Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

தோழி ரகசியம் : தோள் கடக்கும் தோழமை காதலா ? – சிறுகதை 5

  • October 10, 2020
  • 343 views
Total
1
Shares
1
0
0

தோழி ரகசியம், தன்னுடைய உயிர்த்த தோழியைக் கடைசியாக விட்டுப் பிரியப்போகும் தருணத்தில் அவள் எதிர்பாராத ஒன்றை இவன் சொல்கின்றான்.

நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

தோழி ரகசியம்

“டேய் நாம கடைசி வரைக்கும் ஒன்னாவே இருப்போமாடா ? எனக்கு உன் கூட தொடர்ந்து சேர்ந்து இருக்க ஆசையா இருக்கு. உன்ன ரொம்ப அலைய விட்டது என்னோட தப்பு தான். ஆனா ஆரம்பத்துல உன்னை பற்றி எனக்கு முழுசா தெரியல. இப்போ நீ என் மேல வச்சிருக்க பாசத்தை புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமா, நான் உனக்கு செஞ்சு ஒவ்வொரு விஷயத்தையும் நினைச்சு ரொம்ப கவலையா இருக்குடா.”

“ஏ லூசு.. இதுல கவலைப்படுறதுக்கு என்ன இருக்கு ? எந்தவொரு பொண்ணுமே ஆரம்பத்தில பேசும்பொழுது கொஞ்சம் தயங்க தான் செய்வாங்க. அதுக்காக அவங்க வேணும்னே பண்றாங்கனு இல்லையே..”

“உண்மையிலேயே அது அவங்களோட பாதுகாப்புக்காக தான் அப்படின்றது எனக்கு தெரியும். அதனாலதான் அன்னைக்கு உன் பக்கத்துல உட்கார்ந்து போகுறப்போ நீ என்ன தப்பா எடுத்துகிட்டானு நினைச்சேன்.”

“எதைப் பத்தி சொல்ற ?”

அவன் அவளுக்கு கதை சொல்லும் முன்பு அவர்களுடைய கதையை நான் உங்களுக்கு சொல்லி விடுகிறேன்.

தன்னுடைய ஆருயிர் தோழியை, அவளுடைய கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப் போகும் நண்பன் தான் இவன். இரண்டு பேரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்களோ அல்லது ஏதேனும் வகுப்புக்களில் சந்தித்துக் கொண்டு நண்பர்கள் ஆனவர்களோ இல்லை. வேலைத்தளமோ அல்லது நண்பர்கள் ஒன்றுகூடலோ இவர்களுடைய நட்பை சேர்த்து வைக்கவில்லை. இரண்டு பேரும் எங்கிருந்தோ ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான காரணத்துக்காக தவறான இடத்திற்கு வருகை தந்ததால் நண்பர்கள் ஆனவர்கள். சரியாகச் சொல்வதானால், தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த பேருந்தில் ஏற வேண்டுமோ அதனை விட்டு வேறொரு தவறான பேருந்தில் ஏறி, கண்டக்டர் “இந்தப் பேருந்து இல்லை மற்ற பேருந்தில் போங்கள்” என்று சொன்னவுடன் ஒன்றாகவே இரண்டு பேரும் இறங்கி ஒருவரை ஒருவர் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றவர்கள். அன்றையதினம் இவன் வழி சொல்லி, சரியான பேருந்தை கண்டுபிடித்து, அதில் ஏறி பயணித்து இருக்காவிட்டால், இவளுக்கு கிடைக்கவிருந்த பகுதி நேர வேலை  கிடைக்காமல் கூட போயிருக்கலாம். ஆனால் அந்தப் பேருந்து பயணத்துக்கு பிறகு இவர்கள் இரண்டு பேருடைய சந்திப்புகளும் சம்பந்தமே இல்லாத வேறு வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடந்தன. இவள் தபால் நிலையத்திற்கு செல்லும் பொழுது அதே பேருந்து பாதையில் அமைந்திருக்கின்ற தனது நண்பன் வீட்டிற்கு இவன் சென்றிருந்தான். சினிமா கூடத்துக்கு சென்றால், அதே பக்கம் இருக்கின்ற வங்கி.  ஒவ்வொரு முறையும் இரண்டு பேருடைய சந்திப்புகளும் இரண்டு பேருக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் கூட ஒருவரையொருவர் இரண்டாம் முறை அணுகுவதற்கு மிகவும் தயங்கி கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஒருநாள் இவளாகவே அவனிடத்தில் சென்று பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுது, அவனும் பேசி இருவரும் ஒரே நிறுவனத்தின் வேறுவேறு கிளைகளில் பணிபுரிவதையும், ஒரே பாடத்தை வேறு வேறு வகுப்புகளில் பயின்று கொண்டிருப்பதையும் புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர் இவர்களுடைய நட்புக்கு தடையேதும் இருக்கவில்லை. பெற்றோர்கள் கூட இருவரையும் வீடுகளுக்கு வந்து தங்கி படிக்க விடும் அளவுக்கு சுதந்திரமான நண்பர்களாக  இருந்தனர்.

