Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
டிப்ஸ்

இந்த 30+ உணவு டிப்ஸ் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

  • November 29, 2020
  • 254 views
Total
13
Shares
13
0
0

தினசரி நாம் உண்ணும் உணவில் என்ன உண்கிறோம் என்பதில் சிறிது கவனம் இருந்தாலே வாழ்வில் குறைகள் நீங்கி உடல் நன்கு விருத்தி பெரும். அவ்வாறான விருத்திக்கு சில உதவிகரமான டிப்ஸ் உங்களுக்காக இந்தக் கட்டுரையில் மருத்துவ டிப்ஸ், அசத்தல் டிப்ஸ், மற்றும் நிவாரணமளிக்கும் டிப்ஸ் எனும் 3 வகையான தலைப்புக்களின் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த டிப்ஸ் உங்க ளுக்கு பயனளிப்பதாக இருக்கும் என நம்புகின்றோம்

மருத்துவ டிப்ஸ்

தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்

How Long Before a Plant Starts to Grow Tomatoes? டிப்ஸ்
image source

சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்

Cucumbers: Health benefits, nutritional content, and uses டிப்ஸ்
image source

வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்

Fenugreek and Diabetes - Blood Sugar Levels Effects & Metabolism
image source

பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்

Health benefits of bitter gourd, 5 reasons why it must be in your diet -  fitness - Hindustan Times
image source

குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

5 Magical Benefits Of Drinking Water From Copper Vessel
image source

மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

Premium Photo | White sesame seeds in glass cup on wood table
image source

சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.

Couch grass | Infonet Biovision Home.
image source

பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.

Care of Peppermint - How To Grow Peppermint Plants
image source

கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.

Curry Leaves – Happilyf
image source

நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.

Indian Gooseberry Grows Profits for Farmers | Voice of America - English
image source

அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.

தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.

Watermelon for Babies - First Foods for Baby - Solid Starts
image source

ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்

மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.

All about pomegranate, fruit of paradise, in Turkish cuisine | Daily Sabah
image source

தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.

கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.

காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.

Small onion farmers to win big gains as govt shows way to overseas market -  DTNext.in
image source

வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.

பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.

அசத்தல் டிப்ஸ்

சிறு கீரை உண்டால் கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்

நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

Chickpeas: Health benefits and nutritional information
image source

ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்

சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.

விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.

நிவாரணம் அளிக்கும் டிப்ஸ்

மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.

உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.

கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.

தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.

குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,

விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.

காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.

உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.

வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.

உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.

வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த டிப்ஸ் உங்களை போல மற்றவர்களுக்கும் உதவட்டும்

வெந்தயத்தில் இரத்த சர்க்கரையை குறைக்கலாம்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

நன்றி : “ஜிM”

wall image

Post Views: 254
Total
13
Shares
Share 13
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கார்த்திகை

கார்த்திகை தீபத் திருநாள்!!

  • November 29, 2020
View Post
Next Article
தி ராபர்ட் பொம்மை : உலகின் பயங்கரமாக சபிக்கப்பட்ட பொருள்-4

தி ராபர்ட் பொம்மை : உலகின் பயங்கரமாக சபிக்கப்பட்ட பொருள்-4

  • November 29, 2020
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.