இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நாம் அன்றாடம் பாவிக்கும் ஏகப்பட்ட பொருட்கள் ஒரே பொருளில் இருந்து தான் உருவாகி இருக்கின்றன என்பதே தெரியாமல் நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆம். இன்று விமானத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோல் முதல் வீதியில் போட்டு இருக்கின்ற தார் வரை எல்லாமே ஒரே பொருளிலிருந்து உருவானதுதான். அதைத் தவிர இன்னும் ஐந்தாறு வேறு பொருட்களையும் எங்களுக்கு கொடுப்பது அந்த ஒரே மூலப்பொருள் தான். அது என்ன என்று ஆர்வமாக இருக்கிறதா ?அதற்குப் பெயர்தான் கனிய நெய்.
ஆம் இன்று கனிய நெய் உற்பத்தி அல்லது மசகு எண்ணெய் உற்பத்தி என்கின்ற பெயரில் சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் பணக்கார நாடுகளாக வளர்ந்திருப்பது இந்த வளத்தினால் தான்.
இது நிலத்தடியில் காணப்படுகின்ற ஒரு வளமாகும் பல நூறு ஆயிரம் அல்லது மில்லியன் ஆண்டுகளாக மண்ணால் சேதமாக்கப்பட்ட இறந்த உடல்கள் தான் இந்த எண்ணெய்கள் உருவாகின்றன.
அது சரி அது என்னென்ன என்று தெரியுமா ?
ஜெட் போன்றவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய உயர்ரக பெட்ரோல், விமான பெட்ரோல், வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், வாகனங்களுக்கு பயன்படுத்தும் எண்ணெய்கள், நாப்தா, மண்ணெண்ணெய், நிலத்திற்கு போடுகின்ற தார் ஆகியவை இதில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. பகுதி பட காய்ச்சி வடித்தல் என்கின்ற ஒரு செயற்பாட்டின் மூலமாக இவை அனைத்தும் இவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன.
image source:https://www.theaugust.com/business/how-oil-prices-can-go-negative/