கூந்தலுக்கு
ஒலிவ் எண்ணெயை டபுள் பாய்லிங் முறையில் லேசாக சூடுபடுத்தவும். அதாவது, நேரடியாக அடுப்பில் வைத்துச் சூடாக்காமல் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் உள்ள வேறொரு பாத்திரத்தின் மேல் மூழ்கி விடாதபடி வைத்து, சூடுபடுத்துவது தான் புள் பாய்லிங் முறை.
இந்த ஒலிவ் எண்ணெயை தலை முழுவதும் தாராளமாகத் தடவி ஷவர் கேப்
அணிந்துகொள்ளவும். அதன் மேல் ஒரு டவலைச் சுற்றிக் கொள்ளவும். 45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். இந்த சிகிச்சை கூந்தலுக்கு அதிகபட்ச வலிமையைத் தரும். கூந்தலின் வறட்சியைப் போக்கும். கூந்தல் உடைவதைச் சரி செய்யும். வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.கூந்தலைக் மென்மையாக்கும்.
சருமத்துக்கு
இப்போதெல்லாம் 30 ப்ளஸ்ஸிலேயே முகச்சுருக்கங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. வாரத்தில் ஒரு நாள் மெனக்கெட்டால் இளமைத் தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம். கால் கிலோ கேரட்டைக் கழுவி விழுதாக அரைக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் பாதாம் ஒயில் சேர்த்துக் கலக்கவும்.இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து கண்களுக்கு அடியிலும், சருமத்தில் சுருக்கங்கள் காணப்படும் மற்ற பகுதிகளிலும் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்குவதுடன் சரும நிறமும் கூடும்.
பாதங்களுக்கு
பலருக்கும் கால்களில் செருப்பு அணிகிற இடம் தவிர மற்ற பகுதிகளில் கருமை படர்ந்து காணப்படும். செருப்பு அணியாத நேரத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாற்றில் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, இரண்டும் கரையும் வரை கலக்கவும். இதை கருமை படர்ந்த பகுதிகளில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும். தினமும் இப்படிச் செய்துவந்தால் கால்களில் கருமை படர்வதைத் தவிர்க்கலாம்.
ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை