கொரோனா வைரஸை தொட்டு விட்டு கையை நமது கண், மூக்கு அல்லது வாய் மீது வைத்தால் கொரோனா பரவும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்!!
கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் தும்மல் அல்லது இருமல் மூலம் வெளியாகும் நீர்த்துளிகள் நாம் சுவாசிக்கும் போது மூக்கின் வழியாக நம் உடலுக்கு சென்று விட்டாலோ அல்லது அந்த நீர்த்துளிகள் இருக்கும் இடத்தை கவனிக்காமல் தொட்டு விட்டு கையை நமது கண் மூக்கு அல்லது வாய் மீது வைத்தால் கொரோனா பரவும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நிபுணர்கள் நாம் அடிக்கடி நன்றாக கைகளை கழுவ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
மேலும் ஒவ்வொருவரிடமிருந்தும் இரண்டடிகள் தூரமாவது தள்ளி இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள் ஆனால் இது எதுவும் வேலைக்காகாமல் நமக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடலில் முதலில் என்ன நடக்கும் என்று நாங்கள் இப்பொழுது பார்க்க போகின்றோம்.
இது முதலில் நுரையீரலை பதம் பார்க்கும் வைரஸ் என்பதால் முதலில் இது தொண்டையை பாதிக்கும். இந்த வைரஸ் இனப்பெருக்கம் அடைய நம்முடைய உயிரணுக்களின் தொகுப்பு தேவை. ஆகவே நமது தொண்டை மூக்கு ஆகியவற்றில் உள்ள சளி சவ்வில் உள்ள உயிர் அணுக்களுடன் இணைகிறது அங்கு சென்றதும் சவ்வின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் புரதங்களை பயன்படுத்தி உயிரனுக்களின் சவ்வில் நுழைகிறது. ஒருமுறை உயிரணுக்கள் சென்ற பிறகு நிறைய வைரஸை உற்பத்தி செய்யுமாறு உயிரணுவுக்கு சொல்லும் கொஞ்ச நேரத்தில் பத்தாயிரம் முதல் ,ஒரு லட்சம் வரையிலான வைரஸ்கள் பிரதி எடுக்கப்படும் அங்கு வைரஸ் தனது வேலையை முடித்தவுடன் அந்த உயிரணுவை அழித்துவிட்டு அங்கு இருந்து வெளியேறி அருகில் இருக்கும் உயிரணுக்களை பாதிக்கத் தொடங்கும்.
வைரஸ் இருப்பதை நமது உடல் உணர்ந்துவிட்டால் அதன் பின்னர் எதிர் வினையாக அலர்ஜியை ஏற்படுத்தி அந்த வைரஸை எதிர்த்துப் போராட முயற்சி செய்யும். இதனால் தொண்டையில் வலி அல்லது அலர்ஜி போன்ற அசௌகரியத்தை உணர்வோம் அங்கிருந்து வைரஸ் மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்லும் இதனால் மூச்சு குழாய்களில் உள்ள சளி சவ்வுகளில் அலர்ஜி ஏற்பட தொடங்கும். இதனால் இப்பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு நாம் இருமத் தொடங்குவோம் நாம் இரும்ம ஆரம்பித்தவுடன் உடல் வைரஸை எதிர்த்து வேகமாக போராட தொடங்குவதால் அலர்ஜி தீவிரமாகும்.
இதன் விளைவாக காய்ச்சல் ஏற்பட தொடங்கும். இந்த நேரம் தான் நமது உடல் நலமாக இல்லை என்று நாம் உணர தொடங்குவோம் பசி குறையும் இங்கு நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனம் சொல்வதன் படி கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 80% சதவீத மானவர்களுக்கு காய்ச்சல் இருமல் சிலபேருக்கு நியூமோனியா என மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன. 14% வீதமானவர்களுக்கு மூச்சு விடுதலில் அதிக சிரமம் ஏற்படுகிறது 6% சதவீத மானவர்களுக்கு நுரையீரல் செயல் இழப்பு மற்றம் மற்ற சில உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை ஏற்படுகின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்களுக்கு எந்த வித சிறப்பு சிகிச்சையும் தேவைபடுவதில்லை ஓய்வெடுப்பது போதுமான அளவு நீர் ஆகாரங்களை உட்கொள்வது பெரசிடமோல் ஆகியவே போதுமானது.
