நீரிழிவு நோயால் கஷ்டப்படுபவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு பெரும் தொல்லை. அதனைக் கடக்கவும் உங்கள் சீனி மட்டத்தை நல்லபடியாக பேணவும் உதவும் டாப் 10 பழங்கள் பற்றிய கட்டுரை இது.
உள்ளே செல்ல முன் ஒரு விடயம் பற்றி வாசியுங்கள்.
கிளைசெமிக் குறியீடு என்பது உணவுப்பொருலொன்றில் உள்ள காபோவைதரேற்று அளவுக்கேற்ப அது எவ்வாறு உங்கள் உடலின் சீனி மட்டத்தை பாதிக்கும் என்பதை குறிக்கும். இந்த அளவீடு 55க்கு கீழே இருப்பின் அது செரிமானமடைந்து, உறிஞ்சி உடலில் கலக்க நீண்ட நேரமாகும். ஆகவே சீனி அளவை குறைவாக வைத்திருக்கும்,.
இப்போது பழங்கள் பற்றி பார்க்கலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த டாப் 10 பழங்கள்.
- கிவிப்பழம்
Image source : https://recipematic.com/how-to-choose-store-how-to-use-kiwi-fruit-benefits-of-kiwi-fruit-calories-and-nutrition-facts/
கிவிப்பழம் மிகவும் சத்தான மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டினைக் (47 – 58 )கொண்ட பழமாகும். நார்ச்சத்தை அதிகமாகவும் காபோவைதரேற்றுக்களை குறைவாகவும் கொண்டது என்பதனால் சீனி அளவைக் கட்டுப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும். இதில் பல விட்டமின்களும் கனியுப்புக்களும் அடங்கியுள்ளது. அதாவது விட்டமின் A, விட்டமின் C, விட்டமின் E, நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட்டுக்கள் மற்றும் உயர் அளவு பீட்டா-கரட்டீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், சுயாதீன மூலக்கூறுகளில் இருந்து பாதுகாப்பை அளிப்பதோடு முழுமையான ஆரோக்கியத்திலும் பங்களிக்கிறது. இது inositol இனைக் கொண்டிருப்பதால், அது சீனி மட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகவே கிவிப் பழத்தை உங்கள் நீரிழிவு ஆகாரத்தில் சேர்ப்பது நிச்சயம் பயனளிக்கும்.
- பேரிக்காய்
Image source : https://www.amazon.com/D-Seven-Artificial-Fruit-Supermarket-Decoration/dp/B07DH6Q93P
வகை 2 நீரிழிவு நோயாளர்களுக்கு இவை சிறந்தவை.இவை நார்ச்சத்தை அதிகமாகவும் கலோரிகள் காபோவைதரேற்றுக்களை குறைவாகவும் கொண்டன என்பதோடு 38 கிளைசெமிக் குறியீட்டினைக் கொண்டவை. நடுத்தர அளவுடைய ஒரு பேரிக்காய் 6g நார்ச்சத்து மற்றும் 100 கலோரிகளை மட்டுமே உடையது.26 g காபோவதைறேற்றையும் உடையது. காபோவைதரேற்றை நார்ச்சத்துடன் சமப்படுத்தும் இது போன்ற பழங்கள் குளுக்கோஸ் உறிஞ்சல் வீதத்தைக் குறைக்கின்றன.ஆகவே உங்கள் குருதிச்சீனி திடீரென அதிகரிக்காது. பேரிக்காயின் இனிய சுவை இனிப்புச்சுவையில் எவ்வித தியாகமும் செய்யாமல் அவர்கள் நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
- ஆரஞ்சுப்பழம்
Image source : https://www.medicalnewstoday.com/articles/272782
ஆரஞ்சுப்பழங்கள் அவற்றின் சுவைக்காகவும் மருத்துவ நன்மைக்காகவும் புகழ் பெற்றவை. நார்ச்சத்தை அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் கொண்டுள்ளதோடு, விட்டமின் C,பொட்டாசியம்,போலேட்டுக்கள் மற்றும் தைமின் என்பவற்றை உடையன.அவற்றில் சீனி இருந்தும் கூட , அவை தாழ்ந்த கிளைசெமிக் குறியீட்டினைக் கொண்டவை (31 – 51). இந்தப் பண்பானது ஒரேஞ்சு பொலிபீனோல் மற்றும் நார்ச்சத்தில் உயர்வாக இருப்பதைக் கொண்டு விளக்கப்படுகிறது.இவை குருதிச்சீனி அதிகரிப்பை கட்டுப்படுத்தும். ஓரஞ்சினை தினசரி உணவோடு எடுத்துக் கொள்வதால் உங்கள் சுவை நரம்புகளின் ஆசையும் நீரிழிவு நோயும் தீர்க்கப்படும்.
- ஸ்ட்ரோபெரிக்கள்
Image source : https://indianexpress.com/article/lifestyle/life-style/strawberries-beauty-skincare-benefits-6277462/
இவை விட்டமின், எதிரொட்சைட்டு, நார்ச்சத்து மற்றும் குறைந்த சீனி உள்ளீட்டைக் கொண்டவை. ஆராய்ச்சி முடிவுகள், வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று வேளை உணவாக ஸ்ட்ரோபெரிகளை உண்பது வகை 2 நீரிழிவு அதிகரிப்பின் ஆபத்தைக் குறைக்கும் என சொல்கின்றன. விட்டமின் C அதிகமாகவும் காபோவைதரேற்றுக்களை குறைவாகவும், தாழ்ந்த கிளைசெமிக் குறியீட்டினைக் (40) கொண்டும் உள்ளன. நீங்கள் ஸ்ட்ரோபெரிக்களை சாப்பிட்டால் அவை உங்களை நீண்ட நேரத்துக்கு பூரணமாக வைத்திருக்கும். குருதிச்சீனி மட்டத்தை சீராக்குவதோடு, சக்தியை அதிகரிக்கும்.
