2020, 2021 சிவகார்த்திகேயனின் வருடங்களாக இருக்கப் போகிறது போலும். அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் வளர்ந்து வரும் நடிகர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய இரட்டை வேடத் திரைப்படம்
அட்லீயினுடைய உதவி இயக்குனராக பணி புரிந்த இயக்குனர் அசோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு கதாப்பாத்திரங்களும் திரைப்படத்தின் கதை முழுவதுமே பயணிக்கவுள்ளதாக திரைப்படக் குழுவிடமிருந்து தகவல்கள் வெளி வந்துள்ளன. ரஜினி முருகன் அல்லது சீமராஜா படங்கள் போல கடைசியில் மட்டும் வராது என்று தெரிகிறது. இவை மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் அடுத்த படங்களாக அயலான், டாக்டர், மற்றும் SK 17 ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அயலான் திரைப்படத்தை இன்று நேற்று நாளை எனும் விஞ்ஞான மைய திரைப்படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். அந்தப் படம் காலப்பயணம் பற்றி அமைந்ததைப் போலவே இந்தத் திரைப்படமும் ஏலியன்கள் பற்றிய திரைப்படமாக அமையும் எனக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படம் வெளியீட்டுத் திகதி 2021 ஏப்ரல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
image source : https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/540052-ayalaan-first-look.html
அடுத்தது, டாக்டர். கோலமாவு கோகிலாவை இயக்கிய நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகிறது இந்தத்திரைப்படம். தமிழில் அறிமுகமாகும் நடிகை, பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் முதல் பாதி சென்னையிலும் அடுத்த பாதி கோவாவிலும் படமாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். யோகி பாபு இணைந்துள்ளார்.நானும் சிவாவும் நண்பர்கள். 14 வருடங்கள் முடிந்துவிட்டது. இப்போது அவர்களோடு இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என்கிறார் நெல்சன்.
image source : https://www.indiaglitz.com/tamil-movies-doctor-photos-22945
அடுத்து, SK 17. இந்தத் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். ரஷ்மிகா மந்தன்னா நடிப்பதாக சொல்லப்பட்டாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. கிடைக்கப்பெறும் தகவல்களை உடனுக்குடன் வழங்குவோம்.
தொடர்ச்சியான தகவல்களுக்குஎங்கள் பக்கத்தை தொடரவும்.
Image source : https://www.youtube.com/watch?v=XnkPzknGuwY