும் பாதிக்கக்கூடும்.

கர்ப்பகால நோய் தொற்றானது குறைப் பிரசவத்துக்கும் காரணமாகலாம். அது மட்டுமின்றி பிரசவத்துக்குப் பிறகும் கூட அந்தத் தொற்றின் தாக்கம் தொடரக்கூடும். சரியான நேரத்தில், ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால்.அந்தத் தொற்றானது சிறுநீரகங்களைப் பாதித்து அவற்றை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யலாம்.

என்ன பரிசோதனைகள்?

சிறுநீர் பரிசோதனையே பிரதானம்.அதில் பக்டீரியா தொற்றுள்ளதா என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சரும் சரிபார்க்க வேண்டுமெனப் பரிந்துரைக்கப்படும். அதில்தான் எந்த வகையான பக்டீரியா தொற்று தாக்கியிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படும்.தவிர இரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பார்க்கப்படும்.

சிகிச்சைகள்

முதல் கட்டமாக தொற்றின் தன்மை மற்றும் தீவிரத்துக்கேற்ப ஆன்டி
பயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.இது பரிசோதனை முடிவுகளை அறிந்த பிறகே ஆரம்பிக்கப்படும். கர்ப்பத்துக்கு முன் ஏற்பட்ட சிறுநீரகத் தொற்றுக்கு எடுத்துக்கொண்ட அதே மருந்துகளை கர்ப்பத்தின் போது ஏற்படும் தொற்றுக்கும் தாமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த மருந்துகள் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கலாம். எனவே. கர்ப்பத்தின்போது பாதுகாப்பானது என மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பத்துக்கு முன் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுகிறவர்கள் அதற்கு
முறையாக சிகிச்சை மேற்கொண்டு முற்றிலும் அதிலிருந்து விடுபட வேண்டும்.

தவிர்ப்பது எப்படி?

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.நாளொன்றுக்கு 8 டம்ளர் இயற்கை உபாதைகளைக் கழித்த பிறகு முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக
உறுப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடாமல் குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை வெளியேற்றிவிட வேண்டும்.கொட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்க்க வேண்டும். பிறப்புறுப்பைச் சுத்தம் செய்கிற கெமிக்கல்களை உபயோகிக்கக் கூடாது.

wall image

Post Views: 211
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கார்த்திகை

கார்த்திகை தீபத்திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

  • November 19, 2021
View Post
Next Article
தூக்கம்

தூக்கம் பாதிக்க காரணமான 7 தினசரி பழக்கவழக்கங்கள்

  • November 20, 2021
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..
View Post

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..

கர்ப்பிணி
View Post

கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி..!

உங்கள்
View Post

உங்கள் கூந்தலுக்கு சருமத்துக்கு பாதங்களுக்கு செய்யவேண்டியவை..!

தாயும்
View Post

ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..!

குழந்தை
View Post

குழந்தை வளர்ப்புக் கலை..!

மேக்கப்
View Post

மேக்கப் பிரஷ்களை பராமரிக்கும் வழிமுறை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.