தோழி ரக்ஷியம்
தோழி ரகசியம் / புகைப்பட உருவாக்கம் : J.Sudharshanth .

இப்பொழுது இரண்டு பேருமே பட்டம் பெற்று விட்டார்கள். இவனுக்கு பட்டம் கையில் இருந்தாலும் அவனுக்கு இருந்த இசை ஆர்வம் காரணமாக இசைத்துறைக்குள் இறங்கிவிட்டான். அவளோ பட்டப்படிப்பை மேலும் விஸ்தரிப்பதற்கு வெளிநாடு செல்ல தயாராகிறாள். இந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் இரண்டு பேரும் தங்களுடைய கடைசி சந்திப்பில் ஒருவரையொருவர் பற்றி பல விஷயங்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“உன்ன பாத்து ஒரு வாரம் தான் இருக்கும்னு நினைக்கிறேன். அன்னை பஸ்ல பார்த்தப்போ உன் பக்கத்துல இடமிருந்து நான் வந்து உட்கார்ந்து இருந்தேன். நீ கூட இறங்கி போறப்போ என்ன பார்த்து ஒரு மாதிரி முழிச்சிட்டு போனா. அத நெனச்சு நான் ரொம்பவே பயந்துட்டேன்.” 

“ஓ அதைப் பத்தி சொல்றியா அன்னிக்கு நடந்த ஒரு விஷயம் உனக்கு தெரியாதே.”

“என்னது ?”

“இல்ல வேணாம் விடு பரவாயில்லை.”

“ஹே… பாத்தியா சொல்ற அளவுக்கு வந்துட்ட.. அதுக்கப்புறம் மறைக்கிற… இன்னிக்கு அப்புறம் எனக்கு எப்படி கேட்க சான்ஸ் கிடைக்கிறது. ப்ளீஸ் சொல்லு”

“வேணா… வேணா…. கேட்டா நீ அடிப்ப”

“நான் என்னைக்குடி உன்ன அடிச்சு இருக்கேன்”

“எது…..நீ அடிச்சது இல்லையா ? ஏன்டா கழுத்தை பிடிச்சு கீழே குனிய வைச்சு முதுகை உடைச்சியேடா… மாடு..”

“சரி சரி அதெல்லாம் விடு.. நீ அடிக்கிறதை விடவா கட்ட குரங்கு… சொல்லு…”

“இல்ல… அன்னைக்கு நான்  உன்ன பார்த்தேன் முறைக்கல.. நீ எதுவும் கண்டுபுடிச்சியா எண்டு பாத்தேன்”

“நான் என்னத்த கண்டுபிடிக்கிறது கிறுக்கு ?”

“அதுதான் எப்படி சொல்ல”

“சொல்லுடி சீக்கிரம்”

“அன்னைக்கு நான் உனக்கே தெரியாமல் உண்ண மூணு போட்டோ எடுத்தேன்”

தனியன் தோழி : திறக்காத  பூட்டுக்களுக்கான சரியான ஊசி | கதை 4
View Post
  • கதைகள்
  • மனித உறவுகள்

தனியன் தோழி : திறக்காத பூட்டுக்களுக்கான சரியான ஊசி | கதை 4

  • abiesshva
  • September 26, 2020
தனியன் தோழி, தனிமையை வாழ்வாகக் கொண்ட ஒருவனுக்கும், அவனை ஆற்றுப்படுத்த அவனுக்கு கிடைத்த புதிய தோழிக்கும் இடையிலான அழகிய நட்பை எடுத்துக் காட்டும் கதை. நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை…
கட்டுரையை வாசிக்க
Share

“அடிப்பாவி”

“ஆமாடா.. நீ அதுக்கு அப்பறம் என்கிட்ட பேசுவானு தெரியாது. சரி பயபுள்ள அடிக்கடி நம்ம வழில கிராஸ் ஆகுது.. போட்டோ புடிச்சு வெச்சுக்கிட்டா பார்க்கிறப்ப எல்லாம் சிரிப்பு வரும்னு எடுத்து வச்சேன். கெரகம் இப்படி வந்து என் கூடயே ஒட்டிக்கும்னு யாரு கண்டா ? ”

“இந்தப்பொண்ணுங்க எல்லாம் எப்படி பசங்கள கணக்கெடுக்காத மாதிரியே சீன் போட்டு கடைக்கண்ணால காரியத்தை முடிக்கிறீங்க.”

