இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
அண்மைய காலங்களில் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களுக்கிடையான கலந்துரையாடல்களும் மிகவும் புகழ்பெற்று இருக்கக்கூடிய ஒரு வார்த்தை நூடுல்ஸ் மண்டை. அது என்ன நூடுல்ஸ் மண்டை ?
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்,ஷா ரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் முன்னணி நடிப்பிலும் எம்எஸ் பாஸ்கர் கௌதம் , வாசுதேவ் மேனன், ரமேஷ் திலக் மற்றும் சந்தோஷ் ஆகியோரின் துணை நடிப்பிலும் வெளிவந்து வெகுவிமர்சையாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஓ மை கடவுளே திரைப்படத்தின் உடைய மிகவும் புகழ்பெற்ற வார்த்தை தான் அந்த நூடுல்ஸ் மண்டை.
சிறு வயது முதலே நண்பர்களாக இருக்கின்ற இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வளர்ந்ததும் பின்பு திருமண வயது அடைகிறார்கள். அதில் அசோக் செல்வனை ரித்திகா சிங் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அப்பொழுது அதற்கு உடனே சரி என்று சொல்கின்ற அசோக் செல்வனும் ரித்திகா சிங்கும் தங்களுடைய ஒரு வருட திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி விவாகரத்துக்கு வந்து நிற்கின்றார்கள். விவாகரத்து கொடுக்கப் போகும் தருணத்தில் ரித்திகா சிங் மயங்கி விழ அசோக் செல்வனை வந்து அணுகுகின்ற வேறு ஒரு வக்கீல் தன்னுடைய நீதிபதி இந்த விவாகரத்தை எடுத்துத் தருவார் என்று கூறி அவரை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே நடைபெற்ற அனைத்து விடயங்களையும் அசோக்செல்வன் கூற சிறிது நேரத்தில் அந்த நீதிபதியாக காட்சி தருகின்ற விஜய்சேதுபதி தன்னைத்தானே கடவுள் என்று அறிமுகம் செய்து கொண்டு அசோக் செல்வனுக்கு வாழ்க்கையில் இரண்டாவது ஒரு வாய்ப்பு கொடுத்து திருமணத்துக்கு சம்மதம் சொன்ன தருணத்திற்கு அனுப்பி வைக்கிறார். மீண்டும் தனது வாழ்க்கையையே அங்கிருந்து ஆரம்பிக்கும் அசோக்செல்வன் ரித்திகா சிங்கிடம் திருமணத்துக்கான விண்ணப்பத்தை அவர் கூறும் பொழுது முடியாது என்று கூறி புதிய வாழ்க்கை பாதையை ஆரம்பிக்கிறார். அந்த வாழ்க்கையில் அவர் திருப்தி அடைந்தாரா இல்லை மீண்டும் ரித்திகா சிங் உடன் சென்று சேர்ந்ததா என்பதே படத்தின் மிச்சக் கதை.
சுருட்டையான முடியுடன் மிகவும் ஆண்கள் விரும்பத்தக்க வகையில் ஒவ்வொரு ஆணும் ஆசைப்படக் கூடிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனமும் கவரும் நூடுல்ஸ் மண்டையா க அழகாக காட்சி தருகிறார் ரித்திகா சிங்.
கதையோடு நகர்கின்ற பாடல்கள், அசோக் செல்வனின் நடிப்பு, இளைய மனங்களை தவழுகின்ற அழகிய காட்சிகள், சிறிது கூட சண்டை காட்சிகள் இல்லாத மிகவும் மனதுக்கு இனிமையான பட வடிவமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் இன்றைய இளைஞர்கள் மனதில் ஓ மை கடவுளே திரைப்படத்தை ஒரு நிலையான இடத்தை பெற்றுக் கொள்ளச் செய்திருக்கிறது.
“உனக்கு சொன்னா புரியாது மச்சான்” , “நூடுல்ஸ் மண்டை” போன்ற வசனங்கள் உண்மையிலேயே தத்ரூபமாக இளைஞர்களின் நட்பை எடுத்துக் காட்டுவதோடு படத்தை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொண்டு உள்ளன.
வாழ்க்கையில் எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை இரண்டாவது வாய்ப்பை நீங்களாகவே கற்பனையில் உருவாக்கி சிறிது சிந்தித்து பார்த்தீர்களானால் உங்களுக்கு இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையின் உண்மை புரியும் என்கின்ற அழகான ஒரு கதையினை எடுத்துக் கூறிய அந்த இளைஞர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
image source:https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/oh-my-kadavule/movie-review/74104692.cms