Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்!!

  • July 5, 2020
  • 651 views
Total
41
Shares
41
0
0

ஆலிவ் எண்ணெயின் பயன்கள்…

ஆலிவ் எண்ணெய் என்ற பெயர் புதிதான விஷயம் போன்று ஒலித்தாலும், இந்த எண்ணெயை பழங்காலத்தில் இருந்தே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் Olive oil என்று அழைக்கப்படும், ஆலிவ் எண்ணெயை தமிழில் இடலை எண்ணெய் என்று அழைப்பார்கள். இடலை எண்ணெய் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆலிவ் எண்ணெயை முன்னோர்கள் ‘திரவ தங்கம்’ என்று அழைப்பார்கள்…

ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்!!
image source:https://www.thestatesman.com/lifestyle/food/olive-oil-variety-1502668488.html

சருமத்தை பொலிவாக்கி இளமையை காக்கும் மகிமை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. புற்று நோயை தடுக்கும் வல்லமை கொண்டது என்பதால் ஐரோப்பியர்கள் தங்களின் அன்றாட உணவில் அதிகளவு ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்கின்றனர்.

நம் ஊர்களில் இருப்பதை போன்று இல்லாமல் அவர்களுக்கு இதய நோய்கள் பரவலாக இல்லாமல் இருப்பதற்கும் இந்த ஆலிவ் எண்ணையே காரணம் இது மற்ற தாவர எண்ணெய்களைப் போல விதையிலிருந்தோ அல்லது கொட்டையிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை. முற்றிலும் பழத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய். பச்சை நிற ஆலிவ் காய்களில் இருந்து பச்சை நிற எண்ணெய்யும் சற்று பழுத்த பழங்களில் இருந்து மஞ்சள் நிற எண்ணெய்யும் எடுக்கப்படுகிறது.

ஆலிவ் எண்ணெயின் தனித்தன்மையே அதன் நறுமணமும் வித்தியாசமான சுவையும் தான் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஆகிய நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் 8/1 என்ற விகிதத்தில் இருப்பதால் இது இதயத்தை பாதுகாக்கிறது. இதனால் தான் உலகிலேயே மிகவும் ஆரோக்கியம் தரும் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. நல்ல கொழுப்பு அடங்கிய இந்த எண்ணெய் ஆனது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது என்பது கூடுதல் சிறப்பு.

ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்!!
image source:https://downloadmockup.com/free-psd/olive-oil-bottle-mockup-free-psd/

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, துருக்கி நாடுகளிலிருந்து ஆலிவ் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக ஆலிவ்எண்ணெய் அடர்த்தி குறைந்த கெட்ட கொழுப்பை குறைத்து அடர்த்தி அதிகமுள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதால் பக்கவாதம் இதயநோய் வரும் வாய்ப்புகளை தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் A கரோட்டின் போன்ற காரணிகள் புற்றுநோய் கிருமி தொற்று சர்க்கரை நோய் மற்றும் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆலிவ் எண்ணெயினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!! 

குளிர் காலங்களில் குழந்தைகளின் சருமத்தை மென்மையாக்குவதுடன் சரும நோய்கள் வருவதைஆலிவ் எண்ணெய் தடுக்க வல்லது இதனால் குழந்தைகளின் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.மேலும் உடல் முழுவதும் ஆலிவ் எண்ணெய் தடவுவதால் எலும்பு மற்றும் தசைகளுக்கு உறுதியையும் எடை ஏற்றத்தையும் சீரான ரத்த ஓட்டத்தையும் குழந்தைகள் பெறுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு டயாபர் அணிவதால் ஏற்படும் புண்ணில் இருந்தும் இது குழந்தைகளை பாதுகாக் கிறது.

