இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நமக்கு மேலே என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்கின்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கின்றதால் தான் மனிதன் விண்வெளி ஆராய்ச்சியில் இன்றும் பல மைல் கற்களை எட்டி உள்ளான்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வானது செவ்வாய் கிரகத்தில் மனிதனின் வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிக்காக இதுவரை பல ஆய்வு வாகனங்களை அனுப்பி இருக்கின்றது. அவற்றுள் தற்பொழுது அனுப்பப்பட உள்ள வாகனத்திற்கான பெயரினை மக்களிடம் பரிந்துரைக்குமாறு நாசா விட்டிருந்தது அதற்காக முன்மொழியப்பட்ட 27,000 பெயர்களில் இருந்து “பெசவேரன்ஸ்” விடாமுயற்சி என்கின்ற பொருள் கொண்டுள்ள பேரினை நாசாவானது தெரிவு செய்துள்ளது இப்பெயர் தரம் 7 இல் கல்வி பயிலும் ஒரு மாணவனால் முன்மொழியப்பட்டது ஆகும்.
இந்த வாகனமானது பல புதிய ஆய்வு சாதனங்களை எடுத்துச் செல்கிறது இதில் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவுக் கருவி Mastcamz செவ்வாய்க் கோளின் தரை தோற்றங்களை தெளிவாக பதிவு செய்து பூமிக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அத்துடன் இதை தண்ணி வாகனத்தின் அசைவுகளை ஒருங்கிணைப்பதில் பங்களிப்புச் செய்யும். சூப்பர் கேம் ஒளிப்பதிவு கருவியானது மேற்பரப்பில் காணப்படும் பாறை தோற்றங்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல் பாறைகளில் காணப்படும் கனிய வளங்கள் மற்றும் சேதன மூலக்கூறுகள் பற்றி தகவல்களை பெறக்கூடியது இதைத் தவிர PIXL இந்த கருவியானது பாறைகளில் உள்ள மூலகங்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் தகவல்களை தரும் எனவும் SHERLOC புறவு தா லேசர் கதிர்களை உபயோகித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நாசா அனுப்பிய விண்வெளி ஆராய்ச்சி வாகனங்களின் பெயர்கள் வாய்ப்பு (Opportunity) மற்றும் ஆர்வம் (Curiosity) என்பனவாகும்.
image source:https://www.euronews.com/2020/03/05/nasa-s-new-mars-rover-gets-name-percy-short-n1150961