கொரோனா நோயால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நாம் எல்லோரும் நன்கு அறிந்திருக்கிறோமா என்றால் கேள்விக்குறி. வைத்தியசாலையிலிருந்து சரியாகி வெளியேறியவர்கள் என்று சொல்லப்படுபவர்களுடன் கதைத்துப் பாருங்கள் தெரியும், எவ்வளவு தூரம் கஷ்டமாக இருக்கிறது என்று. உடலை முறித்து எடுத்து விடும். சுவாசம் சரியாக சில வாரங்கள் போகும். உணவுப் பிடிப்பு விட்டுப் போய் விடும். இவ்வாறான எக்கச்சக்க கஷ்டங்களுக்கு உள்ளவாதை விட முன்னாயத்தங்கள் நல்லது. தினமும் நீங்கள் அருந்தும் தேநீருக்குப் பதிலாக இந்த தமிழ் மருத்துவ தேநீரை அருந்துவது நிச்சயம் உதவி செய்யும்.
கொரோனா நீங்கும் தமிழ் மருத்துவ தேநீர் தயாரிக்க தேவையானவை
சுக்கு – 100 கிராம்,
அதிமதுரம் – 100 கிராம்,
சித்தரத்தை – 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம்,
ஓமம் – 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு – 5 கிராம்
மேற்கூறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவற்றை இடித்துப் பொடி செய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக் கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.
பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த மூலிகை தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.
இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.
இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.
இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.
கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
தகவல் உதவி : யோகி காகஜபூண்டர் கோபிநாத்