Tesla நிறுவனமானது 1.5 பில்லியன்டாலர் பெறுமதியான Bitcoin ஐ வாங்க தீர்மானித்துள்ளது.இது விரைவில் Tesla நிறுவனம் பிட்காயின் கட்டண முறையைக் கொண்டு வரும் என்பதற்கான அறிகுறியாகவே காணப்படுகின்றது.
டெஸ்லா(Tesla) நிறுவனம் தனது முதலீட்டுக் கொள்கையை(investment policy) 2021 ஜனவரியில் மாற்ற முடிவெடுத்ததுடன், தற்போது U.S. Securities and Exchange Commissionக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Bitcoin வாங்க தீர்மானமெடுத்துள்ளது. டெஸ்லா(Tesla) நிறுவனம் தனது முதலீட்டுக் கொள்கையை(investment policy) 2021 ஜனவரியில் மாற்ற முடிவெடுத்ததுடன், தற்போது U.S. Securities and Exchange Commissionக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Bitcoin வாங்க தீர்மானமெடுத்துள்ளது.
கடந்த காலங்களில், டெஸ்லாவின் வாடிக்கையாளர்கள் டெஸ்லா வாகனங்களை வாங்கும் போது பிட்காயினை பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளுமாறு அதன் நிறுவனர் எலோன் மஸ்க்கிடம் கூறியுள்ளனர்.அதாவது பிட்காயினை கட்டண முறையாக ஏற்றுக்கொள்வது.
அதனடிப்படையில் எலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கு சுயவிவர பயோவிலும்(profile bio) #bitcoin என குறிப்பிட்டுருந்தார், இது bitcoin விலையில் 7% அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
கடந்த ஜனவரி மாதம், மாற்றப்பட்ட முதலீட்டுக் கொள்கைகளின்படி,டெஸ்லா நிறுவனம் அதன் இருப்பு சொத்துக்களுக்கு( reserve assets) டிஜிட்டல் நாணயங்கள் அல்லது தங்கத்தை வாங்கும் என குறிப்பிட்டுருந்தது. அதன்படி எதிர்காலத்தில் தங்கள் தயாரிப்புகளுக்கான கட்டண முறையாக பிட்காயினை ஏற்றுக்கொள்ளுவதாகவும் குறிப்பிட்டுருந்தனர்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயினின் விலை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் டெஸ்லா(Tesla) நிறுவனத்தின் Bitcoin முதலீடு தொடர்பான செய்தியுடன் Bitcoinன் பெறுமதி தற்போது $46,000 டாலர்களைத் தாண்டிவிட்டது. இத் திடீர் விலையேற்றம் Cryptocurrency Exchangesல் மிகப் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் Binance, Coinbase, Gemini மற்றும் Kraken ஆகிய வலைத்தளங்களிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்