இதோ தற்போது Microsoft நிறுவனம் Xbox TV app இனை தயாரிக்கத் தயாராக இருப்பதாக மைக்ரோசாப்ட் இணையதளத்தில் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் படி, அவர்கள் இன்னும் டிவி உற்பத்தியாளர்களுடன்(TV manufacturers) இதனைப் பற்றி இன்னும் கலந்துரையாடி வருகின்றனர்.
எனவே இந்த எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சேவையை(Xbox Game Pass service) டிவிக்களுக்கு xCloud ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பம்(xCloud streaming technology) மூலம் வழங்க Microsoft நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், இந்த app பயன்பாடு பயனர்களுக்கு எக்ஸ்பாக்ஸ் கேம்களை(Xbox games) வேறு வழியில் அணுக(access பண்ண) அனுமதிக்கும் என்பதாகும்.
மேலும் இந்த பயன்பாடு டிவிகளிலும் மைக்ரோசாப்டின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் ஸ்டிக்கிலும்(dedicated streaming stick) கிடைக்கும்(available) எனவும் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் படி, எக்ஸ்பாக்ஸ் Xbox app பயன்பாட்டை டிவி உற்பத்தியாளர்கள் தங்கள் சாதனங்களில் இணைப்பதற்கான நாள் இன்னும் வரவில்லை என்பதாகும்.
அதோடு மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் எக்ஸ்பாக்ஸ் ஸ்ட்ரீமிங் சாதனங்களுக்கான டிவி பயன்பாட்டுத் திட்டங்களின் விலைகளைக் கூட இன்னும் அறிவிக்கவில்லை.மேலும், இந்த தயாரிப்புகளின் வடிவமைப்பைப் பெற எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே மைக்ரோசாப்ட் இந்த வாரம் வென்ற E3 நிகழ்வுக்கு(E3 event ) முன்னர் ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில்(special press conference) இதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டது.
இணையதள கூற்றுப்படி,இந்த தயாரிப்புகள் வெளிவர தயாராக இருக்கும்போது இந்த சாதனங்களைப் பற்றிய மேலும் கூடுதல் விவரங்கள் அறியப்படும் என்பதாகும்.