ஆங்கிலத்தில் Sweet Home என்று குறிப்பிடும் வார்த்தைகள் ஓர் இனிய குடும்பத்தையும் அது வசிக்கும் அழகான வீடும் என்று பொருள் கொள்ளப்படுகிறது.உங்கள் வீடும் அவ்வாறு இருக்க என்னவெல்லாம் செய்யலாம் எனப் பார்ப்போம்.
Sweet Home டிப்ஸ்க்குள் போகாலாமா ?
சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் சிறியதாக முத்துப் போல் வைக்க பட்ஸ் அல்லது சிறு குச்சியில் பஞ்சு சுற்றிய அதை உபயோகித்தால் கை வைப்பதை விட அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
வீடு கூட்டும் துடைப்பத்தை உப்பு கலந்த நீரில் முன்னும் பின்னும் சிறிது நேரம் ஊறவைத்து பயன்படுத்தினால் அதிக நாட்கள் பயன்படுத்தலாம்.
துடைப்பத்தை கதவுக்கு பின்னால் ஒரு ஆணியில் மாட்டி வைத்தால் துடைப்பம் நீண்ட நாட்கள் வரை இருக்கும்
டூல் பாக்ஸில் ஒரு கரித்துண்டை போட்டு வைத்தால் அது ஈரத்தை நன்கு இழுத்துக்கொண்டு துருப்பிடிக்காமல் காப்பாற்றும்
வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் வீட்டின் ஒவ்வொரு பொருட்களை சுத்தம் செய்வதால் எடுத்துக்காட்டாக ஒரு கிழமை கதவுகள் சுத்தம் ஒரு கிழமை திரைச்சீலை மேசை விரிப்புகள் கால் மிதியடிகள் சுத்தம் என வைத்துக் கொண்டால் எப்போதும் வீடு சுத்தமாக இருக்கும்.
பூச்சாடி களில் அலங்கார பூக்கள் வாடாமல் இருக்க தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீனி அல்லது ஆஸ்ப்ரோ போட்டு வைக்கவேண்டும். பூச்சாடியில் எப்பொழுதும் பூக்களை வைத்து அலங்கரிப்பது விட மாறுதலுக்கு நெற்கதிர், சோளக்கதிர் கம்பு, கேழ்வரகு போன்ற கதிரோடு வைக்கலாம் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும்
வாசலில் ரங்கோலி போடுவதற்கு முன்பு நமக்கு தேவையான டிசைனை வரைந்து கொண்டு அதன் மேல் வெள்ளை கோந்து பசையை உட்புறமாக லேசாக தடவிக் கொண்டு பிறகு கலர் பொடியை தூவி ரங்கோலி-கோலம் காற்றில் கலந்த அழியாமல் அப்படியே இருக்கும்.
குடிக்கும் நீர் மணமா இருக்கணுமா வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்
மின்சாரம் இல்லாத போது மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால் இருமடங்கு வெளிச்சம் கிடைக்கும்
உங்களுக்கும் வீட்டுத் தோட்டமொன்றையும் அமைக்க ஆசை இருந்தால் இந்த பக்கத்தை வாசிக்கவும்
image source:https://pics.alphacoders.com/pictures/view/252895