பிரார்த்தனை
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு மாபெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது பிரார்த்தனை என்பது உண்மையில் இறைவனோடு பேசுவதே ஆகும். வணங்குவது என்பது இறைவனின் முன்பு நிற்பதே ஆகும்.இறைவணக்கம் என்பது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை நினைவு கூறுவதே ஆகும். எல்லா வகையான அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் மூலக் கருவாக விளங்கும் இறைவனை வணங்குவதால் தியானம் செய்வதாலும் நமது உடலும் உள்ளமும் நாடிகளும் அமைதியை பெறுகின்றன.
எனவே தான் இவ்வுலகில் தோன்றிய எல்லா முனிவர்களும் சித்தர்களும் வாழ்க்கையில் பிரார்த்தனையின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். பிரார்த்தனை எமது ஆன்மாவிற்கு அளிக்கப்படும் உணவாகும்
பிரார்த்தனையின் பொழுது கீர்த்தனைகளையும் பாடல்களையும் உதட்டளவில்
சொல்லாமல் உள்ளம் உருகி அவைகளை பக்தியுடன் பாட வேண்டும்.
நமது உள்ளங்களை தூய்மையாகவும் புனிதமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்
என்று இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். உடலை நிமிர்த்தி
நேராக வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒரு இடத்தில் அசையாமல் உட்கார்ந்து
இருப்பது அவசியம்.
பிரார்த்தனை செய்வதற்கு காலை நேரத்தை போல மாலை நேரமும் மிகவும்
ஏற்றது. இது மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மன
ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு மனத்தூய்மை இன்றியமையாத
ஒன்றாகும் விடுதிகளில் பிரார்த்தனை மண்டபங்களை மிகவும் தூய்மையாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரார்த்தனைக் கூட்டங்களில் ஏதேனும் தூசியும் குப்பையும் காகிதத் துண்டுகள்
காணப்படும். அவைகளை உடனே எடுத்து குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். பிரார்த்தனை மண்டபத்தின் புனிதத் தன்மையையும் தூய்மையையும்
பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
உலக நன்மைக்காகவும் தன் நாட்டின் நன்மைக்காகவும் தன் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த நன்மைக்காகவும் இவ்வாறு மனித இனம் முழுமைக்கும் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற சுவாரசியமான பதிவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் எமது தமிழ் கலாச்சாரம் பக்கத்தை பார்வையிடுங்கள்.