எமது பாரம்பரியத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள்..
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
உலகின் தலைசிறந்த கலாச்சாரங்களில் ஒன்றாக நமது தமிழ் கலாச்சாரம் இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு காரணமும் அறிவியலும் இருக்கிறது. இப்போது இருக்கும் விஞ்ஞானிகள் கண்டறிந்ததை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்ததோடு நமது அன்றாட பழக்க வழக்கங்களிலும் அவற்றை பின்பற்றும் படி செய்துள்ளார்கள்.
நாகரீகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்த பல ஆரோக்கிய செயல்களை நாம் இப்போது தவிர்த்து வருகின்றோம். அவர்கள் நமக்கு பழக்கப்படுத்திய செயல்களுக்கு பின்னால் இருக்கும் அறிவியலையும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இங்கே பார்க்கலாம்.
வணக்கம் சொல்லுதல் :
வணக்கம் சொல்லுதல் தமிழ் கலாச்சாரத்தின் படி ஒருவரை சந்திக்கும் பொழுது இரு கைகளை கூப்பி வணக்கம் அல்லது நமஸ்காரம் என்று கூறுவது பழக்கமாக இருந்து வருகிறது. பொதுவாக இது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் ஒன்றும் உள்ளது இரண்டு கைகளையும் ஒரே புள்ளியில் இணைப்பது நமது கண்கள் மற்றும் மூளையினை சுறுசுறுப்பாக அனுப்பப்படும் சிக்னல் ஆகும். இவ்வாறு நம் மூளைக்கு அழுத்தம் கொடுத்து விட்டு நாம் ஒருவரிடம் பேசும் பொழுது அவரை சீக்கிரம் மறக்கவும் மாட்டோம் அதே போல் பேசிய விஷயங்கள் நினைவிலும் இருக்கும்.
மெட்டி அணிவது :
மெட்டி அணிவது நமது கலாச்சாரத்தின் படி திருமணமான பெண்கள் மெட்டி அணிவது வழக்கம். திருமணமான பெண் என்பதற்கான அடையாளம் மட்டுமல்ல ஏன் இரண்டாவது விரலில் மெட்டி அணிவிக்கிறோம் என்றால் இரண்டாவது விரலில் இருந்து செல்லும் ஒரு நரம்பு கருப்பை வழியாக இதயத்தை அடைகிறது. எனவே இரண்டாவது விரலில் மெட்டி அணிவது கர்ப்பப்பையை வலுப்படுத்தும். இதன் மூலம் கருப்பை சீரான அளவில் ரத்தம் செல்வதோடு மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். வெள்ளி ஒரு சிறந்த ஆற்றல் கடத்தும் பொருள் எனவே காலில் மெட்டி நிலத்திலிருந்து கிடைக்கின்ற ஒரு நேர்மறை ஆற்றலை உடலுக்கு கடத்தும்.
ஆற்றில் காசு போடுதல்:
ஆற்றில் காசு போடுதல் இதற்கு நாம் நினைத்துக்கொண்டிருக்கும் காரணம் ஆற்றில் காசு போட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தான். ஆனால் உண்மை அது அல்ல பழங்காலத்தில் அனைத்து நாணயங்களும் செப்பு எனப்படும்
தாமிரத்தால் செய்யப்பட்டதாகவே இருந்தது. தாமிரம் மனித உடலுக்கு பல நன்மைகளை வழங்கக் கூடிய ஒரு உலோகமாகும்.
எனவே ஆற்றில் நாணயத்தை போடுவது நம் உடலுக்கு தேவையான தாமிரத்தை தரக்கூடும். ஏனெனில் அந்த காலத்தில் ஆற்று நீரையே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. நமது முன்னோர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.
கோவில் மணி :
கோவில் மணி கோவிலுக்கு வருகை தருபவர்கள் முதலில் மணியை அடித்துவிட்டு கடவுளை வணங்குவது நமது வழக்கமாக உள்ளது. இதற்கு நாம் நினைக்கும் காரணம் மணியோசை தீய சக்திகளை விரட்டி நல்ல சக்திகளை நம் அருகில் கொண்டு வரும் என்பது.
ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்றால் மணியோசை நமது மனதை தூய்மைப்படுத்தி நமது எண்ணம் முழுவதையும் கடவுளை நோக்கி இருக்கும் படி செய்கிறது என்பது தான். ஏனெனில் கோவில் மணி அந்த விதத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. மணியோசையை கேட்கும் பொழுது அது நமது இடது பக்க மூளையையும் வலது பக்க மூளையையும் முற்றாக இணைத்து வைக்கிறது. கோவில் மணியை அடித்தவுடன் அது ஏற்படுத்தும் எதிரொலி குறைந்தது ஏழு நொடிகளாவது இருக்கும். இந்த இடைவெளி தான் நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் இழுத்து கொள்ளச் செய்கின்றதாம்.
உணவில் ஏன் முதலில் காரத்தையும் இனிப்பை இறுதியிலும் சாப்பிட வேண்டும்?
நமது மூதாதையர்கள் சாப்பிடும் பொழுது முதலில் காரமான உணவையும் இறுதியில் இனிப்பையும் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதன் பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் கார உணவுகளை முதலில் சாப்பிடும் பொழுது அதன் செரிமானத்தை ஏற்படுத்தும் அமிலங்களை தூண்டுவதோடு செரிமானத்தையும் சுறுசுறுப்பாக்கிறது. இதனால் செரிமானம் விரைவாகவும் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நடைபெறும்.
அதே சமயம் இனிப்புகளில் உள்ள காபோவைதரேற்றுகள் செரிமானத்தை அதிக சிக்கல் ஆக்கும் இதனால் தான் இனிப்பை இறுதியாக சாப்பிட அறிவுறுத்த படுகின்றோம்.
சூரிய நமஸ்காரம்:
சூரிய நமஸ்காரம் பழங்கால மக்கள் காலை நேரத்தில் ஆற்றங்கரையில் சூரிய நமஸ்காரம் செய்வதை தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஏனெனில் காலை நேரத்தில் சூரிய ஒளிக்கதிர்களை நேரில் பார்ப்பது பார்வைத் திறனை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமின்றி காலை நேரத்தில் இதை செய்வதால் நாள் முழுவதும் எங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
அரச மரத்தை வணங்குதல்:
அரச மரத்தை வணங்குதல் நமக்கு பெரும்பாலும் அரச நிழலுக்கு தவிர வேறு எதற்கும் பயன்பெறுவதில்லை என்ற எண்ணம் உள்ளது. அந்த மரத்தின் சுவையான பழங்கள் இல்லை மிகவும் அதன் விறகு மிகவும் வலிமையானது இல்லை இருப்பினும் நமது முன்னோர்கள் அணைத்து தெருக்களிலும் வளர்த்து வந்தார்கள் ஏன் தெரியுமா?
அரச மரங்கள் முன்னோர்கள் அறிவார்கள் இரவு நேரத்திலும் ஆக்சிசன் வெளியிடும் வெகு சில மரங்களில் அரச மரமும் ஒன்று என்று என்று அதனால் தான் தெருவில் தொடக்கத்தில் அரச மரத்தை வளர்த்து வந்தார்கள் அதுமட்டுமின்றி அரச மரத்தின் இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை.
கோவிலுக்கு ஏன் செல்லவேண்டும்?
கோவில்கள் பெரும்பாலும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும். கோவிலில் மூலவர் கற்பகிரகத்தில் இருப்பார் மூலவரை வைத்த பின் தான் பெருபாலும் கோவில்களை கட்ட தொடங்குவார்கள். இந்த கற்பகிரகத்தில் தான் அதிக காந்த சக்தி இருக்கும். மூலவருக்கு அருகே செப்பு தகட்டில் வேத மந்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.
இதன் காரணம் என்னவென்றால் செப்பு தகடு பூமியின் காந்த அலைகளை கிரகித்து அதனை சுற்றுப்புறம் முழுவதும் பரவ செய்யும். ஒருவர் கோவிலுக்கு சென்று கற்பகிரகத்தை கடிகாரம் சுழலும் திசையில் சுற்றினால் உடல் அதிக அளவு நேர்மறை சக்தியை பெறும்.நமது ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியம் இந்த நேர்மறை சக்தி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்…