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க, ஆலிவ் எண்ணெய் பயன்படுகிறது.இரைப்பை குடல் மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு ஆலிவ் எண்ணெய் நன்மையளிக்கிறது ஆலிவ் எண்ணெய் உணவு பொருட்களை குடல் வழியாக மென்மையாக எடுத்துச் செல்வதன் மூலம், செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஆலிவ் ஆயிலை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், மலச்சிக்கலை முற்றிலும் தடுத்து, அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை இருமுறை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை காலையில், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள்; மற்றொன்றை இரவு உறங்க செல்லும் முன் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால், உணவு உண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு ஆயிலை உட்கொள்ளலாம். இதை தினமும் செய்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒரு தேக்கரண்டி எடுத்து – கலந்து பருகுவது மலச்சிக்கலில் இருந்து, இயற்கையான முறையில் விடுபட உதவும். தினமும் ஒருமுறை இந்த பானத்தை பருகுவது நல்லது; மாலையில் எலுமிச்சையுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து அருந்துவது, பெருங்குடலை சுத்தப்படுத்தி, உறங்குகையில் உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்!!
image source:https://www.medicalnewstoday.com/articles/313416

ஆலிவ் எண்ணெயை, உணவு முறையில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்; இதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஆலிவ் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் தழும்புகள், அழற்சி, வீக்கம் போன்றவற்றை போக்க உதவுகிறது.

இந்த பாதிப்புகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் கொண்டு, தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இது சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த உதவும். உடலில் ஏற்பட்டிருக்கும் வெளிப்புற மற்றும் உட்புற காயங்களை குணப்படுத்தி, அவற்றால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்!!
image source:https://zetenfarm.com/olive-oil-benefits-for-healthy-skin-how-to-apply-it-on-face/

ஒரு சில நபர்களுக்கு ஆலிவ் எண்ணெயால் ஒவ்வாமை ஏற்படலாம்; ஆலிவ் எண்ணெய் தொடர்பான ஒவ்வாமை கொண்ட ஒரு நபர், இந்த எண்ணெயை தனது சருமத்திற்கு பயன்படுத்தினால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆலிவ் எண்ணெய்க்கு எதிராக போராட தொடங்கும். இதனால், அலர்ஜி ஏற்படலாம் ஆலிவ் எண்ணெய் குறித்த ஒவ்வாமை உணர்வு கொண்டவர்கள், இதை பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் தடிப்புகள், சிரங்கு போன்றவை தோன்றி பரவலாம். ஆகையால் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த தொடங்கும் முன், முறையான மருத்துவ ஆலோசனைப் படி நடந்து கொள்வது நல்லது.

ஆலிவ் எண்ணெயின் பயன்கள் பலவற்றை அறிந்தோம் சருமம், கூந்தல், உடல் ஆரோக்கியம் என ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆலிவ் ஆயிலின் பயன்களை எண்ணிப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளதல்லவா! தகுந்த மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொண்ட பின், மருத்துவரின் அறிவுரைப்படி ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

பல குணம் கொண்ட இந்த ஆலிவ் எண்ணெய் ஆனது குழந்தைகளுக்கு கிடைத்த வரம் என்றால் மிகையில்லை. ஆலிவ் எண்ணெயை வெது வெதுப்பான சூட்டில் தேய்க்கும் பொழுது வலி நிவாரணியாக செயல்பட்டு மூட்டு வலியை போக்குகிறது ஆலிவ் எண்ணெயை பயன் படுத்த விரும்புகிறவர்கள் இன்றைய சூழலில் அதனை கவனமுடன் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. ஏனெனில் சந்தைகளில் ஆலிவ் எண்ணெ என்ற பெயரில் எராளமான எண்ணைகள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே இதனை வாங்கும் போது உணவுக் கட்டுப்பாடு துறையின் அனுமதி இருக்கிறதா என்பதை பொதுமக்கள் பார்த்து வாங்குவது அவசியம்.

ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்!!
image source;https://www.ifmch.com/6-health-benefits-of-using-olive-oil-for-babies/

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Wall image source:https://www.acneeinstein.com/olive-oil-for-acne/#gref

Post Views: 651
Total
41
Shares
Share 41
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
குங்குமப் பூவின் மகிமைகளும் அதன் மருத்துவ குணங்களும்!!

குங்குமப் பூவின் மகிமைகளும் அதன் மருத்துவ குணங்களும்!!

  • July 4, 2020
View Post
Next Article
கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படத்தின்  திரை விமர்சனம்!!

கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படத்தின் திரை விமர்சனம்!!

  • July 5, 2020
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.