வாழ்வின் உண்மை
உழைத்தால் தான் வாழ்க்கை என்றனர் ஒரு தரப்பினர்!
உன் வழியை மட்டும் பின் பற்று என்கின்றனர் இன்னொரு தரப்பினர்!
அண்ணன் போல் நீ தைரியமாய் இல்லை என்றனர் ஒரு தரப்பினர்!
அடடே தைரியமாய் வலம் வருகின்றாள் என்றனர் இன்னொரு தரப்பினர்!
நீ நீயாக வேண்டும் என்ற எண்ணம் ஒருதலைக்காதல் போல் இருந்தாலும்,
பேதை என உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் ஆனால் மனம் தளரவில்லை!
காதல் என்ற சொல்லில் அன்று முதல் இன்று வரை சிறிதளவேனும் நம்பிக்கை
இல்லை!
காதலில் விழுந்தவர்கள் காணும்போதெல்லாம் முட்டாள்கள் என்று சொல்ல
மறக்கவில்லை!
அதீத அன்பு வைத்தவர்கள் பிரிந்து செல்லும் போது உண்மை அகத்தை வழிகாட்டிய எனக்கு வழி ஏது ?
மனதால் தீமை நினைக்காதவருக்கே மரணம் வரை சாபங்கள் பின்தொடரும் !
சற்றும் கவலை இல்லை பிரிந்து போனவர்களை எண்ணி!
சலிக்காமல் நடை தொடர்வேன் என் பாதை பேணி !
பிரிந்ததால் ஒரு கணமேனும் என்னை நினைவில் எடுத்திருந்தால்,
பின்னடைந்தவர்கள்: பிரிந்தவர்களே ! நான் இல்லை !
காலங்கள் பதில் சொல்லும்!
என் கனாக்கள் விரைவில் புதுப்பொலிவு காணும்!
யாருடன் இருந்தால் என்ன ?
யாவரும் நலமாய் இருந்தால் நலமே!
image source:https://paintingvalley.com/oil-painting-indian-village