பெண்களை பாதிக்கும் ஈஸ்ட்ரோஜன்
ஈஸ்ட்ரோஜன் முதன்மை பெண் ஹார்மோன் ஆகும், இது இனப்பெருக்க அமைப்பு மற்றும் பாலின பண்புகளான அக்குள் முடி, மார்பகங்களின் வளர்ச்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கு பொறுப்பாகும். அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் பெண்களிடையே புற்றுநோயை உண்டாக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதை சாதாரண அளவில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
மனித உடலில் சுரக்கும் ஹோர்மோன்களின் அளவு சீராக இருக்கும் போது உடல் இயக்கமும் சீராக இருக்கும். ஹோர்மோன்கள் சமநிலை இன்றி காணப்படும் போது பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும்.
பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோனின் பங்களிப்பு முக்கியமானது. அதன் உற்பத்தி சீராக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் சீராக
இருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோனின் உற்பத்தி இயல்பை விட அதிகரிக்கும் போது பெண்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்பட தொடங்கும். பொதுவாக பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலங்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும்.
பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
மன அழுத்தம், நீரிழிவு நோய்,உயர் இரத்த அழுத்தம். உடல் பருமன்,
இதயநோய், அதிக மருந்துகள் சாப்பிடுவது போன்றவை ஈஸ்ட்ரோஜன்
அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
உடல் பருமன் அதிகரிப்பதும், குறிப்பாக இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதும் ஈஸ்ட்ரோஜன் அளவு கூடியிருப்பதற்கான அறிகுறியாகும்.
உடற்பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும் உடல்
எடை குறையாமல் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக இருக்கிறதா
என்று பரிசோதனை செய்ய வேண்டும்.
நாட்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து
கொண்டிருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
மாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஈஸ்ட்ரோஜனுக்கும் அதில் பங்குண்டு.
மாதவிடாய் திரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம்.
நினைவாற்றலுக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் தொடர்புள்ளது. பெண்களின் உடல் நலனில் ஈஸ்ட்ரோஜனின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால் அதன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதிகப்படியான ஈஸ்ட் ரோஜன் பல்வேறு தூக்க பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். உங்களின் உறங்கும் பழக்கம் எந்தக் கட்டாயக் காரணமும் இல்லாமல் திடீரென மாறியிருந்தால் அல்லது மன அழுத்த அளவுகளில் மாற்றம் ஏற்பட்டால் கவனம் செலுத்துங்கள்.
கருவில் இருக்கும் குழந்தையின் அறிவினை மேம்படுத்தும் விடயங்கள்