டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் கூடியதாக புதிய வகை கொரோனா
வைரஸான ஒமிக்ரோன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தடுப்பூசிகளையும் மீறி மனித உடம்பை தாக்கும் என்பதால் உலக நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளன. சுமார் 2 ஆண்டுக்குப் பிறகு மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் குறித்து பல நாடுகளும் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின் படி இந்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக இருக்கும். அதே வேளை தற்போது, உலகில் உள்ள தடுப்பூசிகளின் வீரியத்தை தாண்டி பாதிக்கலாம், அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் நுழையும் சக்தி கொண்டதாகவும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய கொடிய வகை வைரஸ் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட, அமெரிக்கா மற்றும் கனடா மற்றும் ஆசிய
நாடுகள் தென்னாபிரிக்காவின் விமான சேவைகளை மறுஅறிவித்தல் வரை நிறுத்தியுள்ளன.
மீண்டும் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்லுமோ என்ற
அச்சம் மூன்றாம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
wall image