ஹாலிவுட்பிரபலங்களின் தற்போதைய செயற்பாடுகள்
“புதிய ஆண்டு, புதிய நான்” உருவமாற்றத்துக்கு இதுவே சிறந்த தருணம் என வலியுறுத்துகிறார்கள் ஹாலிவுட் பிரபலங்கள்.
இந்த கொரோனா விடுமுறையானது உலகம் முழுவதிலும் அனைத்து வகை நிகழ்வுகளையும் முடக்கி விட்டுள்ளது. நாம் நம்முடைய வாழ்வில் தினமும் திட்டமிட்ட செயல்களும், சமூக ஒன்று கூடல்களும் என இருந்த நிலையில் இருந்து தற்போது இந்த கொரோனா வைரசை அடக்குவதற்காக நம்முடைய நேரத்தை முழுமையாக செலவிடுவதனால், ஒட்டுமொத்தமாக மந்த நிலைக்கு மாறி விட்டிருக்கிறோம். சிலருக்கு இது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே குலைத்தாதாக தோன்றுகிறது. ஆனால் இதே நிலை தான் பிரபலங்களுக்கும், மில்லியனர்களுக்குமா ? பேரழிவு காலத்தில் பிரபலங்களின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது ? இறுதி தருணத்தை நோக்கிய ஒரு பயணத்தில் மில்லியனர்களின் வெளிப்பாடு என்ன ?
“புதிய ஆண்டு, புதிய நான்”
சுய தனிமைப்படுத்தலானது, புகழ்பெற்ற பிரபலங்களுக்கு, அவர்களுடைய நேர மாற்றங்களில், ஒரு நிறுத்தம்-இடைவெளி அவ்வளவும்தான். அவர்கள் அதிலிருந்து, ஓரளவு பரவாயில்லை என்பது போல மீண்டு விடுவார்கள். இந்த காலத்தில் அவர்களுக்கான கச்சிதமான செயலாக இருப்பது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தான். நம்மில் சிலருக்கு இந்த சர்வதேச பரவல் காலத்தில், அழகியல் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கான சுதந்திரம் இருக்கலாம். ஆனால், அதேவேளையில் பிரபலங்கள் அதனை நிரூபித்தே விடுகிறார்கள். 18 மார்ச் அன்று TMZ உடனான நேர்காணலில் “இது ஏறத்தாழ கிறிஸ்மஸ் விடுமுறை போலத்தான்” என்கிறார் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான DR.Terry Dubrow.
“Beverly Hills இல் நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்ட சில வகை அழகு சிகிச்சைகளையும் அழகுசாதன அறுவைசிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியாது. நாம் இப்போது orange country இல் திறந்திருக்கின்றோம்.அவர்களில் பலருக்கு முகப்பொலிவாக்கம் செய்ய வேண்டுமாம். தங்கள் திரைப்படத்துறையில் தங்களுக்கான மிகப்பெரிய வெற்றிகளை உருவாக்கபோவதாக அவர்கள் நம்புகின்ற சில முக்கிய முகமாற்ற சிகிச்சைகளை செய்து கொள்ள விரும்புகின்றனர்.” என தெரிவிக்கின்றார்.
இந்த கொரோனா காலத்தில் நடந்த இன்னொரு சுவாரசியமான சம்பவம் பற்றி அறிக
image source:https://outthisyear.com/