- அவக்காடோ
Image source : https://snaped.fns.usda.gov/seasonal-produce-guide/avocados
நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் கலோரிகளை அதிகமாகவும் காபோவைதரேற்றுக்களை குறைவாகவும் கொண்டது. இதில் காணப்படும் கொழுப்பு ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு. அதாவது இதயத்தைப் பலமாக்கக் கூடிய வகைச் சேர்ந்தது. இது உங்கள் சீனி மற்றும் கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்த உதவும்.இதன் குறைந்த காபோவைதரேட்டு அளவுக்காகவே இதனை தயங்காமல் நிறைய உண்ணலாம். தினமும் ஒன்று வீதம் உண்பது சிறந்தது.
- கிரேப்பழம்
Image source : https://www.eatthis.com/grapefruit-recipes/
இதில் கரையக்கூடிய உயர் நார்ச்சத்து, விட்டமின் A, விட்டமின் C மற்றும் குறைந்த கலோரிகளை உடையது. தாழ்ந்த கிளைசெமிக் குறியீட்டினைக் (25) கொண்டவை. இது Flavonoid naringenin ஐக் கொண்டிருப்பதால் அது இன்சுலினுக்கு ஏற்ப உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்க உதவும்.அதிக கொழுப்பு மற்றும் உடல் எடையைக் குறைத்து சீராக பேண உதவுகிறது.இதனை உங்கள் தினசரி உணவில் பயன்படுத்துவது நல்லது. தினசரி பாதி பழம் சாப்பிட்டாலே சீனி அளவை கட்டுப்படுத்த நன்கு உதவும்.
- கொய்யாக்காய்
Image source : https://www.healthline.com/nutrition/8-benefits-of-guavas
இதில் லைகொபீன், நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம், விட்டமின் A, விட்டமின் C மற்றும் மக்னீசியம் ஆகியன நிறைந்துள்ளன. இந்த பழம் மற்றும் அதன் இலையில் தயாரிக்கப்படும் தேநீர் இரண்டுமே பயனுள்ளவை. பல ஆய்வுகள் கருத்துப்படி கொய்யாத்தோல் இல்லாமல் சாப்பிட்டால் சீனி அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறதாம். மலச்சிக்கலை குறைப்பதோடு வகை 2 நீரிழிவு நோயை நீங்கள் அணுகாமலும் பார்த்துக்கொள்ளும்.பொட்டாசியம் குருதியமுக்கத்தை பேணும்.
Nutrition & Metabolism உடைய கட்டுரை ஒன்றில் கொய்யா இலைகள் சீனி உறிஞ்சலைக் கட்டுபடுத்துவதால் உணவு உண்டவுடன் மட்டம் அதிகரிக்காமல் காக்கிறது என கூறுகிறது. ஒரு ஆய்வில், வெள்ளை அரிசிக்குப் பின் சுடு நீர் குடித்தவர்களை விட கொய்யா இலைத் தேநீர் பருகியோர் குறைந்த குளுக்கோஸ் மட்ட அதிகரிப்பையே சந்தித்ததாக கூறுகிறது.ஆகவே தோலில்லாமல் ஒரு கொய்யாவாவது தினசரி எடுத்துக்கொள்ளுங்கள்.
- நாவல்பழம்
Image source : https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/diet/Benefits-of-Jamun-Black-Plum/articleshow/51455334.cms
இது நீரிழிவுக்கேயான பழம். இப்பழம் வயிறு வெறுமையாவவதை மெதுவாக்கும். இது உடலில் இன்சுலினுக்கான மாற்றத்தை அதிகரிக்கிறது.இது மாப்பொருளை சக்தியாக மாற்ற உதவி செய்வதோடு சீனி அளவை கட்டுப்படுத்தும். தாகம் மற்றும் நீரிழிவினை (அதிகமாக சிறுநீர் வருதல்) போன்றவற்றையும் குணப்படுத்தும். தண்டு, விதை, இலைகள் கூட உங்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்களே.இதனைத் தினமும் உண்பது நல்லது.
- செரிப்பழம்
Image source : https://www.aircargoweek.com/exclusive-turkey-set-supply-10000-tonnes-cherries-china-2018-air/
மிகக்குறைந்த கிளைசெமிக் குறியீட்டினைக் (22) கொண்டவை. அதனால் மட்டத்தை பேண உதவும்.இன்சுலினை வேகப்படுத்தும் இராசயானங்களையும் கொண்டுள்ளது.இது சீனி மட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.இவை அன்தொசைநின்ஸ் எனப்படுகின்றன. இதனாலேயே செரிக்கள் சிவக்கின்றன. இவை இன்சுலின் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்கும். இது இதய நோய்களையும் கட்டுப்படுத்த உதவும்.
- அப்பிள்
Image source : https://www.bbc.com/future/article/20191119-how-climate-change-could-kill-the-red-apple
இதன் தோல் மற்றும் உடல் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஏனைய எதிரொட்சைட்டுகளைக் கொண்டவை.காபன் பொருட்களின் செரிமானம் மற்றும் உறிஞ்சலை இவை கட்டுப்படுத்தும்.நார்ச்சத்து, கனியுப்பு மற்றும் நீர் உள்ளதால் இதை உண்டாலே பசி தீரும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டினைக் (30 – 50) கொண்டவை.நீரிழிவுக்கு மிகச்சிறந்த பழம் இதுவே…
மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு
image source : https://www.youtube.com/watch?v=XaKDp3ijSx0