ஹெட்ஃபோன்கள்..
ஹெட்ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் நம்மில் பலரும் பாடல்களை கேட்பதற்காக ஹெட்ஃபோனை பயன்படுத்துகிறோம். எனினும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாம் பெரிதாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. பயணத்தின் போதோ அல்லது தூங்குவதற்கு முன்னரோ ஹெட்ஃபோனில் பாடல் கேட்பது என்பது பலரும் பின்பற்றி வரும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. பேருந்துகளில் ரயில்களில் ஏன் நடந்து செல்லும்போது கூட ஹெட்ஃபோனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஹெட்ஃபோன் இல்லாமல் பாடல்களை கேட்பது மற்றவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதே ஹெட்ஃபோன் பயன்படுத்தும் பலரும் கூற்றாகும்.
சிலர் ஹெட்ஃபோன் பயன்படுத்தும்போது ஒலியை துல்லியமாக அறிய முடிகிறதாகவும் கூறுகின்றனர். ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும் ஹெட்ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தொடர்ந்து ஹெட்ஃபோனை பயன்படுத்தி வந்தால் நமது காதில் உள்ள ஜவ்வுகள் பாதிக்கப்படக் கூடும். இதன் காரணமாக காதுகள் செவிடு கூட ஆகலாம். பொதுவாக 80 முதல் 85 வரை யிலான டெசிபலுக்கு மேற்பட்ட ஒலிகளை கேட்கும் போது நமது காதுகள் பலமாக பாதிக்கப்படுகின்றன.
ஹெட்ஃபோன்களை குறைந்த ஒலி அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாதவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும் ஹெட்ஃபோன்களை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். வேண்டும் என்றால் சிறிது நேரம் காதுகளுக்கு ஓய்வு அளித்து விட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
ஹெட்ஃபோன்களை சுத்தமாக வைத்துக் கொள்வது..
நம்மில் பலரும் இதை செய்ய தவறி விடுகிறோம் அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறோம். அதே போல அடுத்தவர்களின் ஹெட்ஃபோன்களை நாமும் பயன்படுத்தக் கூடாது. நமக்கு சொந்தமானவற்றை மற்றவர்களுக்கு கொடுக்கவும் கூடாது. இதன் மூலம் காதில் ஒருவருக்கு உள்ள நோய்கள் மற்றவருக்கும் தொற்றிக் கொள்ளும் ஹெட்ஃபோன்களில் இருந்து உற்பத்தியாகும் மின்காந்த அலைகள் நமது மூளையை நேரடியாக பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நமது மூளையை நேரடியாக பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமல்லாமல் ஹெட்ஃபோன்களை பயன்படுத்திக் கொண்டே சாலையில் செல்பவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வாகனம் ஓட்டும் போதும் சாலையில் நடந்து செல்லும் போதும் ஹெட்செட் பயன்படுத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும் முடிந்தளவு ஹெட்ஃபோன்களில் பாடல் கேட்பதை தவிர்த்து விட்டு இயற்கையின் ஓசையை கேட்டு பழகிக் கொள்ளுங்கள். இதன் மூலம் செவிகளுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் இனிமை ஏற்படக்கூடும்.
இது போன்ற மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.
Wall image source:https://in.pinterest.com/pin/723953708824036199/