“நான் கற்புள்ள பையன். இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூட கூட போட்டோ எடுத்தது இல்லை. ஆனா நீ என்னன்னா இப்படி எல்லாம் பண்ணி வச்சிருக்க. என் கற்பை களங்கப்படுத்தி இருக்க… எனக்கு தெரியாம என்ன போட்டோ எடுத்து இருக்க…”

“அய்யே…….. பே….. இவரும் இவரு கற்பும்.. கல்லடி வாங்கப்போறாய்…”

“சரி சரி… அப்போ நானும் சா……………ரி…”

“எதுக்கு??  நீ என்னை எப்படா போட்டோ எடுத்த.. அய்யய்யோ உன்ன நம்பி வீட்டுக்குள்ள எல்லாம் விட்டேனே..என்ன எதுவும் அந்த மாதிரி எல்லாம் போட்டோ எடுத்து வச்சியாடா நாயே…”

“பாத்தியா பாத்தியா புத்தியை காட்டுற ?”  அவன் கோபித்துக் கொண்டதுபோல முகத்தை மாற்றினான்.

“நீ ஒரு சொக்கத் தங்கம்னு தெரியும்டா… இருந்தாலும் இந்த பூனையும் என்னைக்காவது பால் குடிக்காதானு நானும் வெயிட் பண்றேன்.. ஆனா நீ என்னடான்னா பொண்ணுங்களை கண்டாலே தெறிச்சு ஓடுற..  அவளுகளும் நீ பேசுற பேச்சுக்கு ஒவ்வொருத்தியும் உன்னை கண்டாலே தெரிச்சு ஓடுது.”

“நான் என்னப்பா பண்றது.. chat பண்ணுவாளுக.. ஏதாவது பேசு னு சொல்வாள்க… சரின்னு நானும் எனக்கு விருப்பமானது பேசினா அதுக்கு அப்புறம் ரிப்ளை வரமாட்டேங்குது..”

“ஆமா.. ஆசையா பேசுற பொண்ணு கிட்ட போயிட்டு  குவாண்டம் தியரி, ஏரியா 51, இன்டர்ஸ்டெல்லர் அப்படின்னு சயின்ஸ் கதையா அளக்கிறது இல்லன்னா கர்னாடிக் மியூசிக் பாட்டு, தமிழ், கடவுள், ஒருமை, இயற்கை அப்படின்னு போதனை பண்றது.. உங்க டாபிக்ல ரொமான்ஸ் இல்லையே தலைவா…”

“ஏய் தலைவர் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா ?”

“யாரு தலைவர் ரஜினியா ?”

“ஆமா.. இன்டர்ஸ்டெல்லர் பார்க்காத ஆம்பளையும், சின்-சான் பார்க்காத பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல அப்படின்னு சொல்லி இருக்காரு.”

“ஓஹோ…. அவர் இன்னொன்னு சொல்லி இருக்காரு.. தெரியுமா ?”

“என்ன ?”

“உன்ன மாதிரி ஒரு ஆம்பளைக்கு பொம்பளையும்,  உன் கூட திரியுற ஒரு பொண்ணுக்கு ஆம்பளையும் கிடைக்கிறதுக்கு இந்த உலகத்தில வாய்ப்பே இல்லையாம்..”

“போடி பீப்… “

“அது சரி நீ என்ன என்கிட்ட மறைச்ச அதை சொல்லு..”

“அதுவா… நீ என்கிட்ட மொத தடவை பேசின அன்னைக்கு உன் கிட்ட காசு காணாம போயிடுச்சு இல்லை. உனக்காக நான் பஸ் காசு கொடுத்து ஞாபகம் இருக்கா..”

“ஆமா.. காசு இல்ல கொடுக்கலைன்னா மானம் போய்டுமேனுதான் உன்கிட்ட பேசினேன்.. அன்னைக்கு புடிச்சது.. இன்னும் ஏழரை முடியல..”

