திதி என்பது நாம் செய்ய வேண்டிய முக்கிய சிரார்த்த கடமைகளுள் ஒன்று. நகரங்களில் வாழும் நம்மில் பலருக்கு அது பற்றிய விளக்கம் இல்லாமல் பிழையாக செய்து வருகின்றோம். அண்மையில் நான் திவசம் செய்ய முற்பட்ட போது எனக்கு சரியாக செய்ய வேண்டிய முறை விளக்கம் கிடைத்த்தது. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
திதி பற்றிய கேள்வி பதில்கள்
திதி என்றால் என்ன ?
திதி என்றால் நாம் நமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை. திவசம் வேறு வீட்டில் கொடுக்கும் படையல் வேறு. இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்ள வேண்டாம். திதியை திவசம் அல்லது சிரார்த்தம் என்றும் அழைப்பார்கள்.
திவசம் எப்போது வரும் ?
உங்கள் தாய் அல்லது தந்தை இறந்த ஆங்கில திகதி மாதம் வருடம் நேரம் இவைகளை ஐயரிடம் காண்பித்து அந்த நேரம் இருந்த திதி என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவும். திதி வளர்பிறை எனின் அமாவாசைக்கு அடுத்தும், தேய்பிறை எனின் பொர்ணமிக்கு அடுத்தும் வரும்.
யாருக்கு செய்யப்படும்?
இறந்த தாய் அல்லது தந்தைக்கு செய்யப்படும். அப்படி செய்யும் பொழுது இறந்த தாய் தந்தையின் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோர்கள் என குறைந்தது மூன்று தலைமுறை பெயர்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது…
திவசத்தை யார் செய்ய வேண்டும் ?
திவசம் குடும்பத்தில் உள்ள மூத்த மகனால் செய்யப்படும். வீட்டில் மூத்த சகோதரம் பெண்ணாக இருப்பின் ஆண் மகனால் செய்யப்படும். மகள்கள் மட்டும் உள்ளவர்கள் திதி அன்று கோவிலில் பூஜை/அர்ச்சனை செய்யலாம். பொதுவாக வீட்டில் செய்வது சிறந்தது.
திவசம் செய்ய வேண்டியதன் கட்டாயம் என்ன ?
திதி செய்ய வேண்டியதன் கட்டாயம் நம் வம்சத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கவும், நல்ல வாழ்க்கை கிடைக்கவும், மேலும் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும் பித்ருக்களின் ஆசிகளை பெருவதற்ற்காகு
செய்வதற்கான முன்னாயத்தங்கள் என்ன ?
காலையில் எழுந்து குளித்து விட்டு ஐயர் கூறிய பொருட்களை வாங்கி வைத்து ஆண் மகன் வேட்டி கட்டி ஆயத்தமாக இருக்க வேண்டும். பூஜை முடியும் வரை விளக்கு ஏற்றக் கூடாது.
அரிசி, உளுந்து, எள், இளநீர், தயிர், பால், தேன், வாழைப்பழம், நெய் எனும் பொருட்கைள உருண்டையாக உருட்டி பிண்டமிடல் இடம்பெறும். இதைத் தவிர பூஜைக்கு தேவைப்படும் மஞ்சள், சாம்பிராணி போன்ற பொருட்களின் பட்டியலை நீங்கள் திதி செய்ய அழைத்த அய்யரிடம் கேட்டு வாங்கவும்.
திவசம் வழங்கும்போது இடம்பெறும் செயற்பாடுகள் என்ன ?
முன்னர் கூறியது போல பொருட்கள் ஆயத்தம் செய்யப்படும். பின்னர்,
- தர்ப்பணம்
- பூசை
- பிண்டம் வைத்தல்
- சூரிய வழிபாடு
- காகத்துக்கு உணவு வைத்தல்
- குரு வழிபாடு
- பிண்ட நீர் கரைத்தல்
- தட்சணை கொடுத்தல்
எனும் ஒழுங்கில் ஒவ்வொரு கிரியையாக ஐயரால் நிறைவேற்றப்படும்.
அறிந்து கொள்ள வேண்டியது
சிரார்த்த கிரியைகளி்ல் எள்ளும், தண்ணீரும் இறைத்தல் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது . குறுக்காகப் பிடித்து, தர்ப்பப்பை வழியாக வழியுமாறு எள்ளுக் கலந்த நீரை பெருவிரல் மூலமாக விழச்செய்வர். அவ்வேளையில் உங்கள் முன்னோர்களின் மூன்று தலைமுறைப் பெயர்கள் சொல்லப்படும்
பித்ருவின் ரூபமாகவே ஐயர் வருவதால் அவருடைய மனம் மகிழும்படி தானம் மற்றும் தட்சணையை மகிழ்ச்சியோடு வழங்க வேண்டும்
தர்ப்பணத்துக்கு பயன்பட்ட பூணூல் மற்றும் தெப்பை ஆகியவற்றை ஐயர் மறக்காமல் கொண்டுபோகும்படி செய்ய வேண்டும். அவர் மறந்தால், வீட்டில் அடுத்த ஆண்டு திவசம் வரை எந்த நர்கரியங்களும் செய்ய முடியாது.
சிரார்த்தத்தின் முடிவில் பசுக்களுக்கு மற்றும் காகங்களுக்கு உணவு வழங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. பொதுவாக இவற்றுக்குப் பதிலாக கடலிலும் கரைக்கப்படும்
பித்ருக்களுக்கு தானம் செய்தல் நம் கடமை என நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள். இவ்வாறு வருட வருடம் செய்வதால் அவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் கூடவே இருக்கும்.
நாங்கள் வழங்கிய இந்தத் தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகின்றோம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் கருத்துப் பிரிவில் பகிர்ந்து கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே
இது போன்ற கலாசாரம் சார்ந்த தகவல்களை அறிய எமது கலாச்சாரத் தகவல்கள் பக்கத்தை அணுகவும்.