ஒரு மனிதனுக்கு தோன்றும் எண்ணங்களுக்கு வரையறை என்பதே கிடையாது ஒரு சிலர் தனக்குள் இருக்கும் கனவுகளையே எண்ணங்களாய் மாற்றுகின்றனர்.
எண்ணங்கள் வேறுபட்டவை ஒவ்வொரு மனிதனுக்கும் புதுப்புது எண்ணங்களும் வேறுபட்ட எண்ணங்களுமே மேலும் எழும். எண்ணங்களில் நேர்மறையான எண்ணங்கள் எழுவது உண்டு இதற்கு நிகர்மாற்றான எண்ணங்களும் எழுவதுண்டு
அதாவது எதிர்மறையான எண்ணங்கள் நேர்மறையான எண்ணங்கள் பலமான வலயம் போன்றது நேர்மறையான சிந்தனையாளர்களிடம் நல்ல சிந்தனைகளும் குறிக்கோள்களும் அவர்களை சுற்றிக்கொண்டிருக்கும். அதாவது positive vibes அவர்களை சுற்றி இருக்கும்.
என்னால் முடியாது வெற்றி கிடைக்காது என்றெல்லாம் தானே கணக்குப் போட்டு எண்ணிக்கொள்ளும் எதிர்மறையான சிந்தனையாளர்களுக்கு தொட்டதெல்லாம் தோல்வி தான்.
அவர்கள் எண்ணங்களினாலேயே ஆளையே அஞ்சி வாழ்வர் ஆகவே எப்போதும் நேர்மறையான எண்ணங்களை மட்டும் சிந்திக்க பழகுங்கள் நல்லதே நினைக்க நல்லதே நடக்கும் என்பது போல நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சில சமயம் உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியை நிர்ணயித்து விடும் எவனொருவன் தனிமையில் எதை சிந்திக்கிறானோ அதுதான் அவன் குணமாக இருக்கும் என்பது மனோதத்துவ இயலாலர்களின் கருத்து. அதிலும் கல்வி பயிலும் மாணவர்கள் இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தாங்கள் சிந்திக்கும் விதத்திலே தான் வெற்றி அடைகிறார்கள்.
ஒவ்வொரு எண்ணங்களும் வேறுபட்டவை ஒருவருக்கு எண்ணங்கள் மற்றவரின் எண்ணங்களிலிருந்து இருந்து வேறுபட்டவை தனித்துவமானவை அவையே அம் மனிதனின் முழு வாழ்க்கையையும் ஆட்கொண்டு விடுகிறது.
மனிதனின் சிந்தனை இடத்திற்கு தகுந்தவாறும் வயதிற்கு ஏற்றவாறும் மாறுகிறது சிந்தனைகள் பெரும்பாலும் இப்படி நடந்தால்? அல்லது இப்படி நடக்க வேண்டும் என்பன போன்றதாகவே இருக்கிறது.
ஒரு சிறுவன் சிந்தனை செய்யும் பொழுது அவனது சிந்தனைக்களம் மாறுபட்ட கற்பனைக் கோட்டையாகவே இருக்கும் காரணம் அவனுக்கு என்ன உலகம் என்னவென்று புரியாமல் இருக்கும்.
அவன் விரும்பிய விடயங்களே முழு உலகமாய் தோன்றும் ஆகையால் சிறுவனின் சிந்தனைகள் ஆனது கற்பனைக்கு எட்டாத ஒன்றை மையமாக வைத்து பறந்து விரிகிறது.
ஒரு கட்டிளமைப்பருவ மாணவன் சிந்திக்கும் பொழுது அவன் தனது படிப்பு தான் நாயகனாக நினைக்கும் மனிதர் தனது லட்சிய கனவு என தான் படித்த பாடங்கள் கதைகள், திரைப்படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிந்தனைகளை விரிவுபடுத்துகிறான்.
பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒருவன் கல்வி குறித்து குழப்பங்களுடன் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் எண்ணங்களைக் கொண்டு அவனது சிந்தனைகள் அமைகிறது கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு எதிர்காலம் என பயம் நிறைந்த சிந்தனைகளும் தன்னைச் சார்ந்தவர்கள் தனது பொறுப்புகள் குறித்த கவலைகளே அவன் சிந்தனையில் வெளிப்படுகிறது.
ஆகவே ஒவ்வொரு பருவமும் கடந்து செல்ல செல்ல எண்ணங்களும் புதிது புதிதாக பிறப்பெடுக்கின்றது பெரும்பாலும் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்படுவதும் பலியாவதும் கல்வி பயிலும் மாணவர்களும் இளைஞர்களும் கல்வி பயிலும் பருவத்தில் ஏற்படும் சிந்தனைகள் அலாதியானவை.
நமக்கு தற்போது எது தேவை? எதிர்காலத்திற்கு என்ன தேவை?
அவசரமும் அவசியமானது என்ன என்பது பற்றி ஒவ்வொரு மாணவனும் நிச்சயம் சிந்திக்கவேண்டும் தேவையற்ற தவறான சிந்தனைகள் அவ்வப்போது மகிழ்ச்சியை தந்தாலும் நிரந்தரமான மகிழ்வைத் தராது. சில சமயம் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும்.
ஆகவே உங்கள் சிந்தனைகள் செயல்பாடுகள் நடக்குமா நடந்தால் அது நல்ல பயன் தருமா அல்லது காலத்தையே வீணாக்குமா?என உங்களுக்குள்ளையே கேள்விகள் கேட்டு சிந்தனையில் தெளிவு கற்றுக்கொள்ளுங்கள்
படிக்கும்போதே எண்ணங்களை அலைபாய விடுவதாலும் தங்கள் சிந்தனைகளை கட்டுப்பாட்டில் வைக்காமையினாலுமே பாடத்தை படிக்கச் முடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
வீணான எண்ணங்களால் பொழுதுகள் கடந்து போகுமே தவிர தேவையான செயல்பாடுகள் நடைபெறாது தவறான சிந்தனையும் எண்ணங்களும் ஒரு மாணவனின் எதிர்காலத்தை சூறையாடும் வலிமை படைத்தது.
ஆகவே ஒரு கல்வி பயிலும் மாணவனின் சிந்தனைகள் எப்போதும் நல்லவிதமாக இருக்க வேண்டும் அதன் பயனாய் நிச்சயம் நன்மைகள் நிறைவாக கிடைக்கும்.
ஒரு சாதாரண மனிதன் சிந்திப்பதற்கு மாறாக ஆக்கபூர்வமான சிந்தனைகளைச் சுமப்பவர்கள் சமூகம் போற்றும் சாதனையாளர்களாகின்றனர். சாதனையாளராக வேண்டும் என்று சிந்திப்பவர்கள் நிச்சயம் வெற்றியாளர்கள் அவர்கள் தான் என்ன சாதித்தாலும் தனது லட்சியங்கள் இவற்றை அடைந்தால் அடையும் நிலை என அனைத்து விதமான செயல்பாடுகள் குறித்தும் சிந்திக்கின்றனர். இறுதியில் அவர்கள் வெற்றியையும் பெறுகின்றனர்.