“சொல்லுவடி.. சொல்லுவ… எனக்கு தான் ஏழரை.. அன்னைக்கு உண்மையிலேயே உன்னோட காசு காணாம போகல. நீ போன் பின் கவர்ல தான் காசு வைக்கிறன்றது நான் முதலேயே பார்த்துருந்தன்.அது தப்புனு உனக்கு புரிய வைக்கணும்னுதான் உனக்கே தெரியாம சனத்துல நீ நெரியுறப்போ உன் போன் கவரைத் திறந்து நான் காசை அடிச்சுட்டேன். ஆனா நீயாவே அன்னைக்கு என் கிட்ட பேசுவேன்னு நினைச்சு கூட பாக்கல. சரி நீ பேசவும், அடிச்சது லக்குன்னு அப்படியே உன் கூட பிரண்ட் ஆயிட்டேன்.”

“படவா ராஸ்கல்.. என் காசை எடுத்து எனக்கே திருப்பி  குடுத்திட்டு, அதுக்குள்ள பெரிய கர்ணபரம்பரை மாதிரி சீன் எல்லாம் போட்டான். போதாக்குறைக்கு 20 தடவை சொல்லிக் காட்டி இருப்பான்.. துரோகி” 

அவளுடைய வார்த்தைகளில் இருந்த கொஞ்சல் கோபத்தை அப்படியே அடியிலும் காட்டினாள். அவன் தோள்களும் முதுகும் அவள் கை செல்ல கோபத்தில் இடும் தாளங்களை தாங்கிக் கொண்டிருந்தது.

தோழி ரகசியம் : தோள் கடக்கும் தோழமை காதலா ?   - சிறுகதை 5
தோழி நட்பு image source

“போதும்டீ,,, போதும்.. எனக்கும் வலிக்கும் இல்ல.. “

“மற்றொரு முக்கியமான விஷயம் கேக்கணும். உனக்கு என்ன புடிக்கும் இல்ல..”

“ புடிக்கும் அதுக்கு என்னடா..”

“அதில்ல.. நானும் இதுவரைக்கும் பொண்ணுங்ககிட்ட பழகுறதுக்கு பேசுறதுக்கு ட்ரை பண்ணிட்டேன். முடியல.. ஆனா உன்கிட்ட மட்டும் என்னாலே எல்லாமே செய்ய முடியுது. என்னோட வாழ்க்கையில உன்ன மாதிரி ஒரு பொண்ணு கட்டாயம் இருந்தா அது நல்லா இருக்கும்னு தோணுது”

“டேய் என்னடா சீரியாசாலாம் பேசுற எனக்கு சத்தியமா புரியல”

“நான் இது எப்படி சொல்றதுன்னு தெரியல இத்தனை நாளா புரியல.. ஆனா நாளைக்கு அப்புறம் நீ நேர்ல இருக்க மாட்டேன்னு தெரிஞ்சதும்,உன்ன பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுனு புரியுது. வாழ்க்கை பூரா யாரோ இன்னொரு பொண்ணோட உன்ன பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுன்னு தோணுது..”

“டேய் லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிடாதடா…”

“ஏன் ஏன்.. ஏன் நான் லவ் பண்ண கூடாது..”

“ஏண்டா தெரியாத மாதிரி கேக்குற.. நாம பிரெண்ட்ஸ் டா.. அதுமட்டுமில்லாம நான் சுகன லவ் பண்றேன் உனக்கு தெரியுமில்ல..”

அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை…

“டேய் என்னடா… எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. இந்த நாசமாப் போன பொண்ணுங்களுக்கு எல்லாம் எதனால உன்ன பிடிக்கலைன்னு எனக்கு சத்தியமா தெரியல… எனக்கு உன்ன எவ்வளவு பிடிக்குமோ அவளுக்கு அக்கறையும் இருக்கு அதே நேரத்துல உன் மேல பாசம் இருக்கு. ஆனால் லவ் பண்ற விஷயம்…. எனக்கு தெரியலடா. உன்னை அந்த மாதிரி எல்லாம் பார்க்க முடியலடா.. அது மட்டும் இல்ல … சுகன் என் மேல வச்சி இருக்க பாசத்துக்கு என்னால எந்த துரோகமும் பண்ண முடியாது. அவன் மேல மட்டும் தான் எனக்கு லவ் அந்த மாதிரியான எந்த ஒரு ஆசையுமே வந்து இருக்கு…நீ கடைசி நேரத்துல ஏண்டா என்ன இப்படி பண்ற ?”

“அதேதான் நானும் கேட்கிறேன்.. கடைசி நேரத்துல ஏன் இப்படி பண்ற ?”

