எல்லோரும் தங்கள் வாழ் நாளில் ஒரு கட்டத்தில் ஒரு முறையாவது திடுக்கிட்டு எழும்பல் அல்லது தூக்கக் குழப்பத்தை அனுபவித்திருக்கலாம். உங்கள் தசைகளின் திடீர் இயக்கம் காரணமாக நீங்கள் திடுக்கிட்டு விழிக்கும் தருணங்களே இவை. இவ்வசைவுகள் சிறிய இழுப்புகள் முதல் வலிப்பு வரை இருக்கலாம், திடுக்கிட்டு எழுந்தவுடன் நீங்கள் எழுந்து படுக்கையில் நேராக உட்கார்ந்து கொள்கிறீர்கள். நாம் பொதுவாக சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் தூங்கினாலும், இது எப்படி நடந்திருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.
திடுக்கிட்டு எழுவதற்கான காரணங்கள்
பொதுவாக, தூக்கத்தின் போது உங்கள் மூளை உங்களை முடக்குகிறது.
நாம் பொதுவாக தூக்கத்தின் போது ஏன் அசைவதில்லை என்பதைப் புரிந்து கொள்வது முதலில் முக்கியம். ஏனென்றால், நாம் மிகவும் தெளிவான விம்பமுடைய கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது கூட, அந்தக் கனவுகளில் நாம் எங்கு சென்றாலும், படுத்த அதே இடத்தில் தான் எழுந்திருக்கிறோம். நீங்கள் உறங்க ஆரம்பித்ததும் மூளையில் தசைகள் செயலில் இருக்க அனுமதிக்கும் செல்களை முற்றாக முடக்கும் ரசாயனங்கள் வெளியாகும். எனவே உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்கினாலும், உங்கள் உடலில் உள்ள தசைகள் முடங்கிப் போகின்றன.
விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடையில் மாறுவதன் மூலம் இவ்வாறு நடைபெறுகிறது.
சில நேரங்களில் நாம் ஏன் முடங்கிப்போயிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள, மூளையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நமது வழக்கமான வாழ்க்கையை கட்டுப்படுத்தும் 2 முக்கிய அமைப்புகள் உள்ளன. முதலாவது ரெட்டிகுலர் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது சுவாசம் போன்ற அடிப்படை உடலியல் செயல்முறைகளை நிர்வகிக்கும் பகுதியாகும். இது முழு பலத்தில் இருக்கும் போது, நாங்கள் விழிப்புடனும் அமைதியுடனும் உணர்கிறோம் – அதாவது நாங்கள் விழித்திருக்கிறோம்.
இந்த அமைப்பை எதிர்ப்பது வென்ட்ரோலேட்டரல் ப்ரீபொப்டிக் நியூக்ளியஸ் ஆகும், இது தூக்கத்தை உந்துகிறது. மூளையின் இந்த பகுதி உங்கள் தசைகளை நகர்த்துவதற்கான உங்கள் திறனை மாற்றும் ரசாயனங்களை வெளியிடுகிறது. இப்போது நீங்கள் தூங்கச் செல்லும் போது, உங்கள் மூளை விழிப்புணர்வு நிலையிலிருந்து தூக்க நிலைக்கு மாறுகிறது. ஆனால் இது “ஆன்-ஆஃப்” சுவிட்ச் போல வேலை செய்யாது. உண்மையில், நீங்கள் அதை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் ஒரு நெகிழ் பொறிமுறையாக (படிப்படியாக மாறும்) நினைக்கலாம்.
ஆனால் சில நேரங்களில் உங்கள் மூளை உண்மையான உலகத்துக்கும் கனவு உலகத்துக்கும் இடையில் கட்டுப்பாட்டுக்காக போராடுகிறது.
இந்த மாற்றம் எப்போதும் சீராக இயங்காது. ஒரு தடுமாற்றம் இருக்கும் போது, உங்கள் மூளை உண்மையான உலகத்துக்கும் கனவு உலகத்துக்கும் இடையில் கட்டுப்பாட்டுக்காக போராடுகிறது. ஆகவே, நீங்கள் ஒரு கால்பந்தை உதைக்க வேண்டும் என்று கனவு காணும் போது, இது திடீரென்று உங்கள் பக்கத்தில் படுத்திருப்பவரை உதைப்பதற்கான நிஜ சமிக்ஞையாக உடலுக்கு அனுப்பப்படக் கூடும். இது எல்லா வேலைகளிலும் உங்களை எழுப்பாது, ஆனால் இயக்கம் போதுமான அளவு தீவிரமாக இருக்கும் போது, நீங்கள் முழித்துக் கொள்ளலாம்.
இது எங்கள் உயர் பாலூட்டி எதிர்வினைகளுடன் (மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உள்ள பாலூட்டிகள் ) தொடர்புடையதாக இருக்கலாம். தூக்க குழப்பம் அல்லது உறங்கலின் போது திடீர் விழிப்புகள் ஏன் நமக்கு வருகின்றன என்பதற்கான ஒரு பொதுவான எண்ணம் என்னவென்றால், இது நமது பரிணாம வளர்ச்சியின் காரணமான விளைவாக நமக்குள் இருக்கும் அமைப்பு என்பதாகும். அதாவது இது ஒரு பழங்கால உயர் பாலூட்டி எதிர்வினை ஆக இருக்கலாம், அதாவது இந்த எதிர்வினை நம் மூதாதையர் மரங்களில் நன்கு தூக்கத்தில் இருந்த போது தசைகள் தளர்வதை எச்சரித்தது. உங்கள் தசைகளில் ஏற்படும் தளர்வை நீங்கள் ஒரு மரத்திலிருந்து விழுவதற்கான அறிகுறியாக மூளை அடிப்படையில் தவறாக புரிந்து கொள்வதோடு, உங்களைக் காப்பாற்ற உங்கள் தசைகள் விரைவாக செயற்பட எச்சரிக்கை விடுக்கிறது. இதனால் நீங்கள் திடுக்கிட்டு எழுகிறீர்கள்
பதட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கும் வரை தூக்கக் குழப்பங்கள் இயல்பானவை.
தூக்கக் குழப்பங்கள் முற்றிலும் இயல்பானது மற்றும் கவலைப்பட ஒன்றுமில்லாதது. சிலருக்கு இது பதட்டத்தை ஏற்படுத்தும். இது, அடிக்கடி நிகழும் போது எரிச்சலுக்கு வழிவகுக்கும் – குறிப்பாக உங்களுடன் படுக்கையில் படுத்துள்ளவருக்கும். இந்த அதிகரித்த கவலை மற்றும் தூக்கமின்மை அதிக தூக்கக் குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக நேர்மறையான பின்னூட்ட வளையம் ஏற்படும். இது உங்களுக்கு நடக்கிறது என்றால், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ள ஒரு தூக்க நிபுணரை அணுகுவது நல்லது.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போல் மேலும் பல உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்….