சில பொருட்களை எங்கும் போய் இரவலாக கேட்கவும் வேண்டாம் நீங்களும் யாருக்கும் இரவலாக கொடுக்கவும் வேண்டாம்!!
முன்பு எல்லாம் நம் பெரியவர்கள் சொல்லி கொடுத்து இருப்பார்கள் சில பொருட்களை பக்கத்து வீடுகளில் இருந்து இரவலாக கேட்கவும் கூடாது நாமும் இன்னொருவருக்கு இரவலாக கொடுக்கவும் கூடாது என்று, முடியுமான அளவு நம்மிடம் இருப்பதை கொண்டு சிறப்புற வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த 20ம் நூற்றாண்டில் இன்னமும் இவ்வாறான மூட நம்பிக்கைகளை கடைபிடிப்பதா என நீங்கள் நினைக்கக்க கூடும் ஆயினும் சற்று சிந்தித்துப் பார்போமேயானால் அந்த காலத்தில் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வும் அவர்கள் பெற்ற இன்பமும் நமக்கு இன்றில்லை என்றால் அதில் ஒன்றும் தவறில்லை. இயந்திர மயமான வாழ்க்கை பணம் பின்னே ஓட்டம் என செல்கிறது இந்த நிலைக்கு காரணம் கூட நம் முன்னோர்கள் விட்டு சென்ற மரபுகளை மறந்ததாகவும் இருக்கலாம் எனவே கொஞ்சம் அறியாதவற்றை அறிந்து கொள்வோமே!
அப்படி என்ன பொருட்கள் என்று ஆவலாய் உள்ளீர்களா? வாருங்கள் பார்ப்போம்!
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு, வேலை விட்டு வீடு வந்த பிறகு அல்லது விடியற் காலையில் வேலைக்கு அல்லது வேறு அலுவல்களுக்கு வெளியே செல்லும் போதும் பணம், உப்பு, முட்டை, உடுப்பு துணி, சுண்ணாம்பு, சர்க்கரை, பால், தயிர், இது போன்ற பொருட்களை இரவல் கொடுப்பதை தவிர்க்கவும்.
சரி இப்படி வந்து கடன் கேட்டால் என்ன செய்வது ஒரு பக்கம் கோபம் ஒரு பக்கம் பாவம் ஒரு சிலர் செய்வது அறியாமல் பாவம் என்று பார்த்து அவர்கள் கேட்பதை எப்படி சரி கொடுத்து விடுவார்கள். ஆனாலும் அந்த மாதிரி நேரத்தில் சில பொருட்களை நாம் தவிர்த்தல் நல்லது. இது முன் காலத்தில் இருந்து கடை பிடித்து வருகின்றது.
சிலர் அடுத்தவர்கள் வீட்டிலிருக்கும் ஐஸ்வர்யம் தனக்கு வரவேண்டும் என்று தெரிந்தே, இது வேண்டும்! அது வேண்டும்! என்று விளக்கு வைத்த சமயத்தில் அடுத்தவர் வீட்டுக்குப் போய் கேட்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வீட்டிலிருந்து எதையுமே கொடுக்க மாட்டார்கள். இப்படி இருக்க, நாம் மட்டும் ஏன் நம் வீட்டு ஐஸ்வர்யத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். சற்று யோசித்து பாருங்கள்!
முன்பு நமது முன்னோர்கள் அதாவது அந்தக் காலத்திலேயே இந்த விடயங்களை எல்லாம் நமக்கு சொல்லி கொடுத்து உள்ளார்கள் நம் ஆச்சிமார்கள் எங்களுக்கு அதை எடுத்து சொல்லி இருப்பார்கள் வீட்டில் அதாவது விளக்கு ஏற்றிய பின் இந்த பொருட்களை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று. ஆனால் இது எல்லாம் காலப்போக்கில் நம்மவர்கள் மறந்து விட்டார்கள் கேட்டால் மூட நம்பிக்கையாம்.
ஆனால், கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம்முடைய இந்த மாதிரியான சில விடயங்கள் ஒவொன்றும் மறந்து போக எங்களுக்கு பிரச்னை வந்து கொண்டே இருக்கும் அவர்கள் சொல்லி கொடுத்த சில விடயங்கள் சிலநேரம் சரியாகத்தான் இருக்குமோ! என்று எங்களை யோசிக்க வைக்கிறது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை செய்யலாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை செய்ய வேண்டாம்.
இதையும் படிக்கலாமே செல்வம் அதிகரிக்க… வீட்டில் மறக்காமல் இதை செய்ய வேண்டும் !!
இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
image source:https://www.vox.com/the-highlight/2020/2/12/21075683/trans-coming-out-cost-of-womanhood-pink-tax