“டேய் நீ தான்டா திடீர்னு மாறுறா…”

“அதில்ல.. கடைசி நேரத்துல சுகன் கிட்ட சண்டை போட்ட ?”

“எனக்கு புரியல டா..”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மறைவிலிருந்து சுகன் முன்னால் வருகிறான்.

“உன் வீட்டு நிலைமை என்னன்னு எனக்கு தெரியும். என்கிட்ட பேசணும் வந்தா மட்டும்தான் உங்க வீட்ல விடுவாங்க என்றதும் எனக்கு தெரியும். உன் மேல உயிரையே வச்சிருக்கான்னு சொன்னால.. வெளிநாட்டுக்கு போக முன்னால உன்ன பாக்க முடியலன்னு அவன் எவ்வளவு கஷ்டப்படுறான்.. இந்த நேரத்தில் போய் அவன் கிட்ட நீ பேசாம இருந்தது சரியா.. அதான் தம்பி என்கிட்டே ஹெல்ப் கேட்டு வாந்தாப்ல.. நான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.”

கடைசி நேரத்தில் தன்னுடைய காதலனை பார்க்காமலேயே போகப் போகின்றோம் என்ற கவலையை மறைத்து இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனை பார்த்ததும் கண்கள் குளமாகிவிட்டன.

 “சுகன்…” என்றபடி பாய்ந்து அவனை ஆரத் தழுவிக்கொண்டாள். அவனும் இதுதான் இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு கிடைக்கப் போகின்ற ஒரே அணைப்பு என்பதை உணர்ந்து அவளை முழுவதுமாக தழுவிக்கொண்டான்.

“சரி.. சரி… ரொம்ப நேரம் பண்ணாதீங்க.. பேச்சுலர் சாபம் உங்கள சும்மா விடாது.” – அங்கிருந்த உணர்வுக் கொந்தளிப்புகள் குறைக்க இவன்.

“வேணும்னே தான் இதெல்லாம் பண்ணல டா.. சார் என்னை லவ் பண்றார்னு வேற அதுக்குள்ள ஒரு கதை..”

“ஆமா.. இங்க படம் ஓட்டலன்னா நீங்க அப்படியே ஒத்துக்க போறீங்க.. ஏதாவது பிரச்சினை வந்தா மட்டும் தானே பொண்ணுங்க காதல ஒத்துக்குவீங்க..”

“பையன் வண்டியில் அடிபட்டு சாவக்கிடந்தா.. பொண்ணு வேஷம் போட்டு உங்களுக்காக நடிச்சா… தாடி எல்லாம் வளர்த்துட்டு கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருந்தா…”

“இப்படி ஏதாச்சும் ஒரு எமோஷனல் டிராமா தேவைப்படுது இல்ல உங்க காதல ஒத்துக்க… அதுக்காக தான் நான் லவ் பண்ற மாதிரி சீன போட்டேன்..”

சுகனை விட்டு விலகி வந்து அதே கண்ணீரோடு இவனை ஆரத்தழுவிக் கொண்டாள். மூவர் முகத்திலும் புன்சிரிப்பு தவழ்ந்தது.

தூய்மையான பூரணமான நட்பு கட்டாயப்படுத்தலின் பெயரில் கூட காதலாக மாறாது.
ஏனெனில் அது காதலை விட புனிதமானது..

நேத்திரக்கைதி / தோழி ரகசியம்

தோழிக்கு ரகசியம் புரிந்தது

இது போன்ற வேறு கதைக்கள வாசிக்க கதைகள் பகுதிக்கு செல்லுங்கள்

கதைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்

எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்

Facebook 4K Likes

புகைப்பட உருவாக்கம் : J.Sudharshanth .

Post Views: 343
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
திதி / திவசம் கொடுப்பது எப்படி ?  அறிந்து கொள்ள வேண்டியவை

திதி / திவசம் கொடுப்பது எப்படி ? அறிந்து கொள்ள வேண்டியவை

  • October 10, 2020
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 23

  • October 10, 2020
View Post
You May Also Like
வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்
View Post

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

பல
View Post

பல வருட தேடல் ஒரு நொடி கவனச்சிறதல் குட்டிக் கதை.!!

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து   | க16
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து | க16

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
View Post

விவசாயி செய்த மகாதர்மம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?
View Post

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

கோபத்தோடு
View Post

கோபத்தோடு எழுபவன் தோல்வியுற்று அமருவான்.

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1
View Post

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.