FBI இன் மின்னஞ்சல் Serversஐ ஹேக் செய்து இணைய(Cyber) பாதுகாப்பு பற்றிய போலியான மின்னஞ்சல்களை அனுப்ப ஹேக்கர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
FBIயின் மின்னஞ்சல் அமைப்பை(Email system) ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து அதன் மூலம் போலியான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
eims@ic.fbi.gov என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் Urgent: Threat actor in systems என்ற தலைப்பில்,கிட்டத்தட்ட 100,000 பேருக்கு மேல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மின்னஞ்சலைப் பெறுபவர் இது உண்மையான FBI சேவையகங்களிலிருந்து வந்ததாகவே காண்பார்.DKIM சரிபார்ப்பும்(DKIM verification கூட அசல் மின்னஞ்சலைப் போலவே இது உள்ளது.
இந்த மின்னஞ்சல் முகவரிகள் அமெரிக்கன் ரெஜிஸ்ட்ரி ஃபார் இன்டர்நெட் நம்பர்ஸ் (ARIN)(American Registry for Internet Numbers (ARIN)) தரவுத்தளத்தின்(database) உதவியுடன் பெறப்பட்டதாகவும், மேலும் இந்த போலி மின்னஞ்சல்கள் ஸ்பேமர்களுக்கு(Spam) எதிராக போராடும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான The Spamhaus நிறுவனத்திற்கு தான் முதலில் அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த மின்னஞ்சலின் உள்ளடக்கத்தின்படி, வின்னி ட்ரோயா என்ற பாதுகாப்பு ஆய்வாளர்(Security Researcher) மற்றும் அவருடன் தொடர்புடைய ஹேக்கர் குழு மற்றும் அவர் நடத்திய இணையத் தாக்குதல்(cyber-attack) பற்றிய தவறான தகவல்கள் இதில் காணப்பட்டதாக தெரிய வந்தது.
இருப்பினும், வின்னி ட்ரோயா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட ட்விட்டரில், இந்த attack ஆனது @pompompur_in என்ற பெயருடைய twitter account கொண்ட ஒரு நபரால் நடத்தப்பட்டதாக அறிவித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் attackன் போது “Hi its pompompurin. Check headers of this email it’s actually coming from FBI server.” என்று எழுதப்பட்ட Email தனக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
FBI தனது அறிக்கையில் இந்த attackஉடன் தொடர்புடைய hardware வை அகற்றவும் நெட்வொர்க்கை துண்டிக்கவும் அல்லது மூடவும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஹேக்கரால் அவர்களின் மற்ற தகவல் அமைப்புகளை அணுக முடியவில்லை என்றும், அந்த சர்வர் FBI இன் கார்ப்பரேட் மின்னஞ்சல் சேவையுடன் இணைக்கப்படவில்லை என்றும், ஆனாலும் அறிவிப்புகளை அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் FBI கூறுகிறது.
அத்துடன் இந்த பிரச்சனைக்கு மூல காரணமான மென்பொருள் பாதிப்புக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக FBI சுட்டிக்காட்டியுள்ளது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ் பாவனையாளர்களுக்கு 2022 மார்ச் 1ல் காத்திருக்கும் கசப்பான செய்தி