இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்
இன்று உலகில் அதிகமாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விடயம் தொலைக்காட்சி ஆகும். அதிலும் முக்கியமாக தமிழ் சமூகமானது குடும்ப நாடகங்கள் நீள் தொடர்களுக்கு அடிமைப்பட்டு ஒவ்வொரு நாடகத்திலும் வரும் கதாபாத்திரங்களை தங்கள் குடும்ப கதாபாத்திரங்களாகவே நினைத்து அவற்றை தினமும் பார்த்து வருகின்றார்கள்.
இந்த நாடகம் என்கின்ற தொழில்நுட்பத்திற்கு ஆரம்ப கட்டம் எது தெரியுமா ?
மேடை நாடகங்கள். அந்தக் காலத்தில் மேடை நாடகங்கள் பல்வேறு வடிவங்களில் அமைந்திருந்தன. அதை இறைவனைப் பற்றிய கதைகளாகவும் அரசர்களைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் பிரதேச வழக்கத்தில் உள்ள சுவாரஸ்யமான கதைகளும் சில வேளைகளில் புத்தகங்கள் எழுதப்பட்ட நாவல்கள் கூட நாடகங்களாக நடிக்கப்பட்டன. சினிமாவோ அல்லது தொலைக்காட்சி இல்லாத அந்த ஒரு காலத்தை நினைத்துப் பாருங்கள். மக்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் கூடி மேடை நாடகம் போடும் கூத்துப்பட்டறைகளில்தான் தங்களுடைய பொழுது போக்கினை மேற்கொண்டார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் பதாக பாடல்கள் மற்றும் இசை வாத்தியங்கள் இவற்றோடு இணைய ஆரம்பித்ததும் கூத்து முதலான வடிவங்கள் உருவாக ஆரம்பித்தன. கூத்து வடிவங்களில் பாடலோடு சேர்ந்து கதையைச் சொல்லுகின்ற அழகான சில கதைகளும் வாத்தியத்திற்கு ஏற்றவாறு நாட்டிய நாடகமாக அரங்கேற்றும் சில கதைகளும் இருந்தன. இலங்கை மற்றும் இந்திய பிரதேசங்களில் மிகவும் புகழ்பெற்றவை காமன் கூத்து கண்ணகி கூத்து ,ராமன் சீதை கதை போன்ற கூத்து வடிவங்கள் ஆகும்.
பிற்காலத்தில் சமூகத்தில் அநீதிகள் எழுந்த பொழுது அவற்றை எதிர்த்துப் போராடவும் நாடகங்கள் பயன்பட்டன. அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் தொழிலாளர்கள் கூத்து நாடகத்தை எவ்வாறு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான கருவியாகப் பயன்படுத்தினர் என்பதனை அழகாக காட்டியிருப்பார்கள். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் நாடகங்கள் தொடர்களாக எடுக்கப்பட்டு அவை பின்பு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஆயினும் அன்றைய காலத்தைப் போல சகல மக்களுக்கு நேர் முன்நின்று அனைவருக்கும் கேட்கக்கூடிய தொனியில் முழு நாடகத்தையும் பாடமாக்கி நடித்த அந்த நாடகக் கலைஞர்களின் திறமைகளையும் இன்று குறைந்து அருகி வந்து கடைசியாக கோயில் திருவிழாக்களில் மட்டும் நடைபெறும் கூத்தாக மாறிவிட்டது. அதனைத் தவிர பாடசாலை மாணவர்கள் சிலர் சில நாடகங்களை தங்கள் மேடை நாடகமாக நடிக்கிறார்கள்.
இயல் இசை நாடகம் என்கின்ற மூன்று கலைகளுள் இயல் என்கின்ற நடிப்புக்கலை மிகவும் தேர்ந்த ஒரு கலையாகும். நம் அடுத்த சமுதாயத்திற்கு நம் பாரம்பரியத்தை நடத்துவதன் மூலமாக நமது கலையும் கலாச்சாரமும் அழியாமல் பாதுகாப்போம்.
image source:http://www.natgeotraveller.in/nine-nights-watching-almora-come-alive-with-ramlila-dramas/