இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
சண்டே ஸ்பெஷல்.. என்ன செய்யலாம்?
சண்டே என்றாலே எப்பவும் ஸ்பெஷல் தான். வாரத்தின் 7 நாட்களில் அதிகமாக எதிர்ப்பார்ப்பது சண்டே எப்ப வரும்? என்று தான்.
சிலர் சண்டே அன்று நிறைய பிளான் போட்டு வைத்திருப்பார்கள். அதாவது வெளியில் செல்வது, உறவினர் வீட்டுக்கு செல்வது, ஷாப்பிங் செல்வது என பிளான் செய்து வைத்திருப்பார்கள்.
இன்னும் சிலர், சண்டே ஒருநாளாவது நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம் என முடிவு செய்து வைத்திருப்பார்கள்.
இது எல்லாம் சரிதான். ஆனால், சண்டே அன்று செய்யும் சில செயல்கள் அடுத்து வரும் நாட்களை வெற்றிகரமாக தொடங்க எளிதாக இருக்கும்.
கடந்த வார சோம்பல்களில் இருந்து விடுபடவும், அடுத்த வார வேலைக்கு தயாராகவும் என்ன செய்யலாம்?
அதிக தூக்கம் வேண்டாம்
சண்டே ஒருநாள் தான் ஓய்வு என்பதற்காக பாதி நாளை தூக்கத்திலியே கழித்து விடாதீர்கள். சனிக்கிழமை இரவு எப்போதும் போல சீக்கிரம் உறங்க செல்லுங்கள். சண்டே கொஞ்சம் தாமதமாக எழுந்தால் உங்கள் நாளை மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் செலவழிக்கலாம். தூக்கம் என்பது அவசியம். அதற்காக அந்நாளில் பாதியை தூக்கத்தில் கழிக்க வேண்டாமே!!
பிரிட்ஜை சுத்தப்படுத்தலாம்
சென்ற வாரம் வாங்கிய பால், காய்கறி முதல் பழங்கள் வரை அனைத்தும் பிரிட்ஜை அடைத்து கொண்டிருக்கும். சண்டே காலையில் உங்கள் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு பிரிட்ஜை சுத்தம் செய்யலாம். இது உங்கள் ஆரோக்கியத்தையும் காக்கும்.
பர்ஸ் மற்றும் பேக்கை கவனியுங்கள்
வாரம் முழுவதும் பஸ் டிக்கெட், ஹோட்டல் பில், ஏடிஎம் ரெசிப்ட் என பல தேவையில்லாத பொருட்களை உங்கள் பர்ஸில் அல்லது பேக்கில் சேர்த்து வைத்திருப்பீர்கள். தேவையில்லாத பொருட்களை தூக்கி எறிந்து உங்கள் பர்ஸையும், பேக்கையும் சுத்தம் செய்யலாம்.
மளிகை பொருட்கள் வாங்குங்கள்
வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை சண்டேவே வாங்கி வைத்து கொள்வது சிறந்தது. இல்லையெனில் அடிக்கடி கடைக்கு ஓட வேண்டியிருக்கும். இது வார நாட்களில் உங்களின் நேரத்தை மிச்சப்படுத்தும்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்
வார நாட்களில் பணிச்சுமை காரணமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் இருக்கலாம். சண்டேவை குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் நாளாக மாற்றிடுங்கள். அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள்.
வீட்டை சுத்தப்படுத்தலாம்
வார நாட்களில் செய்ய முடியாத வேலைகளை இந்நாளில் செய்யலாம். கபோர்டு, அலமாரி போன்ற இடங்களை பொறுமையுடன் எது தேவை? எது தேவையில்லை? என்பதை பார்த்து சுத்தம் செய்யலாம்.
வாகனத்தை கவனியுங்கள்
அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் செய்ய வாகனம் இன்றியமையாததாக உள்ளது. வார நாட்களில் வாகனத்துடன் பம்பரமாக சுற்றும் நாம், சண்டே அன்று வாகனத்தை பராமரிக்கலாமே.
அதாவது வாகனத்தில் தேவையில்லாத பொருட்கள் இருந்தால் அகற்றலாம், பிரேக், டயர் போன்றவற்றை சரி பார்க்கலாம், வாகனத்தை துணியை கொண்டு சுத்தம் செய்யலாம். இது அடுத்த வரும் நாட்களில் வாகனத்தில் செல்ல ஏதுவாக இருக்கும்.