ஆனால் மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு வைரஸ் செல்லும் போது நிலைமை மோசமாகும் ஏனெனில் அலர்ஜி ஏற்படும் இதை தான் உயிரணு நியுமோனியா என்று அழைக்கிறோம். இங்கே பிரச்சினை வெறும் வைரஸ் பாதிப்பு மட்டுமல்ல நமது உடல் அது காட்டும் எதிர்வினையும் தான் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது உயிரணுரக்களை வைரஸ் கடுமையாக பாதிப்பதை தடுக்க நமது உடலில் சற்று தீவிரமான ரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஒருவேளை நியுமோனியா எனில் நமது நுரையீரல் அமைப்பின் மிக முக்கியமான பகுதியான அல்வியோலி வில் உள்ள சிறிய காற்று பாதையில் நெரிசலை உண்டாக்குகிறது இந்த பகுதி மிக முக்கியமானது ஏனெனில் இங்கே தான் வாயு பரிமாற்றம் நடக்கிறது. இங்கே தான் ஆக்சிஜன் நுரையீரலுக்கு செல்வதும் கார்பனீராக்சைடு வெளியேற்றப்படுவதும் இங்கே தான் நடக்கிறது.
ஒருவேளை அல்வியோலி பகுதியில் வைரஸ் தொற்றால் சீழ் உண்டாகி இறந்த உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமானால் இயக்கம் தடைபட்டு நமது நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் சரி வர கிடைக்காது. இதனால் நுரையீரல் செயலிழப்பு ஏற்படும் இதன் விளைவாக இதயத்துக்கு ரத்தஓட்டம் வாயிலாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய் அதன் செயல்பாடும் முடங்கி போகும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போதுஅந்த நோயாளி நிச்சியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வென்டிலேட்டர் வைக்க நிலை நேரிடும்.
ஒரு நிபுணர் சொல்லுகிறார் நமது உடல் வைரஸ்க்கு எதிராக போரிடும் அலர்ஜியை ஒரு போருடன் ஒப்பிடுகிறார். அதாவது இரு எதிரிகள் கடுமையாக சண்டை இட்டு கொள்வது போல தான். ஆனால் போரின் போது சில சயங்களில் எதிரியின் மீது குண்டு விழாமல் பொது மக்கள் மீதோ மருத்துமனை மீதோ அருங்காட்சியகம் மீதோ விழ நேரிடலாம். வேறு விதமாக சொல்வதானால் வைரஸ்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பதிலடி கடுமையாக இருக்கும் இதனால் வைரஸ் இருக்கும் பகுதிகளில் உள்ள திசுக்களையும் அது சேதமாக்கலாம். இதன் விளைவாக உடலின் மற்ற உறுப்புகள் உதாரணமாக சிறுநீரகம் ,கல்லீரல் ,போன்ற உறுப்புகள் பாதிப்படைய நேரிடலாம் .பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் மரணத்துக்கு வழிவகுக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றை நாம் நேரடியாக வெல்ல எந்த ஆயுதமும் இதுவரை நம்மிடம் இல்லை ஆனால் அரசும் ,மருத்துவர்களும்,உலக சுகாதார நிறுவனமும் சொல்வதை கடைபிடித்தால் பாதிப்பை தவிர்க்கலாம் அலல்து பாதிப்பை குறைக்க முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டும் உலகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேல் குணமடைந்து உள்ளார்கள் என்று நினைவில் வையுங்கள். எனவே பயம் தேவை இல்லை முன்னெச்சரிகையுடன் இருப்போம்.
இது போன்ற சுவாரசியமான சுகாதார தகவல்களை அறிய இங்கே செல்லவும்