குங்குமப் பூ
குங்குமப் பூ என்று சொன்னாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது குழந்தை சிகப்பாக பிறப்பதற்காக சாப்பிடுவது என்பது தான். குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாக சிகப்பா பிறக்குமா? இதை பற்றி சந்தேகம் இருந்தால் கூட மனைவி கர்ப்பம் ஆன உடன் எல்லா கணவர்களும் மறக்காமல் குங்குமப் பூ வாங்கி கொடுத்து விடுவார்கள். குங்குமப் பூ சாப்பிட்ட பலருக்கும் குழந்தை கறுப்பாக தான் பிறந்து உள்ளது. இதுக்கு என்ன காரணம் குங்குமப் பூ பற்றி நமக்கு அதிக அளவு விழிப்புணர்வு இல்லாதது தான். இன்னும் குங்குமப் பூவை பற்றி நிறைய விஷயங்கள் இருக்கிறது. வாருங்கள் அவை என்னவென்று உள்ளே போய் பார்க்கலாம்.
குங்குமப் பூ தாவரத்தின் பூவில் இருந்து சேர்க்கப்படுகிற காம்புகளை தான் குங்குமப் பூ என்று சொல்கிறோம். இந்த குங்குமப் பூ அக்டோபர்,ஜனவரி மாதத்தில் தான் அதிகமாக பூக்கும் அந்த பூவை பறித்து காம்பை காய வைத்து அதில் குங்குமப்பூ தயாரிக்கிறார்கள். ஒரு லட்சத்து அறுபத்தையாயிரம் பூக்களில் இருந்து வெறும் ஒரு கிலோ குங்குமப்பூ மட்டும் தான் சேகரிக்க முடியும். தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய நாம் ஆறாண்டு முதல் பத்தாண்டு வரை நிலத்தில் பயிரிட வேண்டும் அப்போதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும்.
குங்குமப்பூ தயாரிக்கவும் அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் விலையும் அதிகமாக தான் இருக்கிறது சில பேர் இதை மிக மலிவாய் வேணும் என்பதால் குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூவை வாங்கி உபயோகிக்கிறார்கள்.
பொதுவாக இந்த குங்குமப்பூவை பார்த்தால் இந்தியாவில் காஷ்மீர் மற்றும் பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், நாடுகளில் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். இதில் ஸ்பெயின் இல் விளையும் குங்குமப்பூ முழு தரமானது என்று சொல்கிறார்கள். தரமான குங்குமப்பூ என்று சொன்னால் அதில் 80% சதவீதம் சிகப்பாகவும் 20% சதவீதம் மஞ்சளாகவும் இருக்கும் தரமற்றது என்றால் 20% சதவீதம் மட்டுமே சிகப்பாக இருக்கும்.
சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற குங்குமப்பூவை சாயம் பூசி அதை சிகப்பா மாற்றி அதன் பிறகு விற்பனை செய்கிறார்கள். அதே போல் தேங்காய் துருவலில் உள்ள மெல்லிய நூலில் சாயம் பூசி கலப்படம் செய்கிறார்கள். இந்த கலப்படம் கலந்த பொருட்களை தான் மிக குறைந்த விலையில் நமக்கு தருகிறார்கள். அது தெரியாமல் ஒரு சிலர் அதை வாங்கி அதை பயன்படுத்துகிறார்கள். கர்ப்பம் தரித்து இருப்பவர்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று சொல்லுவார்கள் அது கொஞ்சம் கூட உண்மையில்லை.
குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் கறுப்பாக பிறப்பதற்கும் நம் பரம்பரையின் உள்ள ஜீன்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் தான். அது தவிர குங்குமப்பூவின் பங்கு எதுவும் இல்லை என சொல்லலாம்.
குங்குமப்பூவை பொருத்தவரைக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு நிறைய பயன்களை கொடுக்கும்!!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து ஒன்பது மாதம் வரை இந்த குங்குமப்பூவை சாப்பிடலாம் இரத்தம் சுத்தமாகும். குழந்தை பிறந்த பின்னும் சாப்பிடலாம் ரத்த சோகை ஏற்படாமல் தடுத்து நல்ல பசியைத் தூண்டும். ஆனால் குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவு தான் நாம் சாப்பிட வேண்டும் அதிகமா எடுத்துக்கொள்ள கூடாது.
கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் பிரச்னை இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க இந்த குங்குமப்பூ சிறந்த மருந்தாகும் கூட சொல்லலாம். குங்குமப்பூ துவர்ப்புத்தன்மை இருப்பதால் குங்குமப்பூவை முக அழகிற்கும் உபயோகிக்கலாம். குங்குமப்பூ ஜீரணத்துக்கு ரொம்பவே நல்லது அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
வீட்டில் சமைத்து முடித்ததும் அந்த உணவில் குங்குமப்பூவை கொஞ்சம் கலந்து கொள்ளவும் அதனால் நல்ல மணம் வீசுவதும் உணவும் சுவையாக இருக்கும். முக்கியமான ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைப்பாடு, பிரச்சனைகளில் இது ரொம்பவே சிறந்தது அதைவிட வாய்ப்புண் குணமாக மிகவும் உதவியா இருக்கும்.
நாம் வாங்கும் குங்குமப்பூ அசலா அல்லது நகலா என்று எப்படி கண்டுபிடிப்பது?
கொஞ்சம் சுடு தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து குங்குமப்பூவை போட்டால் அந்த பூ மெதுவாக கரைந்து அந்த தண்ணீர் தங்க நிறத்தில் மாறிவிடும். அதுவும் அதிலிருந்து நல்ல நறுமணம் வீசும் சொல்லப்போனால் 24 மணி நேரத்துக்கு பூவின் நிறம் வந்து கொண்டே இருக்கும். அப்போ அது கண்டிப்பாக அசல் குங்குமப்பூ தான் என்று கண்டுபிடித்துவிடலாம்.
இதுவே நகல் குங்குமப்பூவாக இருந்தால் சுடு தண்ணீரில் போடும் போதே தண்ணீர் சிகப்பு நிறத்தில் மாறி விடும் அதன் நறுமணமும் வீசாது. குறிப்பாக கொஞ்ச நேரத்திலேயே அந்த பூவில் இருந்து வரும் நிறமும் நின்று விடும். அப்போது அது கண்டிப்பா அது நகல் குங்குமப்பூ தான் என்று கண்டுபிடிக்கலாம்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
Wall image source:https://exclusive.multibriefs.com/content/whats-so-great-about-saffron-a-lot-apparently/food-beverage