உங்கள் சிறிய வயதில் பாடசாலைக்கு வருகை தந்த ஒரு வங்கியாளர் அல்லது வங்கிப் பிரிவினர் உங்களிடம் சிறிய வங்கிப் புத்தகங்கள் அல்லது உண்டியலைக் கொடுத்து சேமிக்கப் பழக்கியது நியாபகம் உள்ளதா ? அது உங்களுக்கு ஒரு சிறந்த பாடம். ஆனால் எந்த வயதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பழக்கக் கூடிய அல்லது செய்து காட்டக்கூடிய சேமிப்புப் பற்றிய இன்னும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. இக்கட்டுரையில் ஒரு நிதி நிபுணர் ஒவ்வொரு வயதிலும் உங்கள் குழந்தைக்கு பணத்தைப் பற்றி எவ்வாறு கற்பிப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
நம் சமூகத்தில் உள்ள அனைவரும் சரியான பண நிர்வாகத்தை கற்பிப்பதற்காக, குறிப்பாக குழந்தை பருவத்தில், அதை எப்படி செய்வது என்பது குறித்த சில தொழில்முறை உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள இந்தக் கட்டுரை பயன்படும் என நம்புகின்றோம்.
வயது 2 முதல் 3 வரை
2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு புரிவதில்லை, ஆனால் நாணயங்களின் பெயர்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் சேமிப்பை செய்யத் தொடங்கலாம் என்று மருத்துவர் டோரதி சிங்கர் கூறுகிறார். அவ்வாறான விளையாட்டுகளில் ஒன்று “அடையாளம்”. உங்கள் பிள்ளை வெவ்வேறு நாணயங்களை சரிபார்க்கலாம், அவற்றின் வண்ணங்களையும் வடிவங்களையும் ஆராய்ந்து, பின்னர் பெயர்களைக் கூறும்போது அவற்றை படத்துடன் பொருத்தலாம்.
ஒரு நாணயத்தினை வைத்து குழந்தையை விளையாட விடுவதாயின் என்றால் பெரிய அளவிலான நாணயங்களைப் பயன்படுத்தவும். அதை விட மிகவும் முக்கியம் நீங்கள் அவர் அருகிலேயே இருக்கவேண்டும். நெருக்கமான மேற்பார்வையை தொடர்ந்து வழங்க வேண்டும்.
இளம் பிள்ளைகள் வீட்டில் “பாசாங்கு கடை” (சிறிய அளவிலான கடை விளையாட்டுக்கள்) விளையாடுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் வெளியே செல்லாமலே ஷாப்பிங் செய்வது பற்றிய சில புதிய தகவல்களை அவர்களுக்கு வழங்க முடியும். உங்கள் பணத்தை உணவுக்கு பதிலாக பரிமாறிக்கொள்ளுங்கள், அவர்களுக்கு கூப்பன்களைக் காட்டுங்கள், விற்பனை என்பது ஒரு வேடிக்கையான விளையாட்டு என்பதுபோல பேசுங்கள்.
பணம் சம்பாதிக்க நடிக்கவும், தானியப் பெட்டிகளையும் பழங்களையும் கடைப் பொருட்களாகப் பயன்படுத்தவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் குழந்தைக்கு இது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாற்றுவதன் மூலம், இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்.
வயது 4 முதல் 5 வரை
நீங்கள் கடையில் இருக்கும்போது, குழந்தையின் கையில் ஏதேனும் ஒரு பொருளை அல்லது சிறிதளவு பணத்தைக் கொடுத்து அதனை கண்காணிக்கச் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள், முக்கியமான கடமை ஒன்றைச் செய்கிறார்கள் என்று அவர்களுக்கு உணர்த்தவும்.
பணத்தைப் பற்றி ஒரு பாலகனுக்கு கற்பிப்பதற்கான மற்றொரு வழி, வீட்டில் ஒரு சிறிய மாதிரி உணவகத்தை அமைப்பது. நிஜ உலகில் உங்கள் குழந்தையை எதிர்காலத்தில் சரியான முறையில் உணவு விருந்துகளுக்கு தயார்படுத்துவதற்கும், உணவு மேசைப்பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு மேசையை எவ்வாறு அமைப்பது போன்ற விளையாட்டுக்கள் சில அடிப்படை விஷயங்களை விளக்குவதற்கு ஒரு சிறந்த வழியாகும். இரவு உணவுக்குப் பிறகு உங்கள் பிள்ளை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். இந்த பகுதிக்கு நீங்கள் பாசாங்கு (மாதிரிப்) பணத்தைப் பயன்படுத்தலாம்.
உங்கள் பிள்ளை காத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். இது சேமிப்பதற்கும் செலவு செய்வதற்கும் ஒரு முக்கியமான திறமையாகும். இதனைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. வரிசையில் காத்திருப்பதில் இருந்து தொடங்கவும், நீங்கள் விரும்பும் ஒன்றைப் பெற விரும்பினால் அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று சொல்லுங்கள். அதற்காக காத்திருக்கப் பழக்குங்கள்.
