மனிதர்களாகிய நாம் எங்கள் கிரகத்தை மையத்திலிருந்து மேற்பரப்பு வரை ஆராய்ந்துள்ளோம். மேலும் விண்வெளியில் பயணிக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் நம் கிரகம் இன்னும் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை.
நாம் ஒருபோதும் பூமியின் கவசத்தை அடையவில்லை
நில நடுக்கவியலாளர்கள் நமது கிரகத்தின் உள் மையமானது திடமானது என்றும், வெளிப்புறம் திரவமாகவும் உருகியதாகவும் நம்புகிறார்கள். அடுத்ததாக கவசம் உள்ளது. அது தனது மேலோட்டோடு மேலே மிதக்கிறது. இருப்பினும், அது எதைக் கொண்டுள்ளது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஏனென்றால் நாம் அதை ஒரு போதும் அடைந்ததில்லை: அதன் ஆழம் 30 கிமீ முதல் 2,900 கிமீ வரை உள்ளது. மேலும் மனித குலம் இது வரை தோண்டிய ஆழமான கிணறு ரஷ்யாவின் கோலா போர்ஹோல் ஆகும், இது வெறும் 12.3 கி.மீ ஆழம் மட்டுமே சென்றுள்ளது.
துருவங்கள் மாறலாம்
பூமியின் காந்த துருவங்கள் நகர்ந்து திசையை முழுவதுமாக மாற்றக் கூடும். மேலும் இது பல முறை நடந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சமீபத்திய இடமாற்றம் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அது மீண்டும் நிகழுமாம் ஆனால் ஏன் என்று யாருக்கும் தெரியாது.
எங்களுக்கு இரண்டு நிலவுகள் இருந்தன
4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு இரண்டு செயற்கைக் கோள்கள் இருந்தன என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டாவதாக இருந்த நிலவு சுமார் 1,200 கி.மீ தூரத்தில் இருந்தது என்றும் சந்திரன் செல்லும் அதே சுற்றுப் பாதையில் சுற்றிச் சென்றது என்றும் கூறப்படுகிறது. சந்திரனின் இரு பக்கங்களும் ஏன் வேறுபடுகின்றன என்பதை இது போன்ற ஒரு பேரழிவு விளக்கக்கூடும்.
நிலவு நடுக்கம்
சந்திரனிலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்பது சிலருக்குத் தெரியும். இருப்பினும், அவை மிகவும் சக்தி வாய்ந்தவை அல்ல. மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன. சூரியன் மற்றும் பூமியின் அலை சக்திகள் மற்றும் விண்கற்கள் வீழ்ச்சியடைவதால் அவை நிகழ்கின்றன என்று ஒரு கோட்பாடு உள்ளது.
பூமி மிகவும் வேகமாக சுழல்கிறது
பூமி மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் சுழன்று கொண்டிருக்கிறது, மேலும் சூரியனைச் சுற்றியுள்ள அதன் இயக்கம் மணிக்கு 108,000 கிமீ வேகத்தில் உள்ளது. இருப்பினும், அதன் வேகம் மாறும் போது மட்டுமே இயக்கத்தை நாம் உணர முடியும். நிலையான வேகம் மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக, நாம் அதை உணர முடிவதில்லை.
நேரம் “வளர்ந்து வருகிறது”
620M ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் 21.9 மணி நேரம் நீடித்தது. பூமி படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இது 100 ஆண்டுகளுக்கு சுமார் 70 மில்லிசெக்கன்கள் என்ற விகிதத்தில் நிகழ்கிறது. எனவே ஒரு நாள் 24 மணிநேரம் என்பது 100 மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்.
விசித்திரமான ஈர்ப்பு
எங்கள் கிரகம் ஒரு சரியான கோளம் அல்ல, எனவே அதில் உயர் மற்றும் குறைந்த ஈர்ப்பு பகுதிகள் உள்ளன. அத்தகைய ஒரு ஒழுங்கின்மை கனடாவில் உள்ள ஹட்சன் குடா ஆகும். பனிப் பாறைகள் வேகமாக உருகுவதால் ஏற்படும் அடர்த்தி குறைவாக இருப்பதால் அங்கு பலவீனமான ஈர்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
பூமியில் வெப்பமான மற்றும் குளிரான புள்ளிகள்
கிரகத்தின் வெப்பமான இடம் லிபியாவின் அஜீசியாவில் உள்ளது, அங்கு + 58 ° செல்ஸியஸ் வரை வெப்பநிலை உயர்கிறது. குளிரான இடம் அண்டார்டிக் ஆகும், அங்கு -73 ° செல்சியஸ் வரை குறைகிறது. ஆனால் மிகக் குறைந்த வெப்பநிலை ரஷ்ய வோஸ்டாக் நிலையத்தில் ஜூலை 21, 1983 அன்று பதிவு செய்யப்பட்டது (-89.2 С).
கிரகம் கடுமையாக மாசுபடுகிறது
இது உண்மையில் செய்தி அல்ல. இருப்பினும், விண்வெளி வீரர்கள் 1978 ஆம் ஆண்டில், பூமியின் பார்வை இப்போது நாம் காணும் படத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தது என்று கூறுகிறார்கள். ஏராளமான விண்வெளி குப்பைகள் மற்றும் கழிவுகளால் கிரகத்தின் நிறம், நீலம், பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து பழுப்பு, சாம்பல் மற்றும் கருப்பு நிறமாக மாறி வருகிறது.
பூமி இரும்பு, ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
எங்கள் கிரகத்தின் கூறுகளை நாம் பிரித்தால்,அது இப்படி இருக்கும்: 32.1% இரும்பு, 30.1% ஆக்ஸிஜன், 15.1% சிலிக்கான் மற்றும் 13.9% மெக்னீசியம். பெரும்பாலான இரும்பு (சுமார் 90%) மையத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் மேலோடு அதிக ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது (47%).
பூமி ஊதா நிறமாக இருந்தது
பண்டைய தாவரங்கள் ஒளியை உறிஞ்சுவதற்கு குளோரோபிலுக்கு பதிலாக ரெடினலப் பயன்படுத்தின. அவை சிவப்பு மற்றும் நீல நிறங்களை பிரதிபலிக்கச் செய்தன. இதன் விளைவாக ஊதா நிறத்தைக் கொடுத்தன. தற்செயலாக, சில பாக்டீரியாக்கள் இன்னும் ரெடினலை பயன்படுத்துகின்றன.
மறைக்கப்பட்ட கடல்
விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 410-660 கி.மீ ஆழத்தில் பெரியளவில் நீரைக் கண்டுபிடித்தனர். இது 2.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. மேலும் புவிக்கவசத்தில் கிடைத்த ரிங்வுட்மைட்டு பல மர்மங்களை அவிழ்த்துள்ளது. அங்குள்ள நீர் பெரும் அழுத்தத்தில் உள்ளது, பூமியின் அனைத்து பெருங்கடல்களையும் மூன்று மடங்கு நிரப்ப அதன் அளவு போதுமானது. நிலத்தடி கடல் வெடிப்பு காரணமாக கடல்கள் தோன்றின என்ற கோட்பாட்டை இந்த நிலத்தடி கடல் உருவாக்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்
பிற கிரகங்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய பல வருட ஊகங்களுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் சில துப்புக்களை கண்டறிந்துள்ளனர். உயிர்வாழ்வுக்கு தேவையான ஒரு முக்கிய மூலக்கூறு செவ்வாய் கிரகத்தில் இருப்பதற்கான அறிகுறிகள், செவ்வாய்கிரகத்தின் கேல் பள்ளத்தில் உள்ள அமைப்புகளில் காணப்படுகின்றன. மேலும், சில பெரிய காபன் சார்ந்த மூலக்கூறுகள் செவ்வாய் கிரகத்தின் மண்ணில் இருக்கின்றன. அவை ரோவரில் இருந்து மாசுபட்டதன் விளைவாக மட்டும் உருவாகவில்லை எனத் தெரிவதால், பூமிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்துள்ளன என்று நமக்குத் தெரிகின்றன.
இக்கட்டுரையை வாசிக்க மேலுள்ள லிங்கில் அழுத்தவும்
இது போன்ற மிகவும் சுவாரசியமான விஞ்ஞான தகவல்களை அறிந்து கொள்ள எமது தொழில்நுட்பம் பகுதியைப் பார்வையிடுங்கள்.