சீனா விண்வெளியில் சொந்தமாக அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளுக்காக மூன்று விண்வெளி வீரர்கள் நேற்று சென்றனர்.இவர்கள் ஷென்சோ 12 விண்கலம் மூலமாக நிலையத்துக்கு சென்றனர்.
வடமேற்கு சீனாவின் கோபி பாலை வனத்தில் உள்ள ஜூகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து பீஜிங் நேரப்படி காலை 9.22 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் ( CMSA ) தெரிவித்துள்ளது.
விண்வெளியில் தியாஹே என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கான மைய பகுதியை கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று சீனா விண்ணில் செலுத்தியது.
விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க முன்னர் விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
கூடி இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அங்கு குழுமியிருந்த சிறுவர்கள் விண்வெளி வீரர்களிடம் கற்றுக்கொள்கிறோம் என சீன மொழியில் முழங்கினர்.
இதனையடுத்து ஷென்சோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கியவாறு விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் சுமார் மூன்று மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பர். இந்த நடவடிக்கை விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என சீனா தெரிவித்துள்ளது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் சீனா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது இதுவே முதல்முறையாகும்.
வேறெங்கும் கிடைக்காத தொழில்நுட்ப விண்வெளி மற்றும் விஞ்ஞான தகவல்களை அறிய எமது விண்வெளி பக்கத்துக்கு செல்லவும்.
தொடர்ச்சியான அப்டேட்களை பெற எமது பேஸ்புக் பக்கத்தில் எம்மைத் தொடரவும். சுவாரசியமான கலந்துரையாடல்களுக்கு எமது பேஸ்புக் குழுவில் இணையவும்.