ஆஸ்துமா ஒரு நுரையீரல் நோய்.!!
ஆஸ்துமா பல காரணங்களால் ஏற்படக் கூடும். அவற்றுள் முக்கியமான காரணம்
நரம்புத்தளர்ச்சி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு
அலர்ஜி அல்லது ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது. அவர்களுக்கு உணவு
முறையில் ஏற்படுகின்ற ஒரு சிறிய மாற்றமோ அல்லது சூழலில் இருக்கின்ற
வழியில் இருக்கும் தூசிகள் முதலானவற்றால் ஏற்படுகின்ற மாற்றங்கள் அல்லது
குளிர்காலத்தில் மழையில் நனைதல் போன்றவற்றால் கூட அலர்ஜி ஏற்படும்.
ஆகவே தூசு அலர்ஜி , உணவு அலர்ஜி போன்ற எத்தனையோ அலர்ஜி ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஸ்டாலின் எனும் ஒரு வகையான ரசாயன பொருள் மேலே சொல்லப்பட்ட ஏதேனும் ஒரு காரணத்தால் அதிகம் ஆகிவிட்டாலும் உடலில் அலர்ஜி ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும். நரம்புத் தளர்ச்சியால் நுரையீரல்கள் இயல்பாக இயங்க முடியாமல் போய்விடும்.இதன் விளைவாக உடலில் இருக்கும் அசுத்தக் காற்றை வெளியேற்ற
முடியாமலும் ஆக்சிஜன் எனப்படும் உடலுக்கு தேவையான சுவாசக் காற்று
உள்ளே செலுத்த முடியாமல் திணறுவது மூச்சுத் திணறல் மூச்சு இளைப்பு எனும்
ஆஸ்துமா தொல்லை தரும்.
ஆயுர்வேதத்தை பொறுத்த வரை ஆஸ்துமாவை கட்டுப்படுத்த கூடிய மருந்து
திரிபலா சூரணம் எனப்படுகிறது. திரிபலா சூரணம் சரியான முறையில் சாப்பிட
வேண்டும். அதனை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டால் கண் கூர்மை தான்
ஏற்படுமே தவிர ஆஸ்துமா குணமாகாது. சூரணத்தைத் தேன் நெய் ஆகியவற்றால்
குழைத்து சாப்பிட்டால் கண்பார்வை கூர்மை ஆவதோடு மலச்சிக்கல் குணமாகும்.
மலச்சிக்கல் குணமாக அதன் காரணமாக சிறிது சிறிதாக ஆஸ்துமா குணப்படும்.
நெல்லிக்காய்கள் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்தும்.
ஆஸ்துமா ஒரு தீவிரமான நோய் ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பெரிய ஆபத்தை உண்டாக்கும். ஆஸ்துமா காற்றுப் பாதையில் அடைப்பு ஏற்படக்கூடும், அதை முழுமையாக குனபடுத்த முடியாது.
கட்டுப்படுத்தப்படும்போது கூட, அறிகுறிகள் திடீரென மோசமடையும் அபாயம் உள்ளது. இந்த நுரையீரல் விரிவடைதல் ஆஸ்துமா தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது.ஆஸ்துமா தாக்குதல்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு போதுமானதாக மாறும். சில சந்தர்ப்பங்களில், அவை மரணத்திற்கு வழிவகுக்கும்.
ஆஸ்துமா நோயாளர்கள் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது உதாரணமாக குளிர்ச்சியான பழங்கள்,தயிர் போன்ற உணவு பொருட்களையும், வீட்டில் நாய் பூனை வளர்ப்பதை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் இடங்களில் இருக்க கூடாது. ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம்.
புகை பிடிப்பதால் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது.தியானம் செய்வதால் ஆஸ்துமாவை விரட்டி விடலாம்.மேலும் சுத்தம் சுகாதார வாழ்க்கை முறை பின்பற்றுவதன் மூலமும் ஆஸ்துமா பாதிப்பை குறைக்கலாம்!
மேலும் பல உடல்ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
image source :https://commons.wikimedia.org/wiki/File:An_Asthma_patient_taking_medication_using_an_inhaler.png