Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பானம்

இவ்வற்புத பானம் இடுப்பு, முதுகு, கை, கால் வலிக்கு தீர்வாகும்

  • December 19, 2020
  • 357 views
Total
24
Shares
24
0
0

இடுப்பு வலி, முதுகு வலி, கை,கால் வலி ஆகியவை நமக்கெல்லாம் இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் வர ஆரம்பித்து விட்டது. 1000 மருந்துகளை பூசினாலும் இவை சரியாவதில்லை. ஆனால் , இயற்கைப் பொருட்களாலான இம்மருந்தானது வலிகளை இருந்த இடம் காணாமல் போகச் செய்யும் அற்புதமான பானம்.

Vysya's Delicious Recipes: Varagarisi Ulundu Kanji - Millets Porridge -  Siruthaniya Kanji
image source

ஒரு சிலருக்கு உடலானது எப்போதும் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலின் பலத்தை பல மடங்காக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இன்று நாம் பார்க்க இருக்கும் பானம் மட்டும் மூன்று நாட்களுக்கு வைத்து குடித்து பாருங்கள். உங்கள் உடலுக்கு அசுரபலம் கிடைத்து விடும்.

முதுகு வலி, தண்டுவடம், கை, கால் வலி, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய நடு முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை இந்த பானம் குடித்தால் பஞ்சாய் பறந்து போய்விடும். இத்தகைய சக்தி வாய்ந்த உளுந்து பானத்தை எந்த முறையில் வைத்தால் அதிக பலன் பெறலாம் என்பதை இப்போது காணலாம்.

உளுந்து சத்துப் பானம் செய்யும் முறை

சத்து பானம் செய்வதற்கு முதலில் தோல் நீக்காத உளுந்து 100 கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனை மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு நல்ல தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளலாம். உளுந்து ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு கட்டி முளைகட்ட அனுமதிக்கவும்.

ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து விட்டால் ஆறே மணி நேரத்தில் உளுந்து முளைக்க ஆரம்பிக்கும். முளைக்கட்டிய இந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மொழு மொழுவென்று அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த உளுந்தை அதில் சேர்க்கவும்.

நாம் எவ்வளவு உளுந்து சேர்த்திருக்கின்றோமோ அதற்கு ஐந்து மடங்கு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால் பானம் போல இல்லாமல் களி போல மாறிவிடும். அடுப்பு தீயை மிதமாக வைத்து கைவிடாமல் கிளறி கொண்டே இருங்கள். இதற்கு இடையில் மற்றொரு பாத்திரத்தில் 150 கிராம் வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.

இதில் 50 ml அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும். நமக்கு பாகு பதம் எதுவும் தேவையில்லை. வெல்லம் கரைந்தாலே போதும். வெல்லம் கரைந்த பிறகு அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைத்து விடலாம். உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களாவது எடுக்கும்.

உளுந்தின் பச்சை வாசனை போன பிறகு காய்த்து வைத்துள்ள வெல்லத்தை ஊற்றவும். வெல்லத்தின் பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும். ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு, திராட்சை, பாதாம் பருப்பு மற்றும் ஒரு கையளவு தேங்காய் துருவலை சேர்த்து தாளித்து பானத்தில் சேர்க்கவும்.

கடைசியில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்தால் உளுந்து பானம் தயாராக உள்ளது. இதனை பகல் நேரத்தில் தான் பருக வேண்டும். ஏனெனில் இது ஜீரணமாவதற்கு சிறிது நேரம் எடுக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பானத்தை குடித்து வந்தாலே போதும், இரும்பு போல உறுதி ஆகி விடலாம். இது பெண்களுக்கு மிகவும் சத்தான ஒரு பானம். குறிப்பாக உங்கள் வீட்டில் வயது வந்த பெண் குழந்தைகள் இருந்தால் வாரம் இரண்டு முறையாவது இந்த பானம் செய்து கொடுங்கள்.

இந்த குளிர்காலத்தில் உங்கள் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

இது போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்

wall image

Post Views: 357
Total
24
Shares
Share 24
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஆருத்ரா

மார்கழி 30 அன்று ஆருத்ரா தரிசனம் : வரலாறும் சிறப்பும்

  • December 18, 2020
View Post
Next Article
ஏழை தந்தையும் பணக்கார மகனும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க3

ஏழை தந்தையும் பணக்கார மகனும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க3

  • December 19, 2020
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.