நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உணவுகள்…
நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் அதிக சத்துக்கள் கொண்டதாகவும் நோய் எதிர்ப்பு கொண்டதாகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மூன்று வேளை நாம் சாப்பிடுகின்றோம் அந்த உணவுகள் சத்து உள்ளதா என நாம் கவனம் செலுத்த வேண்டும். சிலர் நன்றாக சாப்பிடுவார்கள் ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சோர்வாக இருப்பார்கள். மேலும் அடிக்கடி நோய்வாய்ப் படும் நிலையில் இருப்பார்கள். இதற்கு சாப்பிடும் உணவில் இரத்த சோகையை நீக்கும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் இல்லாமல் இருப்பதும் நோய் எதிர்ப்புசக்தியை கொடுக்க கூடிய உணவுகள் இல்லாமல் இருப்பதும் முக்கியமான காரணம் ஆகும்.
நாம் சாப்பிடும் உணவு என்பது அணைத்து வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த உணவுகளாக கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நாம் பார்க்க போகும் உணவுகளை சேர்த்து வந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த சோகையும் நீங்கும்.
முருங்கைக் கீரை:
முருங்கைக் கீரையில் மற்ற கீரைகளை விட விட புரதச்சத்து,நார்ச்சத்து அதிக அளவு வைட்டமின் எ கால்சியம்,மக்னீசியம் அதிக இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துகள் நிறைந்து உள்ளது. இதில் ஒன்பது வகை அமினோ அமிலங்கள் உள்ளன.வேறு எந்த தாவர உணவுகளில் இந்த சிறப்பு இல்லை என்றே சொல்லலாம். அதே போன்று மற்ற தாவர உணவுகளை விட 25 மடங்கு இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதில் விட்டமின் எ அதிகம் உள்ளதால் கண்பார்வைத் திறன் அதிகரிக்கும். மேலும் பார்வை சம்பந்தமான மற்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
முருங்கைக் கீரையில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து
- மலச்சிக்கல் மற்றும் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
- வயிற்றுப்புண்களை ஆற்றும்.
- கை,கால் மூட்டு வலிகளைப் போக்கும்.
- இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்கும்.
- இதய நோய்களை நெருங்க விடாது.
- தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் உதவும்.
முக்கியமாக முருங்கைக் கீரையில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவும். முருங்கைக் கீரையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாகும். இதில் உள்ள இரும்புச்சத்தால் முடியும் நன்றாக வளரும். ஆண்/பெண் மலட்டுத்தன்மையை போக்கும். சொல்லப் போனால் முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் எல்லாம் விலகியே இருக்கும். எனவே முருங்கை கீரையை வாரம் 2 முறை சூப்பாகவோ பொரியல் அல்லது பருப்பு சேர்த்து கூட்டு சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.
பேரிச்சம் பழம்:
தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வரும் பொழுது உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இதனால் சாதாரண சளி முதல் டெங்கு காய்ச்சல் வரை நம்மை நெருங்காது. இதில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுக்கும் என்பதால் நம்மை எப்போதும் சுறுசுறுப்போடு வைத்திருக்கும். முடி கொட்டுவதை தடுக்கும் மேலும் இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் உறுதிப்படுத்தும். அதே போன்று சிலருக்கு தூசி, புகை என்று எதற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும் இவர்கள் தினமும் மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பு அறவே நீங்கிவிடும்.
அதே போன்று காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டால் மூளை செயலாற்றி அதிகரித்து அறிவாற்றல், நினைவாற்றல் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். அதே போன்று தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் பல மடங்கு பாதுகாப்போடு இருக்கும்.
பேரிச்சம்பழம் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தும். இதனால் உடலில் இருக்கும் கழிவுகள் நச்சுகள் உடலில் தங்காது மேலும் கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். அதே போன்று உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் மூன்று பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது.
முக்கியமாக ஆண்களின் விந்து விருத்திக்கு இரவில் படுக்கும்பொழுது சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பசும்பால் குடித்து வந்தால் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்தும் எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மூன்று பேரீச்சம் பழம் சாப்பிடுவது நல்லது.
நாட்டுக்கோழி முட்டை:
நாட்டுக்கோழி முட்டையில் புரோட்டின்கள் வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் ஒமேகா-3 மட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்ல முட்டையின் மஞ்சள் கருவில் லூடின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளமாக நிறைந்துள்ளதால் அவை கருவிலே பாதுகாத்து கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
அதிகப் புரதம் நிறைந்த நாட்டுக்கோழி முட்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்கும். அடுத்து முட்டையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கல்லீரலில் படிந்து இருக்கும் கெட்ட கொழுப்புகளை அறவே நீக்குகிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் இரத்தத்தில் படிவதைத் தடுப்பதால் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் மற்றும் இதய தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. அதேபோன்ற இதில் உள்ள கோலைன் மூளை மற்றும் நரம்புமண்டலம் ஆகியவற்றை கட்டுபடுத்த கூடியது. மேலும் இதில் உள்ள வைட்டமின் டி எலும்பு பலம் பெறவும் உடல் ஆரோக்கியதிற்கும் நோய்எதிர்ப்பு சக்திக்கும் அவசியம் எனவே முக்கியமான ஊட்டச்சத்து உள்ள முட்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை பெற முடியும்.
பெரிய நெல்லிக்காய்:
பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் சி கால்சியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது. வைட்டமின் சி அதிகளவில் உள்ள நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் முடி கொட்டுதல் பிரச்சனைகள் சருமபிரச்சினைள் நீங்குவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும் மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் ரத்தசோகை நீங்கும். அல்சரை குணப்படுத்தும் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடியது.
முக்கியமாக உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும். அதே போன்று உயர் ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தகுழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து இதயத்தில் ரத்தஓட்டத்தை அதிகரிக்கும்.
ரத்தசர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். கல்லீரலில் சீரான செயல்பாட்டிற்கு உதவும் எனவே இவ்வளவு நன்மைகள் கொண்ட நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது நல்லது.
நிலக்கடலை:
நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் நியாசின் உள்ளதால் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயன்படுகிறது. நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாக்கிறது. அதே போன்று இதில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
அடுத்து உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் இதில் உள்ளது. மேலும் இதில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோயில் இருந்து பாதுகாப்பதோடு என்றும் இளமையாக நம்மை வைத்திருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடி நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் நம்மை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாக மற்ற சத்தான உணவுகளை சாப்பிடாதவர்கள் கூட முருங்கைக்கீரை நெல்லிக்காய் / நிலக்கடலை / பேரீச்சம்பழம் /நாட்டுக்கோழி முட்டை இந்த உணவுகளை அடிகடி அல்லது தினமும் நம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் நோயில்லாமல் ஆரோக்கியமாக நிச்சயம் வாழ முடியும்……..
இது போல் மேலும் பல உடல் ஆரோக்கியம் தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.