செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நீண்டகாலத் திட்டத்தை நோக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.
அதன் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற ஓராண்டு அனுபவத்தைப் பெறுவதற்கு தன்னார்வலர்களைத் தேடத் தொடங்கியுள்ளது.
இதற்காக ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் 1700 சதுர அடியில் வேண்டும் செவ்வாய் கிரக சூழலுடன் கூடிய ஓர் இடத்தை உருவாக்கியுள்ளது.
ஒரு டென்னிஸ் கோர்ட்டை விட சிறியதாக இந்த இடம் இருக்கும்.
இதில் பங்கேற்க இதுவரை 4 விண்ணப்பித்துள்ளனர்.இவர்கள் இந்த உருவாக்கப்பட்ட அறையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்படக்கூடிய தகவல் தொடர்பு தாமதம், உபகரணங்களின் தோல்வி உள்ளிட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும்.

அவர்கள் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி நடைபயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியும் மேற்கொள்வார்கள். விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் உணவே அவர்களுக்கு வழங்கப்படும்.
இதுபோன்ற 3 பயிற்சித் திட்டங்களை செயல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் 30-35 வயதுக்குள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
அறிவியல் அல்லது பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பன போன்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
இதை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகம் பணி என நாசா தெரிவித்துள்ளது 2030களில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்துக்கு இந்த ஆராய்ச்சி உதவும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்
 
			
 
						 
						 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	