நாய்கள் மற்றும் பூனைகளுக்கு அடுத்த படியாக அதிக மக்கள் மீன்களை செல்ல பிராணியாக வளர்க்கின்றனர்.அதிலும் தற்பொழுது பல நாடுகளில் கடல் மீன்களை வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர்.அவ்வாறு அதிகமாக வளர்க்கப்படும் பத்து மீன்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்..
Flower Horn

இவ்வகை மீன்கள் தற்பொழுது இந்தியா உட்பட பல நாடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறது தலைக்கு மேல் பெரிய கொம்பு போல் அமைப்பை பெற்று உள்ளதால் இந்த மீனுக்கு FlowerHorn என பெயரிடப்பட்டுள்ளது பத்து முதல் பன்னிரண்டு வரை ஆயுட் காலம் கொண்டவை.
Lion Fish

பசுபிக் பெரும் கடல்களில் அதிகமாக காணப்படும் இவ்வகை மீன்கள் ஆபத்தான விஷம் கொண்டவை ஆகும். கவர்ச்சியான வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் முட்களை கொண்ட இம் மீன்கள் இரையை வேட்டையாடுவதற்கு விஷம் கொண்ட இந்த முட்களை பயன்படுத்துகிறது. வெள்ளை, கறுப்பு ,சிவப்பு என பல நிறங்களில் இம் மீன்கள் காணப்படுகின்றது. பத்து முதல் பதினைந்து அங்குலம் வரை நீளமும் ஒன்று முதல் ஐந்து வரை கிராம் உடன் வளரும் இம் மீன்களை பல நாடுகளில் செல்ல பிராணியாக வளர்க்கின்றனர்.
Symphysodan Discus

இரண்டு முதல் ஏழு அங்குலம் வரை வளரும் இம் மீன்கள் மனிதனை போன்று அறிவு பூர்வமான செயல்களை செய்கின்றன. அமேசன் நதிகளில் அதிகமாக காணப்படும் இவ்வகை மீன்கள் பல்வேறு நாடுகளில் செல்லப் பிராணியாக காணப்படுகின்றன. நீலம், வெள்ளை, பச்சை சிகப்பு என பல வர்ணங்களில் காணப்படும் இவ்வகை மீன்கள் ஆமை மற்றும் பெரிய மீன்களுக்கு இரைகளாகின்றன.
Morrish Idol

வரிக்குதிரை போன்ற தோற்றத்தில் கூட்டமாக வாழும் இவ் வகை மீன்கள் அதிகமாக இந்திய பெருங் கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இது அதிகமாக கடலில் அடிபகுதியில் காணப்படும் மீன்கள் ஒன்பது அங்குலம் வரை வளரக் கூடியவை.
Trigger Fish

பசுபிக் கடல்களில் அதிகமாக காணப்படும் இவ் வகை மீன்களில் சுமார் 40 வகை உள்ளன இவ் வகை மீன்களை பல வகையான நாடுகள் உணவுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மீன்கள் மனிதனை கடிக்கும் அளவுக்கு ஆபத்தானது இவை சுமார் மூன்று அங்குலம் வரை வளரக் கூடியவை.
French Angel Fish

உலகம் முழுவதும் நூற்றுகணக்கான ஏஞ்சல் Fish வகைகள் உள்ளன ஒவ்வொரு நாடுகளிலும் பல வகையான பல நிறங்களில் காணப்படுகின்றன.இந்த வகை French Angel Fish அதிகமாக கரேபியன் மற்றும் மேக்சிகோ வலைகுடா கடல்களில் காணப்டுகின்றது. கறுப்பு நிற தோலில் தங்க நிற செதில்களை கொண்ட இம் மீன்கள் இரண்டு அடி நீளம் வரை வளர கூடியது.
Blue Face Angel Fish

நீல நிற முகத்தை கொண்ட இந்த மீன் Angel மீன் குடும்பத்தை சார்ந்தது. பசுபிக் கடலில் இந்த மீன்கள் அதிகமாக காணப்படுகின்றன. கடல் பாசிகளை உணவாக உட்கொள்கின்றன. இவைகள் 14 அங்குலம் நீளம் வரை வளர கூடியவை
மேலும் இவைகளால் 10 வருடம் உயிர் வாழ முடியும். அழகிற்காக வளர்க்கும் மீன் என்றாலும் மீன் தொட்டியில் வைத்த பிறகு ஆபத்தாகும். ஏனெனில் இவைகளின் பற்கள் அரை அங்குல நீளம் வரை வளர கூடியது.
Banggai Cardinal Fish

இவ் வகை மீன்கள் சாதுவான மீன்கள் ஆகும். இவை உலகில் அதிகமாக விற்கப்படும் அழகு மீன்கள் ஆகும். இவ்வகை மீன்கள் இந்தோனேசியாவில் அதிகமாக காணப்படுகின்றன. 08 சென்டிமீட்டர் வரை வளரும் இவ்வகை மீன்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவு. அதாவது இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
Clown Fish

இந்த Clown Fish 28 அரிய வகைகள் காணப்படுகின்றது. சிகப்பு வெள்ளை கறுப்பு வெள்ளை என பல நிறங்களில் காணப்படும் இவ்வகை மீன்கள் இந்தியன் மற்றும் பசுபிக் கடலிலும் அதிகமாக காணப்படுகின்றது. கூட்டம் கூட்டமாக வாழும் இவ் வகை மீன்கள் ஒரே முறையில் 1000 கணக்கான முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கும் திறனை கொண்டது. இவ்வகை மீன்கள் 16 சென்டிமீட்டர் வரை வளரும் இவ்வகை மீன்களின் ஆயுள் காலம் மூன்று முதல் ஆறு வரையான ஆண்டுகள் உயிர் வாழும்.
Mandarin Fish

உலகில் மிகவும் கவர்சிகரம் நிறம் கொண்ட மீன்கள் பச்சை நீளம் சிகப்பு வர்ணங்களில் காணப்படும் கவர்சியான மீன் இதுவே ஆகும். இது பசுபிக் கடலில் அதிகமாக காணப்படுகின்றது. 6 சென்டிமீட்டர் அளவில் வளரும் இம் மீன்கள் 15 வருடம் உயிர் வாழும்.
மேலும் பல சுவாரஸ்யமான தகவல் அறிந்து கொள்ள எங்களுடன் இனைந்திருங்கள்
image source:https://www.ecopetit.cat/ecvi/iTJJJJ_home-movie-pictures-finding-nemo-wallpapers-fish-tank/