பயிற்சிக்காக, உங்கள் குழந்தை விரும்பும் நியாயமான விலையுள்ள ஒரு பொம்மையைக் கண்டறியவும். அதைப் பெறுவதற்கு அவர்கள் காத்திருந்து பணத்தை சேமிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு வாரமும் 50 ரூபாய் போன்ற ஒரு சிறிய குழந்தைக்குரிய கொடுப்பனவை கொடுங்கள். எல்லா பணத்தையும் ஒரேடியாக கொடுக்க வேண்டாம்.
வயது 6 முதல் 8 வரை
ஒரு கொடுப்பனவைப் பெற்ற பிறகு, உங்கள் குழந்தை அவர்களின் பணத்தை எவ்வாறு வைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு நோக்கங்களுக்காக அவர்களின் பணத்தை சேகரிக்க நீங்கள் அவர்களுக்கு உண்டியல்கள் அல்லது ஜாடிகளை கொடுக்கலாம். நீங்கள் அவர்களை வங்கியில் அழைத்துச் சென்று சேமிப்பை மிகவும் அற்புதமான நிகழ்வாக மாற்றக்கூடிய ஒரு வயது இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உங்கள் பிள்ளைக்கு ஒரு சேமிப்புக் கணக்கைத் திறந்து,தினமும் வைப்புத்தொகை இடுவதை வழக்கமாக வைத்திருப்பது எவ்வளவு நல்லது என்பதையும், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக வங்கி எவ்வாறு மக்களுக்கு பணம் செலுத்துகிறது என்பதையும் விளக்குங்கள். நாணயத்தின் பரிணாமத்தைக் காண்பிக்கும் அருங்காட்சியகத்தையும் நீங்கள் பார்வையிடலாம்.
வயது 9 முதல் 12 வரை
உங்கள் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும்போது, உங்கள் குழந்தையுடன் விலை லேபிள்களைப் படிக்க ஆரம்பித்து அவற்றை ஒப்பிடலாம். நீங்கள் ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது மற்றும் நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது தரத்தை சோதிப்பதையும் சொல்லிக் கொடுக்க மறக்க வேண்டாம். ஒரு வாரத்திற்கு ஒரு பிராண்டிலிருந்து ஒரு பற்பசையை பயன்படுத்த முயற்சி செய்யலாம், அடுத்த வாரம் மற்றொரு பிராண்டிற்கு மாறலாம். உங்கள் குழந்தையின் தெரிவுகளுடன் உள்ள வேறுபாடுகளைப் பற்றி விவாதித்து, எதை ஒன்றாக வாங்குவது என்பதைத் தேர்வுசெய்க.
நீங்கள் ஒரு முற்றத்தில் விற்பனைகள் நடத்தினால் உங்கள் பிள்ளையை பொறுப்பாக விடவும். இந்த வழியில், அவர்கள் பொறுப்பைப் பற்றி அறிந்து கொள்ளலாம் – ஆனால் உங்கள் குழந்தைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
வயது 13 முதல் 15 வரை
பங்குச் சந்தையைப் பற்றி அறிய இது ஒரு நல்ல வயது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நைக், கோகோ கோலா மற்றும் பிறவற்றைப் போன்ற உங்கள் பிள்ளைக்குத் தெரிந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது போல் நீங்கள் நடிக்கலாம். நிதிச் செய்திகளை ஒன்றாகப் பார்த்து எல்லாவற்றையும் எளிமையான வகையில் விளக்குங்கள். அவர்கள் சம்பாதிக்கும் லாபத்தைப் பற்றி விவாதிப்பதன் மூலம் சிறிது ஆர்வத்தை எழுப்ப முயற்சிக்கவும், ஆனால் அபாயங்களைக் குறிப்பிட மறக்க வேண்டாம்.
குடும்ப வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க பதின்வயதினரும் வரவேற்கப்பட வேண்டும். இது அவர்களது சிந்தனையை மேம்படுத்தவும், குடும்பப் பொறுப்புள்ளவராக ஆக்கவும் உதவும்.
உங்கள் பெற்றோர் பணத்தைப் பற்றி ஏதேனும் சுவாரஸ்யமான படிப்பினைகளைக் கொடுத்தார்களா? உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் குடும்பத்தின் இளைய உறவினர்களுக்கு பண மேலாண்மை பற்றி கற்பிக்க நீங்கள் என்ன திட்டங்களைப் பான்படுத்துகிறீர்கள் என எமக்குத் தெரிவியுங்கள்.
இது போன்ற வேறுபட்ட செய்திகளுக்கு மனித உறவுகள் பகுதியை பார்வையிடுங்கள்.
நன்றி : பிரைட் சைட்