இந்து கலாச்சாரம்..
நம் இந்து கலாச்சாரம் பின்பற்றும் ஒவ்வொரு முறையிலும் சில அறிவியல் ரீதியான காரணங்கள் அடங்கி உள்ளது.பிறரை வணங்குவதில் தொடங்கி தரையில் அமர்ந்து உண்ணும் முறை வரை அறிவியல் சார்ந்தது தான்.நம் இந்துவின் கலாச்சாரத்துக்கான சில விடயங்களை நாம் இங்கு பார்போம்…..
வணக்கம் சொல்லுதல் :
நாம் ஏன் இந்த முறைகளில் வணங்குகிறோம்?
அதாவது இரு கரம் கூப்பி வணங்குதல் இது மரியாதை மற்றும் அன்பை வெளிபடுத்தும் முறைகள். யோகாவில் இதை அஞ்சலி முத்ரா என்று சொல்லுவார்கள் நம் உடலில் விரல் நுனிகள் தான் அதிக எனர்ஜி கொடுக்கும் பகுதியாக உள்ளது. இது நம்மில் பலருக்கு தெரிந்ததே.
எப்போது நம் கையில் விரல் நுனிகளை சந்திக்க வைக்கிறமோ அப்போது மூளையுடன் தொடர்புடைய நரம்புகள் உடலை சுறு சுறுபாக்கிறது ஒரு மன அமைதியை கொடுக்கிறது. நம் உடலில் கைவிரல் ஒவ்வொன்றும் சில எனர்ஜியை கொடுக்கின்றது. சுண்டுவிரல் மனச்சோர்வையும் மோதிரவிரல் செயல்பாட்டையும் நடுவிரல் மெருகேற்றலையும் ஆள்காட்டி விரல் தனிப்பட்ட ஆன்மாவையும் கட்டைவிரல் இறுதி ஆத்மாவையும் குறிப்பிடுகின்றன. இதனால் விரல்களை சேர்க்கும் போது நம் உடலுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது தான் வணக்கம் சொல்வதில் அறிவியல் காரணம்.
பூஜையின் போது பட்டு அணிவது ஏன்?
பட்டுக்கு மின்காந்த சக்தியை ஈர்க்கும் மற்றும் வெளியிடும் ஆற்றல் உண்டு. உடலுக்கும் நம் உடைக்கும் இடையே இருக்கும் நிலையான உராய்வு மின்காந்த ஆற்றலை உருவாக்கும் பூஜையின் போது பட்டு உடுத்தி இருந்தால் உருவாகும் ஆற்றலை உடனே பெறும் அது அமைதியை ஏற்படுத்தும்.
திருமணமான பெண்கள் தலை வகு ட்டில் செந்தூரம் வைப்பது ஏன்?
இது திருமணமான பெண் என்பதை குறிப்பிடும் குறியீடு இல்லை இந்த செந்தூரம் சுண்ணாம்பு மஞ்சள் மற்றும் மெர்குரியால் ஆனது. இதில் இருக்கும் மெர்குரி இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் தாம்பத்தியம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் தான் கணவனை இழந்த பெண்கள் செந்தூரம் வைக்க அனுமதிக்கப்படுவது இல்லை இந்த செந்தூரம் நெற்றியில் இருந்து பிட்யூட்டரி சுரப்பி நோக்கி வைக்கப் படுகிறது பிட்யூட்டரி சுரப்பி தான் நம் உடலில் நடக்கும் எல்லா எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் காரணம்.
பெண்கள் வளையல் அணிவதன் காரணம் என்ன?
வளையல் சத்தம் வீட்டில் இருக்கும் எதிர்மறைகளை வெளியேற்றி விடும். பண்டைய ஆயுர் வேதத்தின் படி பெண்களின் எலும்புகள் ஆண்களின் எலும்புகளை விட பலவீனமானது. பாரம்பரிய முறைப்படி வளையல்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்படும் இந்த உலோகம் எனர்ஜியை தூண்டி உடலுக்கு சக்தியை கொடுக்கவும் உடலின் செயல்பாட்டை அதிகரிக்கும் மனிகட்டுக்கும் வளையல்களுக்கும் உள்ள உராய்வு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. வளையல்கள் வெறும் ஆபரணம் மட்டும் இல்லை உடலுக்கு நன்மை பயப்பதும் கூட.
கை கால்களில் மருதாணி வைப்பது ஏன்?
இந்து திருமணத்தைப் பற்றி நினைத்தாலே மருதாணி முக்கியமான ஒன்று மணப்பெண்ணின் கை கால்களில் மருதாணி வரையப்படும். அழகு ஒரு பக்கம் இருந்தாலும் அதில் அறிவியல் இருக்கிறது மருதாணி உடலை குளிர்ச்சியாக்கி தலைவலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?
மெட்டி அணிவது பெண்ணின் திருமண நிலையை உணர்த்துவதற்காக இல்லை அதற்கு பின் சில அறிவியல் காரணங்கள் ஒளிந்துள்ளது. பொதுவாக மெட்டி வெள்ளி உலோகத்தால் செய்யப்படுகின்றன. அதை காலில் இரண்டாவது விரலில் அணிவர் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். இரண்டாவது விரலில் தொடங்கும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்துடன் தொடர்புடையது. அந்த விரலில் மெட்டி அணியும் போது கர்ப்பப்பை வலிமையடையும் வெள்ளி ஓர் நற்கடத்தியும் கூட பூமியில் இருந்து சக்தியை பெற்று உடலுக்கு கொடுத்து முழு உடலையும் புத்துணர்ச்சி பெற செய்கிறது.
காதில் கம்மல் அணிவது ஏன்?
காதில் தோடு அல்லது கம்மல் அணிவதால் ஹெர்னியா போன்ற நோய்கள் குறையும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியை சீராக்கி மன சோர்வை கட்டுப்படுத்துகின்றது இதனால் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
துளசிச் செடியை வணங்குவது ஏன்?
துளசி புனிதம் என்று சொல்லப்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் உலகம் அறிந்த ஒன்று. இது ஒரு ஒரு அண்டிபயோடிக்கும் கூட சாதாரண சளியைக் கூட குணப்படுத்தும் தன்மையுடையது. இந்த துளசி இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடியது துளசி செடியை வீட்டில் வைத்து இருந்தால் பூச்சி மற்றும் கொசுக்களை விரட்டி விடும் பாம்புகளை விரட்டும் தன்மையும் கூட துளசி செடிக்கு உள்ளது.
தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஏன்?
பொதுவாகவே தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிடுவது தான் வழக்கம் அதனால் பல நன்மைகள் உள்ளது. இப்படி சம்மணமிட்டு சாப்பிடும் பொழுது நாம் உண்ணும் உணவு செரிமானம் எளிதில் நடைபெறும். அது மட்டுமில்லாமல் செரிமான சக்தியை அதிகரிக்கும் மூட்டு கோளாறுகள் வராமல் தடுக்கும் சம்மணமிட்டு உண்பது தான் உடலுக்கு மிகவும் நல்லது.
பெரியார் காலைத் தொட்டு வணங்குவது ஏன்?
வழக்கமாக பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது மரியாதையாக கருதுவோம். இது அறிவாற்றல் வலிமை புகழ் ஆகியவற்றைப் பெற்று தரும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இதற்குப் பின்னணியில் அறிவியல் காரணம் இருக்கிறது. இடது பக்கத்திற்கு எதிர்மறை ஆற்றலும் வலது பக்கத்திற்கு நேர்மறை ஆற்றலும் இருப்பதாக கருதப்படுகிறது நாம் பெரியவர்கள் காலில் விழும் போது நமது ஈகோவை அவர்கள் காலில் சரண்டர் செய்கிறோம். இது இரக்க குணத்தை ஏற்படுத்துகிறது. நம் பெரியவர்கள் காலைத் தொடும் போது அவர்களது எனர்ஜி நமக்கு கிடைப்பதாகச் கருதப்படுகிறது. இதனால் தான் பெரியவர்களின் காலை தொட்டு வணங்குவதற்கான அறிவியல் காரணம்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
Wall image source:https://elements.envato.com/silhouette-of-a-woman-praying-against-the-backgrou-TUX2MVH