பலாப்பழத்தின் மறைந்துள்ள மருத்துவ பயன்கள்.. பலாப்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்கமாமல் இருக்கும் சிறியவர்கள் இருந்து பெரியோர்கள் வரை சாப்பிடும் ஒரு சுவையான பழம் தான் இந்த பலாப்பழம்…இதில் மறைந்துள்ள மருத்துவ பயன்களை இங்கு நாம் பார்ப்போம்!!
கொளுத்தும் கோடை வெயிலில் ஆறுதலாக அமைவது இந்த பருவத்தில் விளையும் சில பழங்கள் தான். மற்ற மாதங்களில் விரும்பினாலும் கிடைக்காத தர்பூசணி, மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றின் முக்கிய சீசனாக கோடைக்காலம் உள்ளது.
மிகப் பெரியதாக இருக்கும் பலாப்பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையானது பல பழங்களின் கலவை போன்று இருக்கும். பலாப்பழத்தின் கொட்டையும் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும், கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும்.பலாப்பழத்தில் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. பலாப்பழத்தின் சுவை மட்டுமல்ல அதில் அடங்கியுள்ள மருத்துவ குணமும் அதிகம் தான்.
பலாப்பழத்தின் இனிப்பு சுவைக்கு காரணம், இதில் உள்ள ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் தான். பலாப்பழத்தை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
தைராய்டு ஹார்மோன், உடலில் அதிகரிக்க தாமிரச்சத்து மிக அவசியமாக உள்ளது. பலாப்பழத்தில் தாமிரச்சத்து அதிகம் உள்ளது.
பலாப்பழத்தில் வைட்டமின் ‘சி” அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாமரத்தின் வேரை வேக வைத்து, அந்த நீரோடு பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ” அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும்.
பலாப்பழத்திலுள்ள வைட்டமின் ‘ஏ” சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழமாக இருக்கிறது.
மேலும் சில பயனுள்ள தகவல்களை பெற இங்கு செல்லவும்
image source:https://www.youtube.com/watch?v=XW